Skip to Content

12.உயர்ந்த உள்ளமும் "உன்னதமான'' மனநிலையும்

உயர்ந்த உள்ளமும் "உன்னதமான'' மனநிலையும்

முதலாளி கம்பனி நஷ்டமடைவதால், மூடிவிடத் தீர்மானித்தார். முதலாளிக்குப் பல தொழில்கள். அதில் இது ஒன்று. மானேஜருக்கு உயர்ந்த உள்ளம். கம்பனியை மூடக்கூடாது எனத் தீர்மானித்து, தம்முடைய செலவில், தம்மால் முடிந்த காரியங்களைச் செய்தபொழுது எதிர்பாராத நல்ல பலன் கிடைத்தபொழுது, "இந்தக் கம்பனி மூடப்பட வேண்டியதில்லை'' என முதலாளி மனம் கூறியது. மானேஜர் செய்தது முதலாளிக்குத் தெரியாது. அதனால் அவருக்கு ஏற்பட்ட செலவையும் முதலாளி அறியவில்லை.

ஒரு பெரிய (spurt) நல்ல மாறுதல் ஏற்பட்டதால் கம்பனி தொடர்ந்து நடந்தது. மானேஜர் தாம் சொந்தமாகத் தம் செலவில் செய்ததை, முதலாளி தாமே செய்யவேண்டும் என விரும்பினார். முதலாளி ஒத்துக்கொண்டார். நஷ்டமான கம்பனி, இலாபகரமாக மாறாவிட்டாலும், நஷ்டமில்லை என்ற நிலைக்கு வந்தது. முதலாளிக்குத் திருப்தி இல்லை. கம்பனியை விற்க முயன்றார். மானேஜருடைய அரைகுறை முயற்சியால் கம்பனி இலாபமும், நஷ்டமும், இரண்டும் கெட்டான் நிலையிலிருந்தது. மூடும் கம்பனியை தம் முயற்சியாலும், செலவாலும் நிமிர்த்த முன்வரும் மானேஜர் மனிதரில்லை, தெய்வம். அப்படிப்பட்டவரை நாம் நடமாடும் தெய்வம் என்கிறோம். நல்லெண்ணம் பெரியது.

சுபாவம் நல்லெண்ணத்திற்குக் கட்டுப்படாது. இவர் பொறுப்பில்லாதவர், வேலையே செய்யாத முழுச் சோம்பேறி. ஒரு மானேஜருக்கு இருக்கக்கூடாத அத்தனை குணங்களும் உள்ளவர், மானேஜர் வேலைக்குத் தகுதியில்லாதவர். இனியவர், நம்பிக்கையுடையவர், அன்பர். இவ்வளவும் நடக்கும்பொழுது இவர் துறையில் அகில இந்தியக் கழகம், இக்கம்பனியை இந்தியாவில் முதலாவதாகத் தேர்ந்தெடுத்து விருது அளிக்க முடிவு செய்தது. மனிதர் நல்லவர், ஆனால் நல்ல குணத்தைப் பூரணமாக்கும் பொறுப்பற்றவர். பொறுப்பற்றவருக்கும் அருள் அகில இந்தியப் பரிசு தருவதால், இவர் பொறுப்புள்ளவரானால் இக்கம்பனிக்கு முதலாளியாவார்.

அன்னை கம்பனியைச் சொத்தாக அளிக்கிறார். நாம் பெறுவது விருது. விருது பெறும் சொத்து அதிர்ஷ்டமாகக் காத்திருக்கிறது.

*****

Comments

உயர்ந்த உள்ளமும் "உன்னதமான''

உயர்ந்த உள்ளமும் "உன்னதமான'' மனநிலையும்

para 2, line 7 - நிலையிலி ருந்தது - நிலையிலிருந்தது



book | by Dr. Radut