Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

                                                 லைப் டிவைன்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)                            கர்மயோகி
 

XII. Delight of Existence : The Solution 12

Page No. 104, Para No.8

12. ஆனந்தம் - விளக்கம்

This view has certain consequences

இக்கருத்திற்குச் சில பலன்களுண்டு.

They inevitably impose themselves.

இப்பலன்கள் தவிர்க்க முடியாமல் நிர்ப்பந்தம் செய்யும்.

In our depths we are that One

ஆழத்தால் நாம் ஏகன் எனும் இறைவன்.

It is of first importance.

இது முக்கியம் வாய்ந்தது.

There is a reality of our being.

நமது ஜீவனுடைய சத்தியம் இது.

There we are the indivisible All-Consciousness.

அங்கு நாம் அகண்ட ஜீவியம்.

Therefore we are the inalienable All-Bliss.

அதனால் நாம் நீங்காத ஆனந்தம்.

Our sensational experience has another disposition.

நம் உணர்வின் அனுபவம் வேறு.

They are three vibrations.

அவை மூன்று.

They are pain, pleasure and indifference.

வலி, சந்தோஷம், பராமுகம் அவை.

It is only a superficial arrangement.

இது மேலெழுந்த நிலை.

It is created by the limited part of ourselves.

நம்மில் பகுதியான கரணத்தால் இது ஏற்படுத்தப்பட்டது.

That part is uppermost in our waking consciousness.

அப்பகுதி நமது விழிப்பில் மேலோங்கியுள்ளது.

Behind these must be something in us.

இவற்றின் பின்னால் நம்முள் ஒன்றிருக்க வேண்டும்.

It is much vaster, truer, profounder.

அது அகன்றது, சத்தியமானது, கனமானது.

It is deeper than the superficial consciousness.

மேலெழுந்த ஜீவியத்தைவிட அது ஆழத்திலுள்ளது.

That takes delight in all experiences.

எல்லா அனுபவங்களையும் அது அனுபவிக்கின்றது.

It is impartial.

அது பாரபட்சமற்றது.

It is a delight that secretly supports.

அந்த ஆனந்தம் இரகஸ்ய ஆதரவு.

It supports the superficial mental being.

மேலெழுந்த மனத்திற்கு அது ஆதரவளிக்கிறது.

It enables us to preserve through all labours.

நம் உழைப்பைத் தாங்கும் சக்தியை அது அளிக்கிறது.

The movement in the Becoming is agitated.

பிரகிருதியின் சலனம் படபடக்கும்.

It suffers and undergoes ordeals.

அது துன்பப்பட்டு, வேதனையை அனுபவிக்கிறது.

We are on the surface.

நாம் மேலெழுந்தவாரியாக இருக்கிறோம்.

It is only a trembling ray.

அது ஓர் இழை, அதிர்வான இழை.

We call it ourselves.

நாம் அதை நாம் என நினைக்கிறோம்.

Behind is the vast subconscient.

அதன்பின் ஆழ்ந்த மனமுண்டு.

The vast superconscient too is behind.

பரமாத்மாவும் நம் பின் உள்ளது.

Both profit by all the surface experiences.

மேலெழுந்த அனுபவத்தை இரண்டும் பெறுகின்றன.

They impose them on the external self.

புறவாழ்வை அவை கட்டுப்படுத்துகின்றன.

It is a sensitive covering to the contacts of the world.

உலகத் தொடர்பின் மீதுள்ள உணர்வுமயமான போர்வை அது.

The external self is thus exposed.

புறவாழ்வு அப்படி ஆதரவற்றுள்ளது.

It is veiled

அது திரையிடப்பட்டுள்ளது.

It receives these contacts.

தொடர்புகளை அது பெறுகின்றது.

It assimilates them into values.

தொடர்பின் பலனை அது கிரகித்துக்கொள்கிறது.

They are values of experience.

அவை அனுபவத்தின் பண்புகள்.

The experiences are truer, profounder and creative.

அனுபவங்கள் உண்மையானவை, ஆழமானவை, படைக்கவல்லவை.

They are mastering experiences too.

அவை நம்மை மீறி ஆட்கொள்ளும் அனுபவங்கள்.

Out of its depths, it returns them to the surface.

ஆழத்தினின்று அவை மேலே வருகின்றன.

They come in forms of strength, character and knowledge

அவை பலம், சுபாவம், ஞானம் ஆகிய ரூபங்களில் வருகின்றன.

They come as impulsions too.

அவை உந்துதல்களாக வரும்.

The roots of those impulsions are mysterious to us.

அந்த வேகத்தின் வேர் நமக்குப் புதிர்.

It is so to our minds.

மனம் அப்படியிருக்கிறது.

Our mind moves and quivers on the surface.

மனம் மேலே சஞ்சாரம் செய்து அதிர்கிறது.

The mind has not learned to concentrate itself in the depths.

மனம் ஆழத்தில் உறைய அறியவில்லை.

Nor does it live there.

ஆழத்தில் அது நிலையாக இருப்பதில்லை.

Page No. 104 Para No. 9


 

Our life is ordinary.

வாழ்வு சாதாரணமானது.

The truth is hidden from us.

சத்தியம் ஒளிந்துள்ளது.

Or it is only dimly glimpsed at times.

ஏதோ ஒரு சமயம் மங்கலாகத் தெரிகிறது.

Or it is imperfectly held or conceived.

அரைகுறையாகப் புரிகிறது.

There is the presence within us.

ஆண்டவன் உள்ளேயிருக்கிறான்.

We will infallibly awaken to it.

தவறாமல் நாம் அதையறியலாம்.

For that we must learn to live within ourselves.

அதற்கு நாம் உள்ளே வாழ அறியவேண்டும்.

It is our more real self.

அது நம் உண்மையான ஜீவன்.

It smiles at our pleasures and pains.

நம் இன்பதுன்பங்களைக் கண்டு அது கேலியாக நகைக்கின்றது.

We do so at the error and passion of a little child.

இது குழந்தையின் ஆர்வம், இடறி விழுவதை நாம் காண்பது போன்றது.

We can go back into ourselves.

நாம் உள்ளே போகலாம்.

We can identify ourselves with the radiant penumbra of the Divine.

பிரகாசமான நிழலுடன் நாம் ஐக்யமாகலாம். அது இறைவன்.

It is not an identification with our superficial experience.

அது நம் மேல்மனத்தோடுடைய ஐக்யமன்று.

Then we can live in that attitude.

அப்படியானால் நாம் அந்நோக்கத்தை ஏற்கலாம்.

It is an attitude towards contacts of the world.

உலகத்துடன் வாழும் நோக்கமாகும் அது.

Thus we can stand back in our consciousness.

நாம் நம் ஜீவியத்தில் இருக்கலாம்.

We stand back, thus, from our pleasures and pains of the body.

நம் இன்ப துன்பங்களினின்று அப்படி விலகி நிற்கலாம்.

They are of the vital being and mind.

அவன் நம் மனத்திற்கும் வாழ்விற்கும் உரியவன்.

They can be possessed as experiences.

அவற்றை நாம் அனுபவமாகப் பெறலாம்.

Their nature is superficial.

நம் சுபாவம் மேலே உள்ளது.

It does not touch our core.

அது நம்மை உள்ளே தொடுவதில்லை.

Our core is our real being.

நம் உண்மையான ஆத்மா உள்ளேயுள்ளது.

Sanskrit terms are entirely expressive.

சமஸ்கிருதச் சொற்கள் அர்த்தபுஷ்டியுள்ளவை.

There is anandamaya behind manomaya.

மனோமயத்தின் பின் ஆனந்தமயம் என சமஸ்கிருதம் கூறுகிறது.

It is a vast Bliss-Self behind the limited mental self

மனத்தின் பின் ஆனந்தம் உள்ளது.

The mental self is only a shadowy image.

மனம் நிழல் போன்றது.

It is a disturbed reflection of the Bliss-Self.

மனம் ஆனந்தமயம் சிதறியதால் ஏற்பட்டது.

We have a truth.

சத்தியம் உண்டு.

It lies within.

அது உள்ளேயுள்ளது.

It is not on the surface.

அது மேலேயில்லை.

                                                    Contd...

தொடரும்....

 

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

தனக்குப் பிடிப்பதைச் சிறந்த அபிப்பிராயமாகவும், உயர்ந்த ஞானமாகவும் கருதுகிறோம்.

தான் கண்டதே ஆத்மஞானம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதைத் தேடவேண்டும் என்பது ஞானம்.ஆன்மாவை எப்படித் தேடவேண்டும் என்பது யோகம்.ஆன்மா நம்மை அறிவது ஆத்ம ஞானம்.சமர்ப்பணத்தால் ஆனந்தத்தைத் தேடுவது பூரண ஞானம்.

தேடும் ஞானம்.

எப்படிப் போவது என்ற யோகம்.

ஆன்மாவை அறியும் ஆன்ம ஞானம்.

சமர்ப்பணம் தரும் பூரண ஞானம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் அலைபாய்வதுண்டு. உணர்ச்சி வசப்பட்டாலும்,சைத்தியப்புருஷன் நிலைத்தாலும் அலைபாய்வது நின்றுவிடும்.

ஆன்ம விழிப்பின் பலனைப் பொங்கிவரும் உணர்ச்சி தரும்.


ஸ்ரீ அரவிந்த சுடர்

வேலை தடைப்பட்டு, சிரமமாகி, சிக்கலாகிவிட்டபின், முழு நேரமும் விழிப்பாக இருப்பது வழக்கம். அது உதவும். தடையின் சூட்சுமம் தெரிந்தால், விலக்கலாம். அதன்பின் முழுநேர விழிப்பு தேவைப்படாது (சாவி கொடுத்தால், கடிகாரத்திடம் வேலையில்லை).

முழுநேர விழிப்பை விலக்கும் சூட்சுமம்.


 

****
 


 



book | by Dr. Radut