Skip to Content

05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. அத்திப் பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
    • ஆணவத்தை ஆராய்ந்தால் அத்தனையும் அழிவுக்குரியவை.
  2. ஆயிரம் காக்கைக்கோர் கல்.
    • ஆயிரம் பிரச்சினைக்கு ஒரு சமர்ப்பணம்.
  3. குரங்கின்கை கொள்ளி கொடுத்துவிடல்.
    • அகந்தைக்கு அருளைப் பெற்றுத் தருதல்.
  4. நாய் வால் திருந்துதல் என்றுமே இல்.
    • கர்மத்தை அழிக்கும் சமர்ப்பணம் நாய் வாலையும் நிமிர்த்தும்.

    நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது வழக்கிலுள்ள பழமொழி. (நாய் வால் போல் நிமிராத பிரச்சினைகள் ஆழ்ந்த பிரார்த்தனையால் தீர்வது அன்பர் அனுபவம். நாய் வால் மீது மனத்தை தியானத்தில் நிறுத்தி (concentrate) லயித்தால், லயம் நீடிக்கும் வரை வால் நிமிர்வதைக் காணலாம். இந்த சக்தியையறிய இது போன்ற சோதனைகளை ஒரு முறை செய்யலாம். இரண்டாம் முறை செய்ய அனுமதியில்லை).

  5. தாய் மிதித்து ஆகா முடம்.

    கோழி மிதித்து குஞ்சு சாகாது என்பது வழக்கிலுள்ள பழமொழி.

    • அன்பர் செய்யும் தவறு அவரையும் பாதிக்காது, எவரையும் பாதிக்காது.

தொடரும்....

******



book | by Dr. Radut