Skip to Content

13.கம்ப்யூட்டர் - அன்னை

கம்ப்யூட்டர் - அன்னை

"நான் 8ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டதை என் மகன் 3ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டான்'' என்று இன்று நாம் கூறும்படி சிறந்த பள்ளிகளில் தரம் உயருகிறது. இது என்றும் பெரிய பள்ளிகளிலிருந்தது. இன்று பரவி வருகிறது. கம்ப்யூட்டரில் CD மூலம் எல்லா வகுப்புப் பாடங்களையும் குழந்தை ஆசிரியர் உதவியில்லாமல் கற்கும்படி வந்துள்ளது. ஆசிரியர் அதுபோல் சொல்லித் தரமுடியாது. அத்துடன் கம்ப்யூட்டர் குழந்தையின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பாடத்தை அமைப்பதால், 1 வருஷத்தில் பள்ளியில் படிப்பதை குழந்தை 1 மாதத்தில் கற்கிறது. குழந்தை கம்ப்யூட்டரை விட்டு வாராது.

இந்த CDக்கள் வந்துவிட்டதால், படிக்க ஆர்வமுள்ளவர்கள், எந்த வகுப்பில் பள்ளியிலிருந்து  நின்றிருந்தாலும், எந்த வகுப்புவரை படிக்க விரும்பினாலும் இனி முடியும். S.S.L.Cயுடன் நின்றவர் 38ஆம் வயதில் படிக்க முயன்றால் கம்ப்யூட்டர் 1 ஆண்டில் அவரை B.A. or M.A ஆக்கும். கல்வித் துறையில் இது பெரிய புரட்சி. உலகம் அனைத்தும் பலன் பெறக் கூடிய புரட்சி.

Internet இதே காரியத்தை எல்லாத் துறைகளிலும் செய்கிறது. வக்கீல் சொல்ல வேண்டியது, டாக்டரிடம் கேட்க வேண்டியது, tourism information பேராசியர்களிடம் பயிலவேண்டியது ஆகியவற்றை ஆர்வமுள்ளவர் internetஇல் இன்று பயிலலாம்.

- நின்றுவிட்ட படிப்புக்கு உயிர் கொடுத்தது கம்ப்யூட்டர்.

- எவரும் எந்தத் துறையிலும் நிபுணராகலாம் என்பதை internet சாத்தியமாக்கியுள்ளது.

இவை புதிய டெக்னாலஜி உலகுக்கு அளித்த நம்பமுடியாத பரிசுகள். 80 ஆண்டுகளாக அன்னை எவரும் எதையும் சாதிக்கலாம் என்று எழுதிவருவதை அறிந்தும், அதன் பலனை நாம் உணரமுடியாமலிருக்கிறோம். S.S.L.Cயுடன் நின்ற 40 வயதானவர் கம்ப்யூட்டர் மூலம் ஓராண்டில் M.A.. பட்டம் எடுத்தால், அவர் முயற்சியுடையவர். அவருக்கு அந்த அனுபவம் முடிந்தபின் S.S.L.C.படிக்கும் தன் மகனுக்கு M.A பாடம் கற்பிக்க அன்னை மீதுள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தினால், அன்னையின் அருள் செயல்படும் வேகமும், அம்முறையின் அற்புதமும் புரியும். அவர் ஓராண்டில் பெற்றதை அதே கம்ப்யூட்டர் மகனுக்கு ஒரு மாதத்தில் தரும்.

****


 

Comments

கம்ப்யூட்டர் - அன்னை para 1,

கம்ப்யூட்டர் - அன்னை

para 1, line 4 - CDமூலம் - CD மூலம்

do.       do.  5 - சொல்லி த்தர  - சொல்லித்தர

do.       do.  8 - from இந்த CDக்கள் வந்துவிட்டதால், to  பலன் பெறக் கூடிய புரட்சி. - separate paragraph

para 1, line 12 - B.A. Or M.A - B.A. or M.A



book | by Dr. Radut