Skip to Content

10.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                                         (சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

அண்ணன் - நமக்கும் புத்தகத்திற்கும் பாலமாக அமைவது ஆசிரியர், புத்தகத்தை எழுதியவர். அதுபோல் பணத்தை உற்பத்தி செய்யும் சமூகத்திற்கும் நமக்கும் பாலமாக அமைவது , நல்லெண்ணம்.

தம்பி - புரியவில்லை.

அண்ணன் - நாட்டில் அனைவருக்கும் வீடு, உணவு, உடை கிடைக்க வேண்டும் என்பது நல்லெண்ணம். அனைவருக்கும் எல்லாச் சேவைகளும் கிடைக்க வேண்டும் என்பதும் நல்லெண்ணம். மொழி, கல்வி, பணம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் நல்லெண்ணம், Public goodwill. நல்லெண்ணத்தால் தான் பொருள் பெருகியது, சேவை பெருகுகிறது, பணம் பெருகுகிறது.

தம்பி - இதை உதாரணத்தால் விளக்க முடியுமா?

அண்ணன் - Newspaper விலை நல்ல உதாரணம். ஒரு தினசரி பேப்பர் அடக்க விலை ரூ.10/-. அதை ரூ.3/-க்குத் தருகிறார்கள். விளம்பரம்மூலம் பணம் வருகிறது.

தம்பி - Newspaperகம்பனி பணத்தை பெற்று மக்களுக்கு வழங்கும் கருவியாக நீண்ட நாளாக செயல்பட்டு வருகிறது. Encyclopaedia Britannice ரூ.30,000 பெறுமானது இப்பொழுது இலவசமாக internetஇல் வருகிறது என்றால் கலைக் களஞ்சியம் இனாமாக வருகிறது எனப் பொருள். அதைப் பிரசுரம் செய்த கம்பனி இலட்சக்கணக்கான பிரதிகளை இனாமாக வழங்கியுள்ளது. பணம் பெருகுகிறது. இதுபோன்ற செயல்கள் ஆரம்பித்துப் பல பொருள்கள் மலிவாகவும், சில இனாமாகவும் கிடைக்கின்றன.

அண்ணன் - பணம் தன்னைத் தானே பெருக்கிக்கொள்வதற்கு இது நல்ல உதாரணம், ஏற்றால் நல்லது.

தம்பி - "நான் கலைக் களஞ்சியம் படிக்கவில்லை, internet வைத்ததில்லை, எனக்கு ஒன்றுமில்லையா'' என்பவர் உண்டு.

அண்ணன் - புதியதாக வருவதைப் பயன்படுத்துபவர்கட்குத்தான் பலன் வரும்.

தம்பி - மற்றவர்கள், இந்நிலை பெருகி அனைவருக்கும் வரும்வரை காத்திருக்க வேண்டும்.

அண்ணன் - அது உண்மை. அதற்கும் ஓர் வழியுண்டு. நல்லெண்ணம் பணப்பெருக்கத்தை உற்பத்தி செய்வதால், நல்லெண்ணமுள்ளவர் அப்பலனை இப்பொழுதே பெறலாம். internetஇருந்தால் நல்லது, இல்லாவிட்டாலும் முடியும். முடியும் என்றால் நல்லெண்ணம் ஆழ்ந்து ஊன்றியிருந்தால் முடியும்.

தம்பி - மேலும் தெளிவான விளக்கம் வேண்டும்.

அண்ணன் - பிறருக்கு உதவி செய்ய நல்லெண்ணம் தேவை. அதுவும் ஒரு பொருளைக் கொடுக்கும் அளவுக்கு நல்லெண்ணமிருப்பது கடினம். அப்படிக் கொடுக்கும் ஒருவரைப் பார்த்தால், பொருளைக் கொடுப்பது கடினம். "அந்த அளவுக்கு எனக்கு நல்லெண்ணமில்லை'' என்பார். அடுத்த வேறு கட்டமும் உண்டு. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு பொருளைக் கொடுக்கலாம். ஆனால் நல்லெண்ணத்தைக் கொடுக்க முடியுமா என்றால் அது பொருளைக் கொடுப்பதைவிடக் கடினம்.

தம்பி - வாயால் பேசுகிறோம். நான் பாஸ் செய்தபொழுது நண்பன் முதல் மார்க் வாங்க வேண்டும் என்று நினைப்பதே கடினமல்லவா? வாங்கிவிடப் போகிறான் என மனம் துணுக்குறுகிறது, என்பதே உண்மை.

அண்ணன் - வீட்டிற்குள் அண்ணனுக்கு வந்தால் தம்பிக்குப் பொறுக்கவில்லை, மனைவி பிரபலமானால் கணவன் முகம் சுருங்குகிறது, கணவனுக்குச் செல்வம் வருவதைப் பொறுக்காத மனைவியுண்டு என்பது நிலை. அடுத்தவருக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும், நினைத்துச் சந்தோஷப்பட முடியுமா என்று ஒருவரைக் கேட்டேன். "அப்படிச் சொன்னால் சந்தோஷப்படலாம். என் நாத்தனாருக்கு 1 கோடி வரவேண்டும் என்றால் மனம் திக் என்கிறது. மனம் இடம் கொடுக்கவில்லை'' என்று பதில் வந்தது.

தம்பி - நம்முடன் உள்ளவர் மீது நல்லெண்ணம் தவறாதிருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அதை விரிவு செய்து, பிறகு எட்ட இருப்பவர், வேண்டாதவர், அவர்கட்கும் அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டும். அந்த நினைப்பு சந்தோஷம் கொடுப்பது நல்லெண்ணம்.

அண்ணன் - அதைத் தாண்டிய கட்டங்களுண்டு. இதுவரை வருபவர்கட்கே அதிர்ஷ்டம் வரும்.

தம்பி - நம் நல்லெண்ணம், உலகத்தின் நல்லெண்ணத்துடன் தொடர்பு கொண்டால், பணம் நம்மை நோக்கி வரும்.

அண்ணன் - அப்படி வருவது நல்ல பணமாக இருக்கும். தவறான பணமாக இருக்காது.

தொடரும்.....


 



book | by Dr. Radut