Skip to Content

06.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                                                                          (சென்ற இதழின் தொடர்ச்சி....)

பார்ட்னர் : அவை பலித்தனவா?

மனைவி : எல்லாம் பலித்தவையே. பலிக்கும் அளவு எண்ணத்தின் தீவிரத்தைப் பொருத்தது.

பார்ட்னர் : சமர்ப்பணம் கொடுத்த உச்சகட்ட நல்லதுண்டு என்றால் நான் அறியப் பிரியப்படுகிறேன்.

மனைவி : அதற்கு சமர்ப்பணம் காரியத்தை நினைக்கக்கூடாது.

பார்ட்னர் : அதை, சற்று சொல்லவும்.

மனைவி : அது தத்துவம்.

பார்ட்னர் : அதுதான் எனக்கு வேண்டும்.

மனைவி : நாம் அன்னையைவிட்டு அகன்றிருப்பதால் நாம் அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறோம். அன்னையை மனத்தில் பிரதிஷ்டை செய்திருந்தால் - நாம் அவருக்குச் சரணடைந்திருந்தால் - சமர்ப்பணம் தேவைப்படாது. தானே செயல்கள் சமர்ப்பணமாகும். அதற்குரிய உச்சகட்டப் பலனை வாழ்வில் காணமுடியாது. அது மௌனம், சாந்தி, ஜோதியாகவும், பிரம்மமாகவும், அனந்தம், ஆனந்தமாகவுமிருக்கும். அது எல்லா அன்பர்களுடைய அனுபவத்திற்கும் பின்னணியில் இருந்தாலும், தெரிவதில்லை.

பார்ட்னர் : நான் எதைச் செய்தால் சிறப்பு?

மனைவி : புதிய தொழிலை அன்னை முறைப்படிச் செய்வது சமர்ப்பணம், சரணாகதியாவதாகும். சொந்த வாழ்வில் நினைவு வழிபாடாவது நல்லது.

மைத்துனர்: நான் இதுவரை அன்னையை அறியவில்லை. நீங்கள் பேசும்பொழுது மனம் நீங்கள் கூறுவனவற்றையெல்லாம் சற்று உணர்கிறது.

மனைவி : நீங்கள் அவற்றையெல்லாம் கவனிக்கவில்லை. வாழ்க்கைப் பலனான மெடிகல் அட்மிஷன் வந்தது. அதையும் கவனிக்கவில்லை.

பார்ட்னர் : கவனிப்பது அவசியமா?

மனைவி : கவனிக்காமலிருந்தால் தொடர்ந்து நடக்கும், கவனித்தால் நின்றுவிடும். அலட்சியமாகக் கவனிக்காமலிருந்தால் பலன் ஏற்படாது. மனம் அன்னையில் ஈடுபட்டு நெஞ்சு நிறைந்து, ஏற்படும் பலன்களைப் பலனெனக் கருதி கவனிக்காமலிருந்தால் தொடர்ந்து நடக்கும்.

கணவர் : நீ சொல்வது பிரார்த்தனை செய்தால் பலிக்கும், மனம் மாறினால் அதிகம் பலிக்கும்,தீவிரமானால் மேலும் பலிக்கும், ஆதாயத்தை நாடாவிட்டால் பலன் உள்ளே வரும், அமைதியை நாடினால் பலன் உள்ளும் புறமும் வரும் என்பதா?

பார்ட்னர் :(ஒரே சமயத்தில்) இது நல்ல சுருக்கமாகும்.

மைத்துனர்

மனைவி

கணவர் : எனக்கென்ன உபதேசம் செய்வாய்?

மனைவி : நான் உபதேசம் செய்யக் கூடாது. உங்களுக்கு நான் எதுவும் சொல்லக் கூடாது என்பதே எனக்குரிய சட்டம்.

பார்ட்னர் : நான் மீண்டும் வருகிறேன்.

மைத்துனர்: நானும் அவருடன் வருகிறேன்.

ஒரு மாதம் கழித்து பார்ட்னரும், அவர் மைத்துனரும் கணவருடன் வந்தனர். அவர்கள் கண்டன ஏராளம், பெற்றவை பல, அனுபவித்து ஆனந்தப்பட்டவை எண்ணிலடங்கா. தொட்டனவெல்லாம் வெற்றி. நினைவுக்கெட்டாத அனுபவங்கள் ஏராளம். கேட்கவேண்டிய கேள்விகள் ஆயிரம். பார்ட்னரும், மைத்துனரும் புதுப்பிறவிகளாகக் காட்சியளித்தனர். கணவர் முகம் அப்படியில்லை. பெண்ணும், பிள்ளைகளும் கலந்துகொண்டனர். வந்தவர்கள் பேசப் பேச, பிள்ளைகள், "ஏம்மா, நமக்கு இப்படியெல்லாம் நடக்கவில்லை?'' என்றனர். அதைப் பலமுறை கேட்டனர். அதே கேள்வி கணவர் மனத்திலும் இருந்ததால் அவருக்கு எரிச்சலும், கோபமும் ஏராளம்.

மைத்துனர்: எத்தனை வருஷமாக எனக்கு அன்னையைத் தெரியும்? நான் இதுவரை அன்னை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவில்லையே.

பார்ட்னர் : எதற்கும் நேரம் வரவேண்டாமா?

பெண் : எங்க அம்மா வேண்டாம் என்பார்.

மைத்துனர்: அது என்ன?

தாயார் : எதற்கும் நேரம் வரும்வரை காத்திருக்கவேண்டும் என்பது நம் மரபு. நம் மனம் தயாரானால் நேரம் வரும் என்பது அன்னை. நேரத்தை வரவழைக்கலாம் என்பது அன்னை.

பார்ட்னர் : கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள்.

தாயார் : இராமபிரான் வந்து அவர் பாதம் பட்டால் அகல்யா சாபம் தீரும் என்பது கதை. கல்லான அகல்யா, இராமனுக்காகக் காத்திருக்கிறாள். இது கர்மம். அது கரைய நேரம் தேவை. அது விதிக்கப்பட்டது.

மைத்துனர்: அதை மாற்ற முடியுமா?

தாயார் : காலத்திற்குக் கட்டுப்பட்டவரால் காலத்தை மாற்ற முடியாது.

பார்ட்னர் : காலத்திற்குக் கட்டுப்படாத மனிதன் உண்டா?

தாயார் : ஆத்மாவை அறிந்தவனுக்கு அது இல்லை. காலம் அவனுக்குக் கட்டுப்படும். அவன் நேரத்தை வரவழைக்க முடியும்.

பார்ட்னர் : எங்கள் பாக்டரியைத் திறக்க இன்னும் 6 மாதமாகும். கட்டடம் கட்டவேண்டும். நேற்று எஸ்டேட் மானேஜர் அங்குக் கட்டடம் தயாராக இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். காலத்திற்காக நாங்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. இது எப்படி?

தாயார் : அன்னை காலத்தைக் கடந்தவர். நம் மனம் காலத்திற்குட்பட்டது. அன்னையை ஏற்றவுடன் மனம் காலத்தின் பிடியினின்று வெளிவந்தது. எஸ்டேட் கட்டடம் வருகிறது. இதுவே நாம் காலத்தைக் கடப்பது, நேரத்தை வரவழைப்பதாகும்.

மைத்துனர்: நான் ஏற்கனவே அன்னையை அறிந்தது கணக்கில்லையா?

பார்ட்னர் : அறிவது வேறு, ஏற்றுக்கொள்வது வேறா?

தாயார் : அன்னையை அறிந்தது முதல் உங்கள் ஜாதகத்தைப் பார்த்தால் தெரியும்.

பார்ட்னர் : சொற்பொழிவில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்றாரே.

தாயார் : ஜாதகத்தை நம்பக் கூடாது. பார்ப்பது நல்லதன்று. அன்னையை அறிந்த இந்தப் பல வருஷங்களில் ஜாதகத்தில் கூறிய தவறுகள் நடந்திருக்காது. அதில்

இல்லாத நல்லவை நடந்திருக்கும்.

மைத்துனர்: எங்கள் பாட்டி அடிக்கடி சொல்வாங்க, அவருக்கு என் ஜாதகம் மனப்பாடம், "இதெல்லாம் ஜாதகத்தில் இல்லையே'' என்று.

பார்ட்னர் : எனக்கு, பாக்டரிக்கு மானேஜரிலிருந்து வாட்ச்மேன் வரை நியமிக்க வேண்டும், என்ன செய்ய?

தாயார் : செய்ய வேண்டியவற்றை எல்லாம் - விளம்பரம், இன்டர்வியூ - தவறாது செய்யுங்கள். மற்றவர்கள் போலில்லாமல், அன்னை முறைப்படி செய்யுங்கள்.

மைத்துனர்: நேர்மையாகச் செய்ய வேண்டுமா?

பார்ட்னர் : அன்னையை நினைத்துச் செய்ய வேண்டும்.

கணவர் : என் மானேஜர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். தமது மைத்துனருக்கு நம் தொழில் நல்ல பெயர். அவரை நியமிக்க முடியுமா எனக் கேட்டார்.

பார்ட்னர் : அவரைப் பற்றித்தான் போனில் பேசினீர்களா? இத்தொழில் நாட்டில் முதன்மையானவராயிற்றே. தேடிப்போனாலும் கிடைக்கமாட்டாரே.

கணவர் : என் மானேஜர் என்ன சொன்னார் தெரியுமா? சம்பளம் சற்றுக் குறைவாயிருந்தாலும் பரவாயில்லை. அவர் குடும்பத்தார் அனைவரும் இங்கிருப்பதால் அவர் இங்கு வேலை தேடுகிறாராம்.

மைத்துனர்: எல்லாம் அன்னை செயல்.

சிறியவன் : Mother's Grace..

கணவர் : Mother's Grace என் மூலமாக வருவதில் எனக்கு சந்தோஷம்.

பார்ட்னர் : என்னைப் பொருத்தவரை உங்கள் கணவர்தான் எனக்கு grace.

கணவர் : நீங்கள் எனக்குச் செய்தது பெரியது.

மைத்துனர்: நீங்கள் பெரியவர் அல்லவா? அம்மா, Recruitmentஐப் பற்றிச் சொல்லுங்கள்.தாயார் : நினைவு அங்கிருக்கும்வரை எல்லா postக்கும் நல்ல ஆட்கள் தானே அமையும்.

பார்ட்னர் : பணத்தைவிட ஆட்கள் முக்கியமாக இருக்கின்றனர்.

கணவர் : அதுதான் உங்களுக்குக் கவலை.

தாயார் : கவலைதான் கவலையைக் கொண்டுவரும். கவலையைவிட்டு அன்னையை ஏற்கவேண்டும். பார்ட்னரும், மைத்துனரும் போனபின் வீட்டினர் கலந்து பேசினார்கள்.

கணவர் : ஏண்டா, உன் கிண்டலெல்லாம் - Mother's Grace - பார்ட்னரிடம் காட்டலாமா?

பெரியவன்: அவன் என்னைக் கேலிசெய்கிறான்.

பெண் : அம்மா, உடனே அதைக் கண்டியுங்கள்.

கணவர் : கண்டிப்பதா, இனி அப்படிப் பேசினால் தோலை உரித்துவிடுவேன்.

பிள்ளைகளும், கணவரும் போனபின் பெண்ணும் தாயாரும் பேசிக்கொள்கின்றனர்.

பெண் : நீங்க தம்பிக்குச் சொல்லணும்.

தாயார் : அப்பா, இப்படிப் பேசுவதும், தம்பி அப்படிப் பேசுவதும் ஒன்றே.

பெண் : என்ன செய்வது?

தாயார் : மதர்கிட்டே சொல்வது தவிர வேறு வழியில்லை.

அவர்கள் அனைவரும் போனபின் பெண் தாயாரை ஏன் நம் வீட்டில் அன்னை அவர்கள் வீட்டில் செயல்படுவதுபோல் செயல்படுவதில்லை எனக் கேட்டாள். அன்னைக்குரியது higher consciousness உயர்ந்த பண்புள்ள வாழ்வு. நம் வீடு அதற்கெதிரானது. அதனால் அன்னையின் அருள் நம் வீட்டுச் சூழலில் potential வித்தாக வந்து தங்கிவிடும். பலன் தாராது என்று தாயார் கூறினார்.

பெண் : Low consciousness தாழ்ந்த பண்பு என எதைக் கூறுகிறீர்கள்?

தாயார் : போட்டி, பொறாமை, விட்டுக்கொடுக்காதது, பிறர் விஷயத்தை அறிய முயல்வது, குறுக்கே பேசுவது, சிறு விஷயங்களில் உள்ளம் மலர்வது, அழுக்கு, ஒழுங்கீனம்,கோள் சொல்வது ஆகியவை. இத்தனையும் பொய்யிலிருந்து வருகின்றன.

பெண் : கிண்டல், கேலி, மனம் புண்படும்படிப் பேசுவது, சின்ன புத்தி அதில் சேருமா?

தாயார் : கொடுமை, கடுமை, அதன்மீது பாசத்தால் உறவு அனைத்தும் இதைச் சேர்ந்தவையே.

பெண் : நம் வீட்டில் பெரும்பாலும் இவை ராஜ்யம் நடத்துகின்றன. நாமென்ன அவ்வளவு மட்டமான குடும்பமா?

தாயார் : நாம் மட்டமானவர்கள் என்று அறியமுடியாத அளவுக்கு நாம் மட்டம்.

பெண் : விளக்கமாகச் சொல்லுங்களேன்.

தாயார் : பெரியவன் தம்பியைப் புண்படும்படிப் பேசுவான். திரும்ப தம்பி அதுபோல் பேசினால் தவறு என்பான். தான் பிறர்க்கு உரிமையுடன் செய்வதை, பிறர் நமக்குச்

செய்வது அநியாயம் என்பது மட்டமான மனிதர் எண்ணம்.

பெண் : இதை விட்டு வெளிவர நமக்கு வழியேயில்லையா?

தாயார் : இருக்கிறது. நாம் செயல்படுத்த முடியாது.

பெண் : என்ன?

தாயார் : நம் நிலையை அறிந்து வெட்கப்பட வேண்டும்.

பெண் : நாம் பெருமைப்படுகிறோம்.

தாயார் : பிரச்சினை அதுவே. எதற்கு வெட்கப்படவேண்டுமோ அதற்குப் பெருமைப்படுபவன் மட்டமானவன். அவனுக்கு வழியில்லை.

பெண் : பார்ட்னரைப் பார்த்து நாம் திருந்திக்கொள்ளக் கூடாதா?

தாயார் : பார்ட்னர் அப்பாவை அன்பர் என்பதால், போற்றுவதால் நாம் எப்படித் திருந்த முடியும்?

பெண் : எனக்குச் சொல்லுங்கள்.

தாயார் : நம் செயல் automatic தானே நடக்கிறது. அறிவுக்குக் காத்திருப்பதில்லை. சமர்ப்பணம் ஆரம்பித்தால் ஓரளவு கட்டுப்படும். ஆழ்ந்து போனால் சமர்ப்பணம் எடுபடாது.நம் மனத்தின் ஆழம் (sensibility) எது என நாம் அறிவோம். அங்கு சமர்ப்பணம் பத்தால்

வாழ்வு கட்டுப்படும்.

பெண் : தீவிரமான ஆசைகளுக்கு இடம் தரக்கூடாது என்கிறீர்களா?

தாயார் : அது ஆரம்பம். அடுத்தது ஆசை. அடுத்தது urges.வேகம். அங்கு மனம், உயிர், உடலென கீழே போகப் போக ஆசையோ, வேகமோ கட்டுப்படாது. கட்டுப்படுவது சமர்ப்பணம்.

பெண் : அந்த ஆசைகள் ஜெயிப்பதே இலட்சியமாக இருக்கிறது இப்பொழுது. எனக்கு அதுபோல் ஆசை எழுந்தால் அடக்க முடியாது.

தாயார் : உயிர் நாடியான இடம் அதுவே. நாம் பெற்ற நாகரீகம் அதுபோன்ற ஆசைகளை வென்றதால்தானே.

பெண் : அதைப் பூர்த்தி செய்வது சமர்ப்பணம் பூர்த்தியாவதா?

தாயார் : ஆசை அழிந்தபின் அகந்தையிருக்கும். அது வேகமாக urgesசெயல்படும். அகந்தையைக் கட்டுப்படுத்துவது யோகம்.

பெண் : ஆசைக்கு உயிர் கொடுப்பது அகந்தையல்லவா? நான் என்ன செய்யலாம்?

தாயார் : அண்ணன், தம்பி பேசுவது எரிச்சலை உண்டு- பண்ணினால் உனக்கு அது ஆழத்தில் இருக்கிறது எனப் பெயர்.

பெண் : இவர்கள் செய்யும் அட்டூழியம் உண்டுபண்ணாமலிருக்க முடியுமா?

தாயார் : எரிச்சல் என்பது ஆழத்தில் நாம் அவர்களைப் போலிருக்கிறோம் என்பது.

பெண் : உங்களுக்கு, கோபம், எரிச்சல் வந்து நான் பார்த்ததில்லையே?

தாயார் : அளவுகடந்து வரும். அடக்கிக்கொள்வேன். வரும்வரை நாமும் அவர்கள் போலிருக்கிறோம்.

பெண் : அவர்கட்குப் புரிந்து மாற வழியில்லையா?

தாயார் : வெட்கம் எழுவது முதல் கட்டம். அல்லது நஷ்டம் வந்தால் யோசனை செய்வார்கள்.

பெண் : அமெரிக்காவில் credit card payment யாரும் தவறுவதில்லை. தவறினால் credit கிடைக்காது.

தாயார் : அதுபோல பெரிய இலாபமிருந்தால், தங்கள் நடத்தையால் அந்த இலாபத்தை இழக்கக்கூடாது என்றால், இவர்கள் மாறுவார்கள்.

இலாபத்திற்காக மாறுபவர் - உடலால் வாழ்பவர் - physical

வெட்கத்திற்காக மாறுபவர் - உயிரால் வாழ்பவர் - vital

தெளிவுக்காக மாறுபவர் - அறிவால் வாழ்பவர் - -mental

பெண் : அன்னை பக்தராகி அவருக்காக மாறலாமே.

தாயார் : மாறலாம்.

பெண் : நாம் எதுவும் செய்ய முடியாதா?

தாயார் : குறைப்படாமலிருக்கலாம். சொல்லித் திருத்தலாம் என நம்பாமலிருக்கலாம்.

பெண் : சொல்லித் திருத்த முடியாதா?

தாயார் : சொன்னால் பதில் வரும். வற்புறுத்திச் சொன்னால் குதர்க்கமான பதில் வரும்.

பெண் : சொன்னால் கெட்டுப் போகுமா?

தாயார் : சொல்லாமலிருக்க கட்டுப்பாடும், நினைக்காமலிருக்க பக்குவமும் வேண்டும்.

பெண் : நான் என்ன செய்ய?

தாயார் : எரிச்சல் வரும் பொழுது அன்னையிடம் மட்டும் சொல்.

பெண் : சொன்னால்?

தாயார் : எரிச்சல் வாராது.

பெண் : காரியம் நடக்குமா?

தாயார் : எரிச்சல் உற்பத்தியாகாமல் சந்தோஷம் எழுந்தால் காரியம் கூடிவரும்.

பக்கத்து வீட்டு அம்மாள் வந்தார். தம் கணவர் வெளிநாடு போவதாகச் சொன்னார். போனால் சம்பளம் பல மடங்கு மாறும் என்றார். அவர் மட்டும் போவதாகவும், தாம் போகவில்லை எனவும் சொன்னார். இவர்கட்கு பாக்டரி வந்துள்ள விஷயமோ, கார் வரப்போகிறது என்றோ பக்கத்து வீட்டிற்கு இன்னும் தெரியாது. நமக்கு வரும் அருளின் சாயல் பக்கத்து வீட்டிலும் தெரிகிறது என்று இவர் நினைத்தார். நம் விஷயம் தெரியாததால் பொறாமை எழ வழியில்லை. அதனால் அருள் செயல்படுவதாகவும் கருதினார். தம் கணவர் வெளிநாடு போனால் சீக்கிரம் கார் வாங்கிவிடுவோம் என, பக்கத்து வீட்டு அம்மா உற்சாகமாகப் பேசினார். கணவரிடமிருந்து தாமும் பார்ட்னரும் வருவதாகப் போன் வந்தது. கணவர் பார்ட்னருடன் பேசினாராம், ஏதோ முக்கியமான விஷயமாம். பதட்டமாகப் பேசினார். இருவரும் வருவதற்குள் பக்கத்து வீட்டு அம்மாள் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார். கணவர் பேயறைந்த முகத்துடனும், பார்ட்னர் கலகலப்பாகச் சிரித்துக்கொண்டும் வந்தனர். பெண் காபி கொடுத்தாள். கணவர் காப்பியைத் தொடவில்லை. பார்ட்னர் காப்பியைச் சாப்பிட்டுக்கொண்டே பேசினார். பெண்ணை விசாரித்தார்.

பார்ட்னர் : இன்று காலையில் காலேஜில் ஏதாவது விசேஷமுண்டா?

பெண் : ஒன்றும் குறிப்பாக இல்லை.

பார்ட்னர் கணவரைக் காப்பி சாப்பிடச் சொன்னார். கணவருக்குக் கை ஓடவில்லை.

பார்ட்னர் : அம்மா, ஒரு முக்கியமான விஷயம் தவறாகப் போய்விட்டது. அதனால் கம்பெனியில் அனைவரும் கலவரமுற்றுள்ளனர். நானும் அப்படித்தான் இருக்கிறேன்.

தாயார் : உங்களைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே?

கணவர் காப்பியைச் சிறிது சாப்பிட்டுவிட்டு வைத்துவிட்டார்.

கணவர் : எனக்குச் சேதி கேட்டதிலிருந்து வயிற்றைக் கலக்குகிறது. நீங்கள் காலேஜில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்கள்.

பார்ட்னர் : மீதி காப்பியையும் சாப்பிட்டுவிட்டால் பிரச்சினை தீரும். ஒரு சிறப்பான தொழிலாளியை அதிக அனுபவம் உள்ளவனென்று வேலைக்கு வைத்தோம். கம்பீரமாக இருக்கிறான், தன்மையாகப் பேசுகிறான். நாங்கள் எல்லோரும் பிரியப்பட்டு அவனை எடுத்தோம்.

கணவர் : அவன் யூனியன் தலைவர். நம் கம்பனியில் யூனியன் ஆரம்பிக்க வந்திருக்கிறான். அது வயிற்றைக் கலக்குகிறது.

பார்ட்னர் : எனக்கும் அப்படித்தானிருக்கிறது. ஆனால் என்னை ஆண்டவன் ஒருபொழுதும் கைவிட்டதில்லை.அன்னையை அறிந்தபிறகு பயமாக இல்லை. முழு நம்பிக்கையிருக்கிறது. அன்னை வழியென்ன?

தாயார் : வழியிருக்கிறது. தானே போய்விடுவான். நாம் செய்தது தவறு என உணர்ந்து பிரார்த்தனை செய்தால் நிலைமை மாறும். பார்ட்னர் : கேட்க மனம் குளிர்கிறது. இன்று மாலை தியானத்தில் நான் அன்னையிடம் கூறுகிறேன்.

தாயார் : நம் தவற்றை ஏற்றபின் பிரச்சினை நொடியில் தீரும்.

கணவர் : பாரம் இறங்கியது போலிருக்கிறது. ஆனால் வயிறு கலங்குவது நிற்கவில்லை.

கம்பனியிலிருந்து கணவருக்குப் போன் வந்தது. யூனியன் தலைவருக்கு நம் கம்பனி பிடிக்கவில்லையாம். அவன் நண்பர்கள் வற்புறுத்தலால் வந்தானாம். ராஜினாமா செய்ய வேண்டும் என அவன் சகாக்களுடன் பேசுவதாகச் செய்தி.

கணவர் : இவற்றையெல்லாம் நம்ப முடியுமா? நாம் ஆர்டர் அடித்துக் கொடுத்துவிட்டோமே?

பார்ட்னர் : வழியிருக்கிறது என்றவுடன் இந்த நல்ல செய்தி வருகிறது. நாமிருவரும் தியானத்தில் பிரார்த்தனை செய்வோம். ஏன் பயப்பட வேண்டும்?

பார்ட்னர் மனைவியிடமிருந்து போன் வந்தது. பார்ட்னர் பேசினார். அந்த யூனியன் தலைவர் அவர் வீட்டிற்கு வந்து அவரைப் பார்க்க விரும்பினாராம். பார்ட்னரே அவருடன் பேசினார். அவருக்கு வேறொரு பெரிய கம்பனியில் வேலை கிடைத்துவிட்டதாம். அவர்களிடம் அவருடைய எதிரிகள் போய் அவன் யூனியன் தலைவர், எடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கின்றனர். அது பெரிய கம்பனி. இவன் கெட்டிக்கார டெக்னீஷியன். அங்கு இவன் கொட்டம் பலிக்காது. அவர்கள் எடுக்கப் பிரியப்படுகின்றனர். இவன் போகப் பிரியப்படுகிறான். எதிரிகள் இவனுக்கு வேலை ஆர்டர் வந்துவிட்டது என்று பெரிய கம்பனியில் கூறியதால், அவர்கள் பார்ட்னரிடமிருந்து கடிதம் எதிர்பார்க்கின்றனர். அதைக் கேட்க அவன் வந்திருக்கிறான்.

கணவர் : உடனே கடிதம் எழுதி, ஆர்டரைக் கான்சல் செய்யுங்கள்.

பார்ட்னர் : அன்னை சக்தி வாய்ந்த தெய்வம்.

தாயார் : மனமாற்றம் சூழலை மாற்றும், தவறாது.

பார்ட்னர் : இது எந்தப் புத்தகத்திலிருக்கிறது?

கணவர் : எந்த எந்தப் பிரச்சினைக்கு என்ன என்ன தீர்வு, எந்தப் புத்தகத்திலிருக்கிறது என்று எனக்கு எழுதிக் கொடு.

பார்ட்னர் : நாம் அவசரப்படக் கூடாது. முக்கியமாகப் பயப்படக் கூடாது.

கணவர் : இடி விழுந்தால், எப்படிப் பயப்படாமலிருக்க முடியும்?

தாயார் : அன்னை சொல்வதும் அதுவே. பயப்படக்கூடாது. மேலும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிறார்.

கணவர் : எப்படி சந்தோஷம் வரும்? பயம்தான் வரும்.

பெண் : அப்பா, பார்ட்னர் சந்தோஷமாக இல்லையா?

பார்ட்னர் : நமக்கு மேலே அன்னையிருக்கிறார் என்ற எண்ணம் சந்தோஷம் தருகிறது.

கணவர் : எனக்கு வரவில்லை, வாராது.

பார்ட்னர் : அம்மா, மேலும் இதைப் பற்றி அன்னை ஏதாவது கூறியிருக்கிறாரா?

தாயார் : வேண்டாதவனை நிச்சயமாக விலக்கலாம், திருவுருமாற்றலாம்.

பார்ட்னர் : அப்படி என்றால்?

தாயார் : அவனே சிறந்த தொழிலாளியாகி, மற்றவரைக் கட்டுப்படுத்துவான்.

பார்ட்னர் : விவரமாகச் சொல்லுங்கள்.

கணவர் : வேண்டாம், கேட்கவே பிடிக்கவில்லை. அது விஷப் பரிட்சை.

தாயார் : இது எப்படி நடந்தது?

கணவர் : நான் அவனைப் பார்த்தவுடன் இவனை விடக்கூடாது என நினைத்தேன். அமைதியாக இருக்கிறான். ரொம்ப தன்மையாகப் பேசுகிறான்.

பார்ட்னர் : எனக்கும் அவனைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டது. ஏன் கேட்கின்றீர்கள்?

தாயார் : முதலில் ஆர்டர் கொடுத்தபொழுது நடந்தவை பின்னால் வரப்போவதை விளக்கும்.

பார்ட்னர் : அப்படியும் ஒரு சட்டம் உண்டா? ஆர்டர் கொடுத்தபொழுது அமைதியாகப் பிரியப்பட்டுக் கொடுத்தோம்.

தாயார் : அப்படியானால், போவதும் அமைதியாகப் பிரியமாக நடக்கும்.

பார்ட்னர் : அது நடந்தேவிட்டதே. இதுபோன்ற அன்னை சட்டங்களை நான் தெரிந்துகொள்ளப் பிரியப் படுகிறேன்.

கணவர் : அதெல்லாம் அப்புறம். அவன் ஆர்டரை வாங்கிக் கொண்டு கடிதம் எழுதி அவனை முதல் அனுப்புங்கள். அனைவரும் கலைந்தனர். பெண்ணின் கல்லூரி ஆசிரியை வீட்டிற்கு வந்தார். பெண்ணை வீட்டில் வந்து பார்க்கும் ஏற்பாடு கல்லூரியில் உள்ளது.

ஆசிரியை : உங்கள் மகளை என்ன செய்வதாக உத்தேசம்?

மேற்படிப்புக்கு அனுப்பப் போகிறீர்களா?

தாயார் : அவளுக்குப் படிக்க இஷ்டம். அவருக்கு B.A. போதும் என்றபிப்பிராயம். கல்யாணம் ஆகும்வரைப் படிக்கலாம் என நான் நினைக்கிறேன். எப்படியாகுமோ தெரியவில்லை.

பெண் : நான் M.A முடித்துவிட்டு கல்யாணம் செய்து கொள்கிறேன் அம்மா.

ஆசிரியை : பெரிய படிப்புக்குப் பெரிய மாப்பிள்ளை தேடவேண்டும். அதுவும் சரிதான். மேல்நாட்டிற்கு அனுப்பும் யோசனை உண்டா?

தாயார் : அவர் எதுவும் சொல்லவில்லை.

ஆசிரியை : உங்களுக்கு அபிப்பிராயம் என்ன? அவரைக் கேட்கவில்லையா?

பெண் : மேடம், என் தாயார் அன்னை பக்தை. அதனால் அப்பாவை எதுவும் கேட்கமாட்டார்.

ஆசிரியை : அன்னையைத் தெரியுமா? எனக்கும் அன்னை தெரியும். அதனால் கேட்கக் கூடாது என்று சட்டமில்லை.

பெண் : அப்பாவாக உங்களிடம் தம் அபிப்பிராயத்தைக் கூறியதில்லையா?

ஆசிரியை : ஏன் கேட்கக் கூடாது என நினைக்கிறீர்கள்? நான் அன்னையை வெகுநாட்களாக அறிவேன். எது வேண்டுமானாலும் கேட்பேன். அப்படியே பக்கும்.

தாயார் : முழு நம்பிக்கை இருப்பதாக அர்த்தம்.

ஆசிரியை : உங்கள் அபிப்பிராயம் தெரியப் பிரியப்படுகிறேன்.

தாயார் : எதையும் கேட்கலாம் என்ற அன்னை, எதையும் கேட்காமலிருப்பது நல்லது எனவும் கூறியிருக்கிறார்.

ஆசிரியை : அன்னை கூறியவற்றை எல்லாம் நம்மால் அப்படியே பின்பற்ற முடியுமா? திருமணம் கூடாது என்கிறார். பெண்ணுக்குத் திருமணம் வேண்டாம் எனக் கூற முடியுமா?

தாயார் : நான் தாயாரானாலும், முடிவுக்கு உரியவர் இரண்டு பேர். கணவர் முடிவு செய்ய வேண்டியவர். பெண் பக்தையானால் அவள் முடிவு செய்யவேண்டும்.

பெண் : அம்மா, நான் பக்தையில்லையா?

தாயார் : நீயும், நானும் பக்தை எனக் கூறுவது தவறானது.

ஆசிரியை : ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?

தாயார் : நான் பிரார்த்தனை செய்கிறேன். சமர்ப்பணம் செய்ய முடிவதில்லை. சமர்ப்பணம் செய்பவர் பக்தராவார்.

ஆசிரியை : உங்கள் கணக்கில் நானும் பக்தையாகமாட்டேனா?

தாயார் : அன்னையை ஏற்பதில் பல அளவுகள் உண்டல்லவா?

ஆசிரியை : என்னை எந்த அளவில் வைக்கின்றீர்கள்?

தாயார் : எனக்குப் பொதுவான சட்டம் தெரியும்.

பெண் : எந்தச் சட்டம்?

தாயார் : அன்னை பக்தை என்பவர் அன்னை கூறியவற்றை ஏற்பவர்.

பெண் : நான் ஏற்கவில்லையா? நீங்கள் அப்படியே பின்பற்றுகிறீர்களே?

தாயார் : உன் ஆசிரியைச் சொற்படி நாம் அன்னையின் திருமணச் சட்டத்தை ஏற்க முடியுமா?

ஆசிரியை : ஒருவேளை நீங்கள் சாதகருக்குண்டானதைப் பற்றிப் பேசுகிறீர்கள் போலிருக்கிறது.

தாயார் : சாதகருக்கு விலக்கேயில்லை. எந்தச் சட்டத்திலும் விலக்கை அவர் எதிர்பார்க்கக் கூடாது.

ஆசிரியை : அன்னை எழுதியவற்றை எல்லாம் படித்திருக்கிறீர்களா?

தாயார் : ஊம்.

ஆசிரியை : பின்பற்றப் பிரியப்படுகிறீர்களா?

தாயார் : ஓரளவு, முடிந்த அளவு பின்பற்றுகிறேன்.

பெண் : அம்மா, அன்னையை ஏற்பது என்றால் என்ன?

தாயார் : அன்னை சொல்லியதை அப்படியே வேதவாக்காக ஏற்க வேண்டும்.

ஆசிரியை : அது படிக்காதவர்கட்குரியது, மூடநம்பிக்கை. நாமெல்லாம் புரிந்து ஏற்கவேண்டும்.

பெண் : அம்மா, மேடம் சொல்வது சரியில்லையா?

தாயார் : புரியாமல் ஏற்பதைவிடப் புரிந்து ஏற்பது மேல்.

ஆசிரியை : அதையே நான் சொன்னேன்.

பெண் : இரண்டு பேரும் ஒன்றையே கூறுகிறீர்களா? எதிரானதைச் சொல்கிறீர்களா?

தாயார் : புரியாமல், புரிந்துகொள்ள முயலாமல் ஏற்பது முதல் நிலை. புரிந்து ஏற்பது அடுத்த நிலை. புரிந்தபின், புரிந்ததற்காக ஏற்காமல், அன்னை கூறியிருப்பதற்காக ஏற்பது அடுத்த நிலை.

ஆசிரியை : எப்படி?

தாயார் : புரியாமல் ஏற்பது உணர்வு ஏற்பது (vital acceptance).

புரிந்து ஏற்பது மனம் ஏற்பது (mental acceptance).

புரிந்தாலும் அன்னை கூறியதால் ஏற்பது சைத்தியப்புருஷன் ஏற்பது (psychic acceptance).

ஆசிரியை : நீங்கள் அன்னையைப் படித்ததுடன், அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் மாதம்தோறும் சுமார் 10, 20 அன்பர்கள் கூடுகிறோம்.அங்கு வந்து இக்கருத்தை விளக்கிக் கூறினால் அனைவரும் வரவேற்பார்கள். அவர்கள் கேள்விகட்குப் பதில் சொல்வதும் நன்றாக இருக்கும். நமது மரபில் இதைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறார்களா?

தாயார் : மரபைப் பற்றி நமக்கு விவரமாகத் தெரிந்துகொள்ள வழியில்லை. பொதுவாக குரு கூறுவதை மறுத்துப் பேசக்கூடாது. நினைக்கவும் கூடாது என்ற பழக்கம் தெரியும். உபநிஷதம், சாஸ்திரம் அப்படிக் கூறும் என நான் நினைக்கவில்லை. எனக்கு அந்தப் படிப்பில்லை.

ஆசிரியை : அன்னை என்ன கூறுகிறார்கள் என்று படித்திருக்கிறீர்களா?

தாயார் :

1. மனித குரு தேவையில்லை.

2. குருவைக் கேள்வியே கேட்கக் கூடாது.

3. குரு கூறுவதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

4. புரிவது அவசியம்.

5. புரிவதை நம்பினால் நம்மை நம்புவதாக அர்த்தம்.

6. புரிந்தபின், புரியாமல் ஏற்பதுபோல் ஏற்பது பக்குவம்.

ஆசிரியை : ஏன் அது பக்குவம் எனக் கூற முடியுமா?

தாயார் : புறம் அகமாவது சத்திய ஜீவியம். புரிவது புறம். புரியாததும் புறம். வேதவாக்காக ஏற்பது அகம். இந்த அகம் புறத்தைத் தன்னுட்கொண்டது என்பதாலும்,

காலத்தின் புறத்தையும், காலத்தைக் கடந்த அகத்தையும் கடந்த நிலையிலுள்ள காலம் என்பதால், அது உயர்ந்தது.

ஆசிரியை : எனக்குப் புரியவில்லை. இது எங்குள்ளது?

தாயார் : TheLife Divineஇல் 364ஆம் பக்கத்திலுள்ளது.

ஆசிரியை : எனக்குப் புரிவதுபோல் சொல்ல முடியுமா?

பெண் : எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

தாயார் : காலம், காலத்தைக் கடந்தது என்ற இரண்டு நிலைகள் உள்ளன.

ஆசிரியை : ஆம். காலம் சிறியது. கடந்தது பெரியது.

தாயார் : இரண்டையும் கடந்த காலம் உண்டு. காலம் வாழ்வுக்குரியது. கடந்தது ரிஷிக்குரியது. இரண்டையும் கடந்தது பூரண யோகத்திற்குரியது. பூலோகச் சுவர்க்கம் எனப்படுவது.

ஆசிரியை : துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் என்பது அதுதானா?

தாயார் : ஆம். அந்த 3 நிலைகளில் புரிவதை வைத்துக்

கூறினேன்.

ஆசிரியை : அதிகமாக யோசனை செய்திருக்கிறீர்கள். இது படிப்பால்

வாராது. யோசனை அனுபவத்தால்தான் வரும். நானும் என் தோழிகளும் ஒரு நாள் இங்கு வருகிறோம். உங்களுடன் பேச நன்றாக இருக்கிறது.

ஒரு நாள் பல ஆசிரியைகள் பெண்ணின் ஆசிரியையுடன் வந்தனர். அன்று அனைவரும் பெண்ணின் ஆசிரியையை வாழ்த்தினார்கள். அவர்களுக்குப் பிரின்சிபால் வேலை வந்துவிட்டது. பிரின்சிபால் பேசினார்கள். அனைவரையும் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள். அவர்கள் எல்லாம் முதல் பிரின்ஸ்பாலுடைய அனுபவத்தையும், பிறகு பெண்ணின் தாயாரை அன்னையைப் பற்றியும் பேசச் சொல்லிக் கேட்டார்கள்.

பிரின்ஸ்பால்: நான் இப்பெண்ணைப் பார்க்க வந்தபொழுது அவள் தாயார் அன்னை பக்தை என அறிந்து, பேச ஆரம்பித்தேன். அன்று அவர்கள் கூறியதை அப்படியே மனதில் ஏற்றுப் பின்பற்றினேன். மனம் நிம்மதியாயிற்று. புது வாழ்வு பிறந்தது போலிருந்தது.அதுவரை நான் அன்னையை அறியாதது போலிருந்தது. எனக்கு பிரமோஷன் தற்சமயமில்லை. எப்படி வந்தது எனத் தெரியவில்லை. நீங்கள் எல்லாம் சில புத்தகங்களை படித்திருக்கிறீர்கள். தோன்றும் சந்தேகங்களைக் கேட்டால் அம்மா மிகத் தெளிவாக விளக்கம் தருவார்.

வரலாறு ஆசிரியை: Life Response என்பது மிகச் சிறப்பாக உள்ளது. வரலாற்றிலிருந்து உதாரணம் தரமுடியுமா?

தாயார் : வரலாறு முழுவதும் Life Responseதான். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் புரியும். 3 இலட்சம் பிரிட்டிஷ் துருப்புகள் டங்கர்க்கில் உள்ளபொழுது, ஹிட்லர் அங்கு குண்டு போட முடிவு செய்தான். போரின் போக்கு பிரிட்டன் பின்வாங்கும் நிலை. குண்டு போட்டால் அத்தனை பேரும் சேதமாவர். திடீரென 7 நாட்கள்வரை மூடுபனி விமானம் வருவதைத் தடுத்தது. அது Life Response. உலகப்போரில் முக்கியத் திருப்பம்.

வரலாற்று : அது உலகப் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி.

ஆசிரியை

தாயார் : நாம் Life Responseஐ உண்டுபண்ணலாம். இது பகவான் செய்தது.

தொடரும்....

****


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பொழியும் அருள் மலை போன்ற சக்தியை அளித்து,

தீயசக்திகளை நாசம் செய்ய உதவுகிறது.


 


 

****
 


 


 


 



book | by Dr. Radut