Skip to Content

04.அஜெண்டா

“Agenda

"Ashram symbolized all the difficulties to be resolved. People coming to the Ashram are beset with difficulties, instead of finding help. So, she can stay where she is." The Mother 1972.

"ஆசிரமம் தீர்க்கப்படவேண்டிய சிரமங்களின் சின்னம். இங்கு வருபவர்கள் உதவி பெறுவதற்குப் பதிலாக தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். அதனால் அவர் இருக்குமிடத்திலேயே இருக்கலாம்'' - அன்னை 1972.

அஜெண்டா 13 வால்யூம்கள். கடைசி வால்யூம் 1972, 1973-இல் எழுதப்பட்டது. அங்கு அன்னை இவ்வாறு கூறுகிறார்கள். இது சம்பந்தமான கருத்துகளை அன்பர்கள் அறிவார்கள். எனினும் அவற்றைக் கீழே எழுதுகிறேன்.
 . ஸ்ரீ அரவிந்த ஆசிரமம் மற்ற ஆசிரமங்களைப்போல் ஏற்பட்டதன்று.
 . பூரணயோகம் உலகத்துச் சுபாவங்களை எடுத்து மாற்ற முயல்வதால், அந்தச் சுபாவங்களுடைய பிரதிநிதிகள் அன்னையை நாடி வந்தனர்.

. பூர்வஜென்மத்தில் அன்னையிடமிருந்தவர்களே அப்படி வந்தனர்.

. இறைவன் திருவுள்ளம் பூர்த்தியாகும்பொழுது நான் உங்களுடனிருக்க வேண்டும் எனப் பிரார்த்தித்து அதை மறந்தவர்கள் சாதகர்கள் என அன்னை கூறியுள்ளார்.

. உலகில் எந்த நல்லது நடக்கவேண்டுமானாலும், முதலில் அது ஆசிரமத்தில் நடக்கவேண்டும் என்று அன்னை கூறியுள்ளார்.

. இதுபோன்ற ஆசிரமங்கள் ஸ்தாபகருக்குப்பின் மூடப்படவேண்டும் என பகவான் கூறியுள்ளார்.

. யார் அழைத்தாலும், எங்கிருந்து அழைத்தாலும் உடன் அன்னை வருவதை நாம் காண்கிறோம்.

. பகவான் ஆசிரமம் ஆரம்பிக்க நினைக்கவில்லை. The Life Divine எழுத நினைக்கவில்லை. அன்னையின் வேண்டுகோளுக்கிணங்க செய்தவை அவை.

. அன்னை மேலே கூறியதை நாம் அப்படியே ஏற்கலாம், அல்லது நம் அனுபவத்தின் பேரில் செயல்படலாம்.

. உலகில் நல்லது நடக்கவேண்டும். உலகின் சிரமங்கள் தீரவேண்டும், நல்லது நடக்கும்பொழுது பிறர் அதில் கலந்துகொள்ளலாம். சிக்கல்கள் தீருமிடத்தில் கலந்துகொள்ளுதல் சுலபமன்று.

. அன்னையின் கோட்பாடுகளை ஏற்பது அன்னையை ஏற்பதாகும். அது வழிபாட்டைவிடக் கடினமானதாகும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

வாழ்வில் மனிதச் சூழ்நிலையை ஆர்வமாக அரவணைத்தால் முன்னேற்றம் பிறக்கும்.

இறைவனின் சத்தியத்தை ஆர்வமாக அணுகினால் அவனுக்குப் பரிணாம வளர்ச்சியுண்டு.

சூழ்நிலையை ஏற்கும் மனிதன் உயர்வான்.

சத்திய ஆர்வம் பரிணாம வளர்ச்சி.


 

****
 



book | by Dr. Radut