Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

XI. Delight of Existence : The problem

Page Nos. 92 & 93 - Para No 5

11. ஆனந்தம் - கேள்வி

This is the ancient Vedantic theory.

இது வேதாந்தம்.

It is the theory of cosmic origins.

சிருஷ்டியை விளக்கும் தத்துவம் இது.

The human mind has two questions.

மனிதனுக்கு இரு கேள்விகள் உள்ளன.

Those questions arise at once.

அக்கேள்விகள் உடனே எழுகின்றன.

One is an emotional question.

ஒன்று உணர்ச்சியைப் பற்றியது.

The other is a sensational issue.

அடுத்தது வலியைப் பற்றியது.

Pain is one, evil is the other.

வலி, தீமை அவை.

They confront that theory.

வேதாந்தத்திற்கு முன் அவை எழுந்து நிற்கின்றன.

We say the world is Sachchidananda.

உலகம் சச்சிதானந்தம் என்கிறோம்.

The world is an expression of Sachchidananda.

உலகம் சச்சிதானந்த வெளிப்பாடு.

It is not only of existence but of consciousness.

உலகம் சத் மட்டுமன்று, சித்தும் ஆகும்.

It is not only consciousness but of self-delight.

உலகம் சித் மட்டுமன்று, ஆனந்தமுமாகும்.

That self-delight is infinite.

சுய ஆனந்தம் அனந்தம்.

We can admit the world is consciousness.

உலகம் ஜீவியமானது என்று ஏற்கலாம்.

If this is true, how do we explain pain?

அது உண்மையானால், துன்பத்தை எப்படி விளக்குவது?

How can we explain grief and suffering?

கவலை, வலி, சோகம் என்பவற்றை எப்படி அறிவது?

We take a good look at this world.

உலகை நாம் நன்கு கவனிப்போம்.

It has an appearance to us.

நாம் உலகின் தோற்றத்தைக் காண்கிறோம்.

It appears as a world of suffering.

அது துன்பமயமான உலகமாகக் காண்கிறது.

It does not appear as a world of delight.

இன்பமயமாக உலகம் காட்சியளிக்கவில்லை.

It is only a view.

இது நம் கண்ணோட்டம்.

It is an exaggeration.

சற்று மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டமிது.

It is an error of perspective.

இது நம் நோக்கத்தின் குறை.

We can be dispassionate.

நாம் விருப்பு வெறுப்பில்லாமல் காண முயல்வோம்.

We shall try to know accurately.

துல்லியமாகக் காண முயல்வோம்.

Let us appreciate the world unemotionally.

உணர்ச்சி வசப்படாமல் உலகை அறிவோம்.

Then we see the truth.

அப்பொழுது உண்மை விளங்கும்.

Let us know the sum of pain of existence.

உலகில் உள்ள மொத்த வலியையறிவோம்.

Let us also know the sum of pleasure of existence.

உலகில் உள்ள இன்பத்தின் தொகுப்பைக் காண்போம்.

We now see pleasure is more than pain. (In one individual, it may be different)

இன்பம் மிகையாக இருப்பது தெரிகிறது. (தனிப்பட்ட ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்)

Our existence is active.

வாழ்வு சுறுசுறுப்பானது.

It is also passive.

வாழ்வு எதிராகவுமிருக்கும்.

Our existence is on the surface.

நம் வாழ்வு மேலெழுந்தது.

Existence also underlies the surface.

அடியிலும் வாழ்வுள்ளது.

It is the normal state of nature.

இதுவே இயற்கையின் இயல்பு.

Pleasure is, we find, our normal state.

இன்பம் இயல்பானது என்ற தெளிவு ஏற்படுகிறது.

Pain is a contrary occurrence.

வலி என்பது எதிரானது.

But it is temporary.

வலி தற்காலிகமானது.

Here lies the reason for us to feel pain acutely.

ஏன் வலி முக்கியமாக இருக்கிறது என்பதற்கு இதுவே காரணம்.

The larger sum of pleasure is unseen.

வாழ்வு முழுவதும் உள்ள இன்பம் தெரிவதில்லை.

The lesser sum of pain looms large.

சிறிதளவுள்ள வலி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.

Pain, therefore, affects us more acutely.

அதனால், வலி மிகைப்பட்டுக் காண்கிறது.

Precisely because pleasure is normal, we do not treasure it.

இன்பம் இயல்பானது என்பதால் நாம் அதன் அருமையை உணர்வதில்லை.

We hardly observe the pleasure in our life.

நம் வாழ்வில் சந்தோஷத்தை நாம் கவனிப்பதில்லை.

Sometimes pleasure intensifies into an acute form.

சில சமயங்களில் இன்பம் உயர்ந்து தீவிரமாகும்.

Its acute form is ecstasy or a crest of joy.

பூரிப்பு அதன் தீவிரம். ஆனந்தத்தின் அலை எனலாம்.

We call this crest of joy, delight.

ஆனந்த அலையை நாம் பேரானந்தம் என்போம்.

We seek ecstasy and delight.

நாம் பூரிப்பையும், ஆனந்தத்தையும் நாடுகிறோம்.

Normally there is satisfaction in life.

பொதுவாக வாழ்வில் திருப்தியுண்டு.

It is always there.

அது எப்பொழுதும் உள்ளது.

It is there regardless of events or particular causes.

அது நிகழ்ச்சிகளையோ, ஒரு குறிப்பிட்ட காரணத்தையோ பொருத்ததன்று.

We take everything neutrally.

இவையெல்லாம் நம் கணக்கில் சேரா.

Rather we take it for granted.

இவை இருப்பது, இருக்க வேண்டியவை என நாம் கருதுகிறோம்.

It is neither pleasure nor pain.

இது இன்பமுமில்லை, துன்பமுமில்லை.

It is there as a great practical fact.

அது நடைமுறைக்குரிய பெரிய யதார்த்தமான செயல்.

It is universal.

அது பொது.

It is an overpowering instinct of life.

வாழ்வுக்கு இது முக்கிய உணர்வு.

It is our self-preservation.

நாம் நம்மைக் காப்பாற்றுவது இது.

But we do not seek it, as it is there.

இது இருப்பதால், நாம் இதைத் தேடுவதில்லை.

Our joy is our profit.

இன்பம், லாபம்

Our pain is our emotional loss.

துன்பம் உணர்வுக்கு நஷ்டம்.

They draw our balance sheet.

இவையிரண்டும் நம் வரவு செலவுக் கணக்கு.

We do not enter our profit and loss properly

நாம் நம் வரவையும், செலவையும் சரிவர எழுதுவதில்லை

Only our positive pleasures are entered there.

பெரிய சந்தோஷங்களை மட்டும் அதில் குறிக்கிறோம்.

Our discomfort is entered as loss.

நம் தொந்தரவுகளையும் எழுதுகிறோம்.

Pain is entered as debit.

வலியைச் செலவுக்கணக்காக எழுதுகிறோம்.

Pain affects us more intensely.

வலி நம்மை அதிகமாகப் பாதிக்கிறது.

It is so as it is abnormal.

வழக்கத்திற்கு மாறாக இருப்பதால் அதிக பாதிப்பு.

It is not normal to our being.

வலி நம் ஜீவனுக்கு வழக்கமானதில்லை.

It is contrary to our natural tendency.

நம் இயல்பான வாழ்க்கைக்கு வலி மாறானது.

Pain is experienced as an outrage.

வலியை நாம் பெரிய தவறாகக் கருதுகிறோம்.

It is an outrage on our existence.

சிருஷ்டியின் வாழ்வுக்கு வலி ஒரு தடை.

Pain is an offence on what we are.

நாம் வாழ நினைக்கும் பாணிக்கு வலி ஒரு எதிர்ப்பு.

It is an external attack on what we seek to be.

நாம் தேடும் இலட்சியத்தைப் புறத்தில் எதிர்ப்பது வலி .

Page No. 93, Para No. 6


 

Ours is a philosophical inquiry.

நாம் பேசுவது தத்துவம்.

This is not downright practice.

இது அன்றாட நடைமுறையில்லை.

As long as pain is there, we must explain it.

வலி இருப்பதால், அதை விளக்குவது அவசியம்.

Whether the sum of pain is greater or lesser is not the issue.

வலியின் தொகுப்பு பெரியதா, சிறியதா என்பது பேச்சில்லை.

Whether it is abnormal or not does not matter.

வலி வழக்கத்திற்கு மாறானதா, இல்லையா என்பதும் பிரச்சினை இல்லை.

The fact is, pain is there.

வலியிருப்பது உண்மை.

It is present in man.

மனிதன் வலியை அறிவான்.

The whole problem is its presence.

ஏன் வலியிருக்கிறது என்பதே கேள்வி.

We say, all is Sachchidananda.

அனைத்தும் சச்சிதானந்தம் என்கிறோம்.

Then, how can pain enter or exist?

அப்படியானால் வலி எப்படி வரும், இருக்கும்?

How do we understand suffering?

துன்பத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

This is the real problem.

அதுவே உண்மையான பிரச்சினை.

There is a further confusion.

மேலும் ஓர் குழப்பம் உண்டு.

It is a false issue.

அது பொய்யானது.

We assume an extracosmic God.

உலகுக்கு வெளியில் கடவுளிருப்பதாக நாம் நினைக்கிறோம்.

It is a partial issue.

இது பகுதி.

It is the ethical difficulty.

இது தார்மீகமான சிரமம்.

The farther confusion comes from this idea.

இப்படி நினைப்பதால் பெருங்குழப்பம் எழுகிறது.

Contd...

தொடரும்...

Comments

லைப் டிவைன்   After Page Nos.

லைப் டிவைன்   

After Page Nos. 92 & 93 - Para No.5 is missing.

Sentence No. 25 - துல்யமாகக் - துல்லியமாகக்

    do.              70 - வலிமாறானது. - வலி மாறானது.

    do.              72  - வலிஒரு தடை. - லி ஒரு தடை.

     do.                   73 - லிஒரு எதிர்ப்பு.  - லி ஒரு எதிர்ப்பு.

Under Page No. 93, Para No.6 - Sentence No.10 - லிஎப்படி - வலி எப்படி



book | by Dr. Radut