Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னையே துணை


1) என் வீட்டில் அன்னையின் அருள் கிடைக்கத் தொடங்கியது என் மகள் ப்ரியதர்ஷணி மூலமாகத்தான். அவள் ஓர் அன்னை பக்தை. அவள் கூறிய பிறகுதான் நானும், குடும்பமும் அன்னையை pray செய்யத் தொடங்கினோம். 1½ வருடம் இருக்கும், அன்னை எங்கள் இருவரையும் ஒரு பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றினார். நானும், மகளும் two-wheelerஇல் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கடை, பாங்க், மார்க்கெட் என்று சுற்றிவிட்டு அன்னை தியான மையம் சென்றோம். ப்ரே பண்ணிவிட்டு வந்து வண்டியை ஸ்டார்ட் செய்யும்முன் பார்த்தால், பின்பக்கம் wheelஐ இணைக்கும் rod கட்டாகி, கொஞ்சமாக ஒட்டிக்கொண்டு இருந்தது. பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் வண்டியை விட்டால், அவர் ஆச்சரியப்பட்டு, "எப்படி இதனை ஓட்டி வந்து ஆபத்து இல்லாமல் தப்பினீர்கள்!'' என்று கேட்டார். அன்று அன்னைதான் எங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

2) தெரிந்த நண்பர்மூலமாக ஒரு பெண்மணியிடம் சீட்டுச் சேர்ந்தோம். பணம் 8வது சீட்டு முடிந்து 1½மாதம் ஆகியும் தரவில்லை. சீட்டுச் சேர்ந்தபோதும் அன்னையிடம் ப்ரே பண்ணிவிட்டுத்தான் சேர்ந்தோம். பணம் போய் கேட்டாலே, அந்தப் பெண்மணி பேசும் மரியாதையற்ற வார்த்தைகளால் மனம் நொந்து அன்னையிடம் முறையிட்டேன். அன்னையை மீண்டும் ப்ரே செய்த ஒரு வாரத்தில், எங்கள் நண்பரே பணத்தை வாங்கிக் கொடுத்துவிட்டார்.

3) என் மகன் மிகவும் சுட்டிப் பையன். 8வது வகுப்பு வரைக்கும் நன்கு படித்து வந்தான். பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தவன், 9வது வகுப்பு வந்து சில நாட்களிலேயே, கோபம், பிடிவாதம், எதிர்த்துப் பேசுதல் என்று மாறிவிட்டான்.   அன்னையிடம்தான் ப்ரே பண்ணுவேன். அன்னை அருளால் +2 பாஸ் செய்து, B.E.யும் சேர்த்தும், 5 வருடங்களாக மனக்கஷ்டம் கொடுத்தவன், எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருந்த எங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்படி மாற்றியது, அன்னையின் அருள்தான்.

4) நாங்கள் கோடை விடுமுறையில் 2 மாத காலம் ஊருக்குப் போய்விட்டோம். கிளம்பும் 1 வாரத்திற்குமுன்தான் கேஸ் ஸ்டவ் கிளீன் செய்து புது டியூப் மாற்றியிருந்தோம். ஊரில் இருந்து நான் மட்டும் தனியாக வந்தேன். தினமும் காலையில் அன்னையை ப்ரே செய்துவிட்டுத்தான் வேலையைத் தொடங்குவேன். வந்து ஒரு வாரமாக ஸ்டவ் உபயோகப்படுத்தியிருக்கிறேன். 19.7.03 அன்றும் காலையில் ப்ரே பண்ணிவிட்டு, விளக்கை (light) போட்டுவிட்டு, பால் காய்ச்சி டீ போட்டேன். பின்பு ½ மணி நேரம் கழித்து, சுடுநீர் வைக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபொழுதே, புஸ் என்று சத்தம் கேட்டது. எங்கிருந்து சத்தம் என்று புரியாமல் சுற்றும், முற்றும் பார்த்தேன். பின்பு ஸ்டவ்வை பார்த்தால் என்னவென்று சொல்ல! ஸ்டவ்வுடன் இணையும் இடத்தில் இருக்கும் ரப்பர் குழாய் வெள்ளரிப் பழம்போல் பிளந்து கிடந்தது. "என்னே அன்னையின் அருள்!''பக்கத்தில் தீபம் எரிந்துகொண்டு இருக்கு, லைட் போட்டு இருக்கேன், ஸ்டவ்வில் பால் காய்ச்சி, டீ போட்டு இருக்கேன். ஆனால் எதையுமே எனக்குக் காட்டாமல், தானே அத்தனை வேலைகளையும் செய்து கொடுத்து அருள் புரிந்து இருப்பதை என்னவென்று சொல்ல.

இன்றும், இப்பொழுதும், எங்கு நான் சென்றாலும், அன்னையே என் உடன் இரு, இந்த வேலையை எப்படி முடிப்பேன் என்று ப்ரே பண்ணுவேன். சிறு குழந்தையாகவோ, நண்பனாகவோ, நண்பியாகவோ, என் குழந்தைகள் கூடப் படிப்பவர்களாகவோ,தாயாகவோ, யார் உருவத்திலேயாவது வந்து எங்களைக் காப்பாற்றிக் கொண்டேயிருக்கிறார்.

இந்நிகழ்ச்சிகளை நான் எழுதும்போதும் என் அருகிலேயே இருக்கிறார். அன்னை அன்பர்களை என்றும் அன்னை காத்து இரட்சிப்பார் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நிம்மதியாகச் சற்று இருக்கலாம் (relaxation) என்பது ஆழ்மனம் தன்னைத் தன்போக்கில் செலுத்த ஆசைப்படுவதாகும்.

ஆசையை ஆணித்தரமாக ஆழ்ந்து அனுபவிக்க

நிம்மதியாக இருக்க வேண்டும் என்கிறான்.



 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பலனுக்கான பிரார்த்தனை இறைவனை, திசைதிருப்புவதாகும்.மேலே போய் முழுமையடையும்படி வாழ்வை உயர்த்துவது பரிணாமம். குறிப்பான பிரார்த்தனை எளியவனுக்குப் பரிணாமம்.

நம்மை உயர்த்தும் பிரார்த்தனை உயர்ந்த பிரார்த்தனை.

****



book | by Dr. Radut