Skip to Content

09.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னைக்கு,

அன்னையின் குழந்தை எழுதுவது. நான் (IIyr. B.C.A.) சென்னையில் உள்ள (Jain college) விடுதியில் தங்கி படிக்கின்றேன். என் சொந்த ஊர் திருத்தணி.

இக்கடிதம் எழுதக் காரணம், என்னுள் எழும் பல கேள்விகளுக்கு விடை காண. நான் அன்னையை ஏற்றுக் கொண்ட இந்த 8 ஆண்டுகளில் என் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்கள். என் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் அன்னை என்னுடன் இருப்பதை உணர முடிகிறது. எனக்கு எப்பொழுதும் கோபமோ, மகிழ்ச்சியோ அன்னையிடம் பகிர்ந்து கொள்வது (பேசுவது) வழக்கம். (eg.) ஒரு முறை விடுதியில் காலை 5.30 a.m. எழுந்து வீட்டிற்கு phone பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் காலையில் எழுந்து வெளியில் வந்தேன், அது பனிக்காலம் என்பதால் அவ்வளவாக வெளிச்சம் இல்லை. வெளியில் வந்த உடன் இந்த நேரத்தில் போக வேண்டுமா என்று நினைத்தேன். உடனே என் தோள் மீது கை வைத்து நான்தான் உன் கூடவே இருக்கிறேனே, வா போகலாம் என்றார். நானும் அன்னையிடம் பேசிக்கொண்டே phoneboothக்கு வந்தோம். அங்கு இருக்கும் இருக்கையைப் பார்த்து இங்கே அமருங்கள் Mother, 5 நிமிடங்களில் வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு போய் phoneஐக் கையில் எடுத்த பிறகுதான் யோசித்துப் பார்த்தேன். அன்னையுடனா பேசிக்கொண்டு வந்தேன் என்று அவரை அமரச் சொன்ன seatஐப் பார்த்து Thank you so much Mother என்று கூறி முடிப்பதற்குள் Mother உடைய blessing song Vijai T.V.யில் ஒளிபரப்பாகியது. ஒரு நிமிடம் அப்படியே உரைந்துவிட்டேன்.

இதைப்போல் பல விஷயங்கள் என் வாழ்க்கையில் சர்வ சாதாரணமாக நடப்பது போல் ஆயிற்று. எனக்கு வரும் கஷ்டங்களும், மகிழ்ச்சியும் அன்னை தான் கொடுக்கிறார். நான் விரும்பிய ஒன்று நடக்கவில்லை என்று கூறி வருந்தினால் அடுத்த நிமிடமே அந்நிகழ்ச்சி நடந்தால் எவ்வளவு துன்பங்கள் வந்திருக்கும் என்று தெரியப்படுத்துகிறார். இதுபோல் என் வாழ்க்கையில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் என் அன்னையின் பார்வையில் தான் நடக்கிறது. அதைத்தான் நான் விரும்புகிறேன். என்னுடைய வேண்டுகோளே நான் அன்னை மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் ஒரு சிறு அளவு கூட குறையக்கூடாது என்பதுதான்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சிந்தித்தால் நான் எண்ணமாவேன். சிந்தனையை நிறுத்தினால் மௌனம் வரும். தொடர்ந்தால் சைத்திய புருஷனை அடையலாம். அதுவே எண்ணத்தைச் சரண் செய்ய முடியும். எனவே மனிதன் சிந்தனையை நிறுத்தவேண்டும்.

சிந்தனையை நிறுத்தி ஆத்மாவைக் காணவேண்டும்.

***** 

Comments

அன்பர் கடிதம் para 2, line 6

அன்பர் கடிதம்

para 2, line 6 - phoneபண்ண வேண்டும் - phone பண்ண வேண்டும்

 do.    do. 15 - Motherஎன்று - Mother என்று

 

 

 



book | by Dr. Radut