Skip to Content

04.சாவித்ரி

"சாவித்ரி"

P.28. Lain in the arms of Eternal's Peace.

         பிரம்ம சாந்தியின் மடியில் தவழுதல்

  • பிரபஞ்சத்தின் இதயம் அவனுள் துடித்தது.
  • சப்த பிரம்மம் ஜனிக்கும் குகைவாசம்.
  • சுவர்க்கம் சக்தியாகி மனத்தின் உறுதியை மகிழ வைக்கிறது.
  • பிரம்மாமிர்தம் பிரகிருதியின் பஞ்சாமிர்தம்.
  • உலகம் உலகநாதனின் உருவம்.
  • சாட்சி புருஷனின் சூட்சுமக் குகைகள்.
  • மறைந்த இரகஸ்யங்கள், இருட்டான திருட்டு வழிகள்.
  • அகக் கண் திறந்து அனைத்தையும் கண்டது.
  • கண்டமாகாத காலத்தின் கணக்கில்லாத கதவுகள்.
  • ஊனான உடலின் திரையான இருள்.
  • ஆதிசேஷன் காக்கும் அற்புத வாயில்.
  • பளபளக்கும் பாதையைப் பளிச்செனக் கண்டனர்.
  • மௌன இதயத்தின் மோன கீதம்.
  • புலப்படாத இடத்துப் புதுமை எழுந்தது.
  • சூன்ய அமைதி சூழ்ந்து நின்றது.
  • கற்பனைக்கெட்டாத கருத்து நடை பயிலும் அரங்கம்.
  • கடந்ததைக் கடந்த பரவெளி.
  • இரகஸ்யக் குரல் கேட்கிறது.
  • ஞானத்திற்குச் சொந்தமான சொல்.
  • அக உலகத்தின் பளிங்குக் கதவுகள்.
  • புத்துணர்வும், புதுப்பொலிவும் புல்லரிக்கும் வாழ்வு.
  • மேலுலகத் தரிசனம் மேன்மையாக எழுந்தது.
  • வானுலகம் வையகமாகும் வாழ்க்கைச் சுவடுகள்.

சாந்தியை அமைதி என்கிறோம். ஆர்ப்பாட்டமற்றது அமைதி. ஆன்மீகத்தில் அமைதி என்ற சொல்லுக்கு வழக்கில் இல்லாத பொருள் உண்டு. உறுத்தும் மனச்சாட்சிக்கு அமைதி கிடையாது. உறுத்தாத மனச்சாட்சிக்குப் பயம் கிடையாது. அமைதி அடுத்த கட்டத்திற்குரியது. மனம் சாட்சியை ஓர் உருவகத்தால் பெறுகிறது. சாட்சியை உருவாக்கியுள்ளது. உருவான சாட்சியை உறுத்தாமலிருப்பது அமைதியான வாழ்வு. சாட்சியின் உருவகம் கலைந்தால் கலைவது மனச்சாட்சியில்லை. மனம் கரையும். அது குழந்தையுள்ளம். அதுவே ஆன்மீக அமைதி. அமைதியான குழந்தை மனிதனாகி, மனச்சாட்சி பெற்று அது உறுத்தும்படியோ, உறுத்தாத வகையோ வாழ்கிறான். ஆன்மா விழிப்புற்றால், மனம் ஆன்ம ஜோதியில் அறிவை ஞானமாக்கி தன்னை அணுஅணுவாக இழந்து,கரைந்து மறைகிறது. மனம் மறைந்தபின் சாட்சி சொல்ல ஒருவரில்லை.

- ஆன்மா மனத்தைக் கரைத்து அமைதி வழங்கும்.
- பிரம்மம் மனத்தை பிரம்மமாக உயர்த்தி அமைதியை ஆன்மீகமாக்கும்.

****

ஸ்ரீ அரவிந்தம்

நோக்கம் என்பதே மனிதன். ஞானம், பக்தி, செயல் சேருமிடத்தில் மனிதனுக்கு நோக்கம் பிறக்கின்றது என்பதால் பகவத் கீதை நோக்கத்தைச் சரணம் செய்யச் சொல்கிறது.

நோக்கமே மனிதன்.

****** 

Comments

"சாவித்ரி"line no.21 -

"சாவித்ரி"

line no.21 - புதுப்பொலி வும் - புதுப்பொலிவும்

paragraph, line no.5 - உறுத்தாமலி ருப்பது - உறுத்தாமலிருப்பது



book | by Dr. Radut