Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

741) ஞானம் முழுமை பெற்று கூர்மையானால் செயலை நிர்ணயிப்பது எது எனத் தெரியும். ஹாம்லெட், சிம்போசியம் எப்படி எழுந்தன எனத் தெரிந்தால் ஞானம் கூர்மை பெறும்.

இலக்கிய சிறப்பறியும் ஞானம்.

விஞ்ஞானம் உலகை வளமாக்கியுள்ளது. பொருள்கள் எப்படிச் செய்யப்படுகின்றன என அறிவதால், விஞ்ஞானியால் அவற்றைச் செய்ய முடிகிறது. செயற்கையாகப் பொருள்களைக் கண்டுபிடிப்பதாலும், இயற்கையாகவுள்ள பொருள்களின் தன்மையை அறிவதாலும் நாம் வசதியாகவும், வளமாகவும் வாழ்கிறோம்.

செடியில் தான்யம் விளைவதைக் கண்டுபிடித்ததால், விவசாயம் ஏற்பட்டது. கல்லைச் சுத்தியலாகப் பயன்படுத்த முடியும் என்று ஆரம்பித்து இன்று பல்வேறு சுத்திகளை டெக்னாலஜி கண்டுள்ளது. எழுத்தாணி, பேனா, துணி, பேப்பர், வீடு கட்டுவது போன்ற இலட்சக்கணக்கான பொருள்களைக் கண்டுபிடித்துள்ளோம். வயிற்றிலுள்ள பிள்ளை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிடுவான் என்று அன்று கூறியது இன்று உண்மையாகிவிட்டது.

விஞ்ஞானம் உலகில் எப்படி மரம் வளர்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டது, ஏன் வளருகிறது எனக் காணவில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

எப்படி வைரம், முத்து, செடி, விதை வளர்கின்றன என விஞ்ஞானம் கண்டுபிடித்ததால் நம்மால் வைரத்தையும், முத்தையும் செய்ய முடிகிறது. செடியையும், விதையையும் சிறப்பிக்க முடிகிறது. ஏன் அவை உற்பத்தியாகின்றன எனக் கண்டுபிடித்தால் வாழ்வுக்கு நாம் அடிமைப்படுவதற்குப் பதிலாக, நமக்கு வாழ்வு கட்டுப்படும்.

விதையிலிருந்து செடி எப்படி வருகிறது என விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் ஏன்? என்ற கேள்விக்கு அங்குப் பதில்லை. உலகம் விதையையும் விளக்கவல்லது. உலகத்தை இறைவன் விளக்குகிறார் என ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார்.

அந்த விளக்கம் ஆத்ம ஞானமாகும்.

Cosmic Determinants என்ற அத்தியாயத்தில் Life Divineஇல் ஸ்ரீ அரவிந்தர் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறார். அவர் கூறும் பதில்:

"இறைவன் திருவுள்ளம்'' என்பதே.

நம் எண்ணமும், இறைவனின் திருவுள்ளமும் இணையும்பொழுது நமக்குத் திருவுள்ளம் புரியும். அதுவரை செயலின் போக்கை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சமர்ப்பணம். சமர்ப்பணம் சரணாகதியாகி, மனித மனம், இறைவனின் திருவுள்ளமாகும். உபநிஷத்தில் கூறுவதை பகவான் எடுத்துக்கூறி இவ்விளக்கத்தைத் தருகிறார்.

இந்திய விஞ்ஞானி திருவுள்ளத்தை அறிந்தால் - அவனால் அது முடியும் என்பதால் - விஞ்ஞானமும், ஆன்மீகமும் இணையும் அல்லது யோகி விஞ்ஞானியாக வேண்டும். உலகில் இத்துறைகள் இணைவது மாபெரும் மாறுதலாகும்.

விஞ்ஞானம் கண்டுபிடிக்காததில்லை எனலாம். Gene, Chromosome, ஜீன், குரோமசோம் என்பவை எப்படி மனிதன் உயரம், முடியின் நிறம் போன்ற விவரங்களை நிர்ணயிக்கின்றன என்பதைக் கண்டுள்ளனர். சந்திரனுக்குப் போய்த் திரும்பிய ராக்கட் பூமியில் திரும்பிவரும் நேரத்தைக் கணக்கிட்டனர். அதுவும் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தது. 9 செகண்ட் தாமதம் எனக் கணக்கிட்டனர். உலகின் விஞ்ஞான வளர்ச்சியை விவரிக்க வேண்டிய அவசியமில்லை. விஞ்ஞானம் அந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

பகவான் இக்கருத்தை மேலும் வளர்த்து விளக்குகிறார். ஷேக்ஸ்பியர் ஹாம்லெட் எழுதினார். அவரும், அவர் படைப்பும் உலகப் பிரசித்தியடைந்தன. மனிதனுடைய உயரம், நிறம் போன்ற அத்தனை விவரங்களையும் நிர்ணயித்த விஞ்ஞானம் ஹாம்லெட் எழுதிய ஷேக்ஸ்பியரின் மூளையில் எந்த மாற்றம், இந்த படைப்புக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கவில்லை. விதையிலிருந்து மரம் வளரும் எல்லா நிலைகளையும் துல்லியமாகக் கூறும் விஞ்ஞானம், விதை எப்படி மரத்தின் உருவத்தைப் பெறுகிறது எனக் கூறமுடியவில்லை. இன்றுவரை விஞ்ஞானம் காணாதது இது. காணமுடியாது என விஞ்ஞானிகள் கருதுவதும் இதுவே.

ஹாம்லெட் எழுதப்பட்டது எப்படி என்றாலும், அடுத்த நிமிஷம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்றாலும் ஒன்றே. அதை நிர்ணயிப்பது எது என்பது காணமுடியாததாக இருக்கிறது. பூரணயோகம் அதைக் காணமுடியும் என்று விளக்குகிறது. இது சிருஷ்டியின் இரகஸ்யம். Life Divine அந்த இரகஸ்யத்தை உலகுக்கு முதன்முதலாக அளித்துள்ளது.

நாம் பெற்ற ஞானம் அஞ்ஞானமாகும். அதை 7 வகைகளாகப் பிரித்து முதலில் செய்வதறியாமல் இருப்பதும், முடிவாக ஆதியை அறியாததும் என்று கூறி இடைப்பட்ட நிலைகளில் நம் ஜீவனின் பகுதிகளை அறியாதது, நாம் வாழும் உலகில் பகுதிகளை அறியாதது, காலத்தை அறியாதது, பிரபஞ்சத்தை அறியாதது, சிருஷ்டியை அறியாதது என 5 அஞ்ஞானங்களைக் கூறுகிறார். ஒரு காரியம் பூர்த்தியாக நாம் என்ன செய்யவேண்டும் என்று அறியாதது practical ignorance நடைமுறை அஞ்ஞானம். ஞானம் முழுமை பெறும் நிலையில் செய்வது பூர்த்தியாகும். செய்வது பூர்த்தியானால் ஞானம் முழுமை பெறும்.

ஞானம் முழுமை பெற்றால் செய்யும் காரியங்களில் ஒன்றுகூட கெட்டுப்போகாது. ஞானம் கூர்மையானால் பூர்த்தியான காரியங்களின் பகுதிகள் தெளிவாகும். இது தத்துவம். பூரண யோகத்தைப் பொருத்தவரை நடைமுறைக்கு வாராத அம்சமேயில்லை என்று கூறலாம்.

பூரண ஞானம் பெறுவது சிரமம் என்றாலும், செய்யும் காரியங்களில் - மாநாடு நடத்துவது, திருமணம் செய்வது போன்றவற்றுள் - நாமறிந்த அனைத்தையும் அகந்தையின்றிச் செய்து முடித்தபின், அன்னையை அழைத்தால் காரியம் தவறாது பூர்த்தியாகும். இதற்குப் பூரண யோகத்தில் விலக்கில்லை.

இதைச் செய்ய எந்தத் தீவிர பக்தராலும் முடியும். தாம் கட்டும் வீட்டில் விவரங்கள் எப்படி எழுந்தன, எப்படிப் பூர்த்தியடைந்தன என்பவற்றை முழு ஆர்வம் உள்ள தீவிர பக்தர்கள் தவறாது காணலாம். அது ஞானத்தைக் கூர்மையாக்கும். நாம் செய்த காரியங்களுக்குள்ள ஞானம் கூர்மையாகும். அது பூரண ஞானக் கூர்மையைப் பெற வழி கோலும்.

****

742) பரம்பொருளே (Absolute) நிர்ணயிக்கிறான் என்பதால், ஹாம்லெட் எழுதியபோது பரம்பொருளின் நிலை எது என நாம் அறிய வேண்டும்.

ஹாம்லெட் எழுதிய பரம்பொருள்.

பேரிலக்கியம், அழியா இலக்கியம் எனச் சங்க இலக்கியம், திருக்குறள், தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், இராமாயணம், பாரதம், கீதை, வேதம், உபநிஷதம் ஆகியவற்றை நாம் விவரிக்கின்றோம். அச்சிட்டோ, வரிவடிவத்தாலோ இலக்கியங்களைக் காப்பாற்றுகிறோம். ஷேக்ஸ்பியர், மில்டன், டான்டே, ஹோமர்,அரிஸ்டாடில், பிளேட்டோ, சாக்ரடீஸ் ஆகியவரின் எழுத்து ஆரம்ப நாளிலிருந்து எழுதப்பட்டு காப்பாற்றப்பட்டது.

எழுதாவிட்டாலும், அழியாதது, அழியா இலக்கியம்,

என்று பகவான் கூறுகிறார். மொழிபெயர்ப்பாலும் அதன் உயர்வு குறையாது என்கிறார். இவற்றை விளக்குவது தத்துவமாகும். எளிதில் விளங்காத தத்துவமாகவும் இருக்கும். கர்ணபரம்பரையாக வந்து இலக்கியம் காப்பாற்றப்படுகிறது என்பதையும் பகவான் ஏற்கவில்லை. அழியா இலக்கியம் சூட்சும உலகில் அழியாமல் நிலைத்திருப்பதால் அது உலகில் அழிய வழியில்லை என்கிறார்.

படைப்பு எனில் மனிதன் ரோடு போடுகிறான், வீடு கட்டுகிறான், ஆயுதம் செய்கிறான், நல்ல காகிதம் செய்கிறான். மனிதன் உற்பத்தி செய்பவை பொருள்கள் (material objects). அவை அவன் கையால் செய்யப்படுகின்றன, உழைப்பால் எழுகின்றன. மேஜையைச் செய்தால் மரம் உலுத்துப்போகும்வரை அது பயன்படுகிறது. அதன்பின் உடைந்து, உலுத்துப் போய் மண்ணோடு மண்ணாய், மனித உடம்பு போல் மறைகிறது. உடலால் உற்பத்தியாகும் ஜடப்பொருளின் நிலை அது.

கதாசிரியர், கவிஞன், எழுத்தாளன் என்பவர்கள் அறிவாலும், உணர்வாலும் சொல் வடிவத்தில் சிருஷ்டிக்கின்றனர். பலர் எழுத்து அழிந்து மறைகிறது. சில நின்று நிலைக்கின்றன. ஆனால் ஓரிரு நூற்றாண்டில் மறைகின்றன. படைப்பு வேகமாகப் பரவி விரைவில் மறைவதுண்டு. மெதுவாகப் பரவி சில நூறு ஆண்டுகள் இருப்பதுண்டு. காலத்தால் ஏற்பட்ட இலக்கியம், காலம் மாறினால் மறைகிறது. மணிப்பிரவாளம் என்றொரு தமிழ் நடை சென்ற நூற்றாண்டில் இருந்ததையே இன்று நம் உலகம் அறியாது. '40, '50இல் பிரபலமான நாவல்களை இன்று எத்தனை பேர் படிக்கின்றார்கள்? என்றும் அதுபோல் இலக்கியம் எழுந்து மறைவதுண்டு. காலத்தைப் பிரதிபலிக்கும் கருத்து, அதைக் கடந்து ஏற்கப்படாது.

எந்த நாட்டிலும் அழியா இலக்கியங்களாக ஏற்பட்டவை இன்று உலக இலக்கியங்களாகத் திகழ்கின்றன. மனிதன் கையால் உற்பத்தி செய்வதைப்போல் உணர்வாலும் உருவத்தை உற்பத்தி செய்ய முடியும். கற்பனையாலும் சிருஷ்டிக்க முடியும். இன்று மனிதனுடைய கற்பனையின் சிருஷ்டித்திறன் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், (material plane) பொருள்களை சிருஷ்டிக்கும் திறனைப் பெறவில்லை என வேதாந்தம் கூறுகிறது. ஆனால் அதே திறன் (subtle plane) சூட்சுமத்தில் சிருஷ்டிக்கவல்லது. சூட்சும உலகில் எண்ணம் சஞ்சரிப்பதால், எண்ணத்தால் உருவகம் பெறுபவை சூட்சும உலகுக்குரியவை. சிருஷ்டி என்று நாம் இங்குக் கூறுவது அழியாத சிருஷ்டி. பரம்பிரம்மம் ஒருவரில் - ஒரு கவியின் மனதில் - எழுந்தால், அது சூட்சும உலகில் எண்ணமாக, கதையாக, சொல்லாக, கவியாக சிருஷ்டிக்கப்பட்டால், அது உலவி வரும்பொழுது பரப்பிரம்மம் இருக்கும் இடத்தை எல்லாம் தொடும், தொட்டு உயிர்ப்பிக்கும். நம் எல்லோரிலும் பரப்பிரம்மம் இருப்பதால் கவிஞனின் படைப்பு சூட்சுமத்தில் எழுந்து நம்முள் உள்ள பரப்பிரம்மத்தைத் தொடும்பொழுது அது இனி அழியமுடியாது என்ற நிலையை அடைகிறது.

கவிஞனின் மனத்துள் பரப்பிரம்மம் எழுந்து, சூட்சும உலகில் எண்ண உருவில் இலக்கியமாகி, மாந்தரின் மனத்துள் உள்ள பரப்பிரம்மத்தைத் தொடுவதால், எழுத்து இலக்கியமாகிறது. அதுவே பேரிலக்கியம், அழியா இலக்கியம் எனப்படுவதாகும்.

முன்சீப் கோர்ட்டில் தீர்ப்பு சொல்கிறார்கள் எனில், அத்தீர்ப்பு ஒரு சட்டத்தின் பேரால் தரப்படுகிறது. சட்டம் என்பதை கோர்ட் போடவில்லை. சட்டம் சர்க்கார் போட்ட சட்டம். சர்க்கார் என்பது பார்லிமெண்ட். மேலும் சொன்னால், பார்லிமெண்ட் போட்ட சட்டமும் அரசியல் நிர்ணயச் சட்டத்தால் (constitution) தீர்மானிக்கப்பட்டது.

  • முன்சீப் கொடுத்தது தீர்ப்பானாலும், நிர்ணயித்தது constitution அரசியல் நிர்ணயச் சட்டமாகும்.
  • ஷேக்ஸ்பியர் ஹாம்லெட்டை எழுதினாலும், எழுதுவதை நிர்ணயித்தது பரம்பொருளேயாகும்.
  • நம் காபியில் எவ்வளவு சர்க்கரை போடவேண்டும் என்பதை நிர்ணயிப்பதும் பரம்பொருளே என்கிறார் அன்னை.

Absolute என்பது பரம்பொருள். நமக்கோ, நம் மனத்திற்கோ, பரம்பொருளுடன் நேரடியான தொடர்பில்லை. சத்திய ஜீவியத்திற்கு நிரந்தரமான நேரடியான தொடர்புண்டு. மனம் அடிப்படையில் சத்திய ஜீவியமாகும். ஹாம்லெட் எழுதியபோது சத்திய ஜீவியத்தில் பரம்பொருளின் நிலை என்ன என்று தெரிந்தால் அது ஞானமாகும். மனமும் சத்திய ஜீவியத்தில் உற்பத்தியானது என்பதால் கேள்வி மாறி, "ஹாம்லெட் எழுதியபொழுது ஷேக்ஸ்பியரின் மனநிலை என்ன?'' என்று வரும்.

நம் காரியங்கள் கூடி வரும் பொழுது கேள்வி எழுவதில்லை. கெட்டுப் போகும்பொழுது கேள்வி எழுகிறது. கூடி வருவது பரம்பொருளால், கெட்டுப்போவதும் பரம்பொருளால் என்ற முடிவு மனத்தைக் குழப்புகிறது.

குழப்பத்திற்குக் காரணம் மனமில்லை, அதன் ஆதியான சத்திய ஜீவியமுமில்லை. நாம் அகந்தையுள்ளிருப்பதால், குழப்பம் அகந்தைக்கு எழுகிறது.

  • காரியம் கூடிவந்தால் நேராகப் பூர்த்தியாகிறது.
  • காரியம் கெட்டுப்போனால் வேறு பாதை மூலம் பிறகு கூடி வருகிறது.
  • காரியம் கூடி வருவது திருவுள்ளம்.

காரியம் கெட்டுப்போவது திருவுள்ளம்.

நாம் கெட்டுப் போயிற்று என அறிவது இறைவன் காரியம் கூடி வருவதாகும்.

"கெட்டுப் போவதை'' "கூடி வருவதாக'' அறிவது பிரம்ம ஞானம்.

  • நெடுநாள் கழித்து யோசனை செய்தால் இதனுள் உள்ள அர்த்தம் புரியும்.
  • நெடுநாள் கழித்துப் புரிவது காலத்திற்கு உட்பட்ட மனத்தின் செயல்.
  • "கெட்டுப் போகும்'' பொழுதே "கூடிவருவதாக'' அறிவது காலத்தைக் கடந்த மனம்.
  • காலத்தையும் அதைக் கடந்த நிலையையும் சேர்ப்பது சைத்தியப் புருஷன்.
  • அந்நிலை துறவறத்தில் இல்லறம். அதற்குத் தோல்வியேயில்லை.
  • பூரண யோகத்திற்குரிய நிலை - சைத்தியப்புருஷன்.

****

743) உடலுணர்வே நிர்ணயித்தால் நாம் ஜடத்தில் - உடலில் - வாழ்கிறோம். விருப்பு வெறுப்புகள் உணர்வு நிலைக்குரியன. நல்லது கெட்டது மனத்திற்குரியன.

தீமையற்ற நல்லது என மனம் அறிவது சத்திய ஜீவியம்.

ஜடத்தின் உடல் உணர்வு.

களைப்பு மேலிட்டபொழுது, நாம் தூங்கும்பொழுது, உடலை மீற முடியாது. அது உடல் நிர்ணயிப்பதாகும். அதுபோல் ஒருவன் செயல்கள் உடலால் மட்டும் நிர்ணயிக்கப்பட்டால் அவன் ஜடமான மனிதனாவான். பொதுவாக நாம் மண்ணாங்கட்டி என்பது அவன் போன்றவர்களையேயாகும். உடலுணர்வுள்ளவன் சுறுசுறுப்பாக இருந்தால் அவன் சுறுசுறுப்பான மண்ணாங்கட்டியாவான். அறிவில்லாமல் சம்பிரதாயத்திற்காக ஆன்மீகப் பொக்கிஷங்களை கட்டாயப்படுத்தி குழந்தைகளை மனப்பாடம் செய்யச் சொன்னால்,அறிவு வளராது, எரிச்சல் எழும். எரிச்சலை வெளிப்படுத்த முடியாவிட்டால் விரக்தி வரும். முடிவாக அவனுக்குச் சுறுசுறுப்பு வரும். அவனே சுறுசுறுப்பான மண்ணாங்கட்டி.

தெருவில் மேள சத்தம் கேட்டால் உள்ளே உட்கார முடியாது. கடைவீதி வழியே வரும்பொழுது கண்கவரும் பொருள்களைக் கடையுள்ளே கண்ணால் பார்த்தால் வாங்கவில்லை என்றாலும் உள்ளே போய்ப் பார்க்கத் தோன்றும். அவன் விருப்பாலும், அதன் எதிரான வெறுப்பாலும் உந்தப்படுவான்.

மனிதன் என்ன செய்வான்? பசி எடுத்தால் அத்தனையும் பறந்து போகும். பசித்தவன் எப்படித் திருடாமலிருக்க முடியாதோ அதுபோல் நம்மால் பல காரியங்களைச் செய்யாமலிருக்க முடியாது என்பதை எவரும் புரிந்துகொண்டாலும், அனைவரும் ஏற்கமாட்டார்கள். பசித்தால் திருடுபவனால் ஊரையோ, உலகத்தையோ, நாகரீகமான நல்ல பழக்கத்தையோ ஏற்படுத்த முடியாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது புலி என்பதே மனமுடைய மனிதன் நிலை. தேவையால் மட்டும் செயல்படுபவன் உடலாலான மனிதன். நியாயம் என்றால் மட்டுமே செய்பவன் நல்ல மனிதன்.

  • உடலுக்குரிய மனிதன் உணர்வற்ற ஜடம்.
  • உணர்ச்சியால் செயல்படுபவன் உணர்வுள்ள விலங்கு.
  • நல்லது கெட்டது என்ற பாகுபாடுள்ளவனை நாம் மனிதன் என்கிறோம்.

அன்னையும் பகவானும் கூறும் சத்திய ஜீவியம் இவற்றை எல்லாம் கடந்தது. நல்லது எனில் உலகில் உடனே தீமையிருக்கும். தீமை தனித்திருக்காது. எந்தக் கெட்ட மனிதனிடமும் ஒரு நல்ல குணமிருக்கும். மனிதன் அவற்றைப் பிரித்து நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தீமையற்ற நல்லது, நிழலில்லாத ஒளி, பொய்க் கலப்பற்ற சத்தியம் மனித வாழ்விலில்லை. உலகை ஒளிமயமாக்கும் சூரிய ஒளிக்கே அவ்வுயர்வில்லை. சூரிய ஒளியை ஆன்மீகச் சட்டப்படி ஜடத்தின் ஒளி (material light) என்கிறார்கள். ஒளி, ஜோதி ஏற்பட்ட நேரம் ஜடம் சிருஷ்டிக்கப்படவில்லை. அதுவே ஆன்மீக ஒளி (spiritual light). அதன் முன் சூரியன் கறுமையாகக் காணப்படுகிறான். அதேபோல் (spiritual darkness) ஆன்மீக இருட்டின் முன் நடுப்பகலுக்கு எதிரான நள்ளிரவு ஜோதிமயமாகும்.

                                                          தீமையற்ற நல்லது

சத்திய ஜீவியத்திற்குரிய   நல்லது   -------------------------

                                                          நல்லது X கெட்டது

கெட்டதற்கு எதிரான நல்லதன்று.


 

****

744) மனம் தன்னைக் கடந்து செல்ல சத்தியம், நன்மை, அழகு, அனந்தம், ஆகியவற்றை நாடி அங்கு நிலைக்கவேண்டும்.

மனத்தைக் கடந்த சத்தியம்.

Self-existent Good, தீமையற்ற நல்லது என்பது ஆன்மீகக் கருத்து. ஸ்ரீ அரவிந்தர் இதைப் பெரிய Gயை உபயோகப்படுத்தி எழுதுகிறார். அடிக்கடி குறிப்பிடுகிறார். அதேபோல் Knowledge, Joy, Force, Peace, Silence, ஞானம், சந்தோஷம், சக்தி, அமைதி, மௌனம் ஆகியவற்றையும் குறிப்பிடுகிறார்.

நாம் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தால் நேர்முகத் தேர்வில் அவர்கள் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது நம் அனுபவம், பட்டம், படிப்பு, பரிசு, நமக்குத் தெரிந்த பெரிய மனிதர்களைப் பற்றிப் பேசுவோம். "நான் திருடியதில்லை, ஜெயிலுக்குப் போனதில்லை,அடிதடி சண்டை எனக்குத் தெரியாது, பெண்களைக் கடத்தியதில்லை'' எனக் கூறுவதில்லை. இதுபோன்ற நடவடிக்கைகள் உள்ள ஊரிலிருந்து வரும் விண்ணப்பதாரரின் மனதில் இருப்பவை அவை. நம்மைப் போன்றவர் மனதில் அவை வருவதில்லை. ஏனெனில் அவை நம் வாழ்விலில்லை. நம்மை நல்ல குடிமகன், a good citizen என்பார்கள். திருடு, பொய், ஜெயில், சண்டை, கடத்தலறியாத குடிமகனை நல்லவன் என்கிறோம். ஆன்மாவின் அம்சங்களில் பல நன்மை, ஞானம், அழகு, சந்தோஷம். அவை மனித வாழ்வில் வந்தால் இங்குள்ள தீமை, அறியாமை, விகாரம், கவலையுடன் கலந்துவிடுகின்றன.

ஆரம்பத்தில் நன்மைக்குத் தீமை தெரியாது. எதிரான அம்சம் இருப்பதே தெரியாது. அதுவே தீமையற்ற நன்மை.

மனம், வாழ்வு, உடல் - கீழ் உலகம். சத்திய ஜீவியம், சச்சிதானந்தம் - மேல் உலகம். கீழ் உலகில் நல்லதும் கெட்டதும் கலந்துள்ளன. நாம் பிரித்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். மேல் உலகில் கலப்பு இல்லை. நல்லது மட்டும் உண்டு.

  • கலப்பு மனத்திற்குரியது.
  • கலப்பற்ற தூய்மை சத்திய ஜீவியத்திற்குரியது.
  • கலப்பான நிலையைக் கடந்து கலப்பற்ற நிலையை அடைந்தால் மனத்தைக் கடக்கலாம்.

நாம் எங்குள்ளோம் என எப்படி அறிவது?

மனத்தில் தவறு, குறை, கெட்ட எண்ணம், பொறாமை, சந்தேகம் எழுந்து அவற்றை விலக்கி நாம் முறையாகச் செயல்பட்டால் நாம் மனத்திற்குரியவராவோம். அவை எழாவிட்டால், எழுந்து விலக்கும் நிர்ப்பந்தம் இல்லாவிட்டால் நாம் மனத்தைக் கடந்த நிலையிலிருக்கிறோம். மடையனுக்கு சந்தேகம் எழாது. அவனுக்குச் சந்தேகம் எழும் அளவுக்கு அறிவில்லை. நாம் மடமையிலிருந்து செயல்படுகிறோமா? மனத்தைக் கடந்த நிலையிலிருந்து செயல்படுகிறோமா என நாம் அறிவோம்.

  • மனத்தில் தவறு இருந்து அதை விலக்கி, அதனால் பாதிக்கப்படாத முறையில் செயல்படுகிறோம். இது overmental capacity தெய்வங்கட்குரிய சக்தி.
  • மனத்திலுள்ள குறையை ஆராய்ந்து அதனுள் உள்ள மெய்யைக் கண்டு அதன் மூலம் அதன் குறையை நிறைவாகச் சில சமயங்களில் மாற்றுகிறோம். அது சத்தியஜீவியத்திறமை.
  • மனக்குறை நம் செயலைக் கெடுப்பது மனித நிலை, மனத்திற்குரிய நிலை.

குரங்கு மரத்திலுள்ள பழத்தைத் தின்கிறது. நரி ஆட்டை அடித்துச் சாப்பிடுகிறது. எச்சில் இலைச் சோற்றை மனிதன் விரும்பி போட்டி போட்டு எடுத்துச் சாப்பிடுகிறான். விலங்கினமும், அதை ஒத்த மனிதனும் பசி என்பதால் நிர்ணயிக்கப்படுகிறார்கள். எச்சிலைச் சாப்பிடுபவன் சமூகத்தைச் சேர்ந்தவனில்லை. அவனைச் சமூகம் சேர்க்காது. எலியைக் கடித்துச் சாப்பிடும் பூனைக்கு மண், பாக்டீரியா, சுத்தம் கிடையாது. இவர்கள் ஜடத்தில் வாழ்பவர்கள். மனித நிலைக்குக் கீழ்ப்பட்டவர்கள்.

பங்காளி சண்டை, சம்பந்தி பூசல், பரம்பரை எதிரி என்பவர்கள் நட்பாலும், உறவாலும் வாழ்க்கையை நிர்ணயிப்பவர்கள். அரசியல் நண்பர்கள், எதிரிகள், வியாபாரக் கூட்டாளிகள், எதிரிகள் விருப்பு வெறுப்புக்குரியவர்கள். இவர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். இவர்களிடம் நியாயம் பேசமுடியாது. வேண்டியவனானால் நியாயம், வேண்டாதவன் ஆனால் தப்பு என்பதே கொள்கை. நல்லது எது என நினைக்க இவர்கட்கு நேரம் இருக்காது.

இலஞ்சம், காப்பியடிப்பது, திருமணமானபின் மனைவியைப் பணத்திற்காகக் கடுமைப்படுத்துவது, பொய் சொல்வது, திருடுவது போன்ற தவறுகளைச் செய்யாதவர் பெரும்பாலோர். செய்ய விரும்பி மனச்சாட்சி தடை செய்வதைக் காண்பவர் வேறு நினைப்புள்ளவர்கள். இவர்கள் அனைவரும் மனம் உடையவர்கள். மனச்சாட்சியால் ஆளப்படுபவர்கள், மனச்சாட்சியைத் தெய்வமாகக் கருதுபவர்கள்.

முதல் வகையைச் சேர்ந்தவர்களை physical type ஜடம் என்றும், அடுத்த வகையினரை உணர்ச்சிவசப்பட்டவரெனவும் emotional type, மூன்றாம் வகையினரை ethical mental type நல்லதற்குக் கட்டுப்பட்டவரெனவும் பிரிக்கிறோம். இதைக் கடந்த நிலையொன்றுண்டு. அதுவே அன்னைக்குரியது.

ஒரு வாட்ச்மேன் நியமிக்கவேண்டி பலரைச் சந்தித்தால் அவர்களில் சிலர், "நான் திருடமாட்டேன், நான் வேலை செய்த இடங்களில் விசாரித்துப் பாருங்கள்'' என்பார்கள். பட்டதாரிகளுக்கு வேலைக்குப் போகுமிடத்தில் அதுபோல் சொல்லத் தோன்றுவதில்லை. வாட்ச்மேன் வேலைக்கு வருபவர்கள் சிலர் திருட்டுப் பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், மற்றவர்கள் தாம் அதிலிருந்து மாறுபட்டவர் எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. பட்டதாரிகளில் திருடுபவர்களில்லை என்பதால் அதுபோல் அவர்கள் பேசுவதில்லை

  • முதல் வகையில் திருட்டுக் கூட்டத்தில் திருடாத நல்லவரும்,
  • இரண்டாம் வகையில் திருட்டோடு சம்பந்தப்படாத திருடாதவரும் உண்டு.

இது சமூகத்திலுள்ள நிலை. அனைவரும் அறிந்தது. அன்னை கேட்பது நாம் அறியாதது. வாழ்வு இன்ப துன்பமுள்ளது. நாள் இரவும், பகலுமானது. உலகம் நல்லது, கெட்டதாலானது. நாம் வாழ்வில் துன்பம், இருள், கெட்டதை விலக்கி, இன்பம், பகல், நல்லதை நாடுகிறோம். இதற்கடுத்த நிலையில் விலக்கப்பட வேண்டியதில்லை. ஏற்கப்படவேண்டியது மட்டுமே உள்ளது எனில் அதை நாம் எளிதில் புரிந்துகொள்வதில்லை. உதாரணங்களும் புரிய வைப்பதில்லை.

எந்தப் பள்ளி, கல்லூரியிலும் பரீட்சை முடிவுகள் தெரிந்தால், பாஸானவர்களும், பெயிலானவர்களும் இருப்பார்கள். ஒரு பள்ளியில் "எங்கள் பள்ளியில் பரீட்சை எழுதினால் பாஸ் தான், பெயில் என்பதில்லை. கல்லூரி ஆரம்பித்ததிலிருந்து யாரும் பெயிலாகவில்லை'' என்று சொன்னால் அது நாமறிந்த பள்ளியிலிருந்து வேறுபட்டது. அப்படியும் ஒரு கல்லூரி, 60 பேர் எழுதினால் 40 I கிளாஸ், 20 II கிளாஸ்III கிளாஸ் இல்லை, பெயிலும் இல்லை என எப்பொழுதும் சொல்லும்படியும் அக்கல்லூரி விளங்கியது.

மனத்திற்கு இருபுறம் உண்டு. அவையே நல்லது, கெட்டது, இருள், ஒளி, உயர்வு, தாழ்வு போன்றவை. மனத்தைக் கடக்க தெய்வலோகத்தைத் தாண்டிப் போய் சத்திய ஜீவியத்தை எட்டவேண்டும். அங்கு இருளும், ஒளியும் இல்லை. சிறிய ஒளி, பெரிய ஒளியுண்டு; உயர்வு, தாழ்வு இல்லை. சிறிய உயர்வு, பெரிய உயர்வுண்டு; தெய்வங்களும் மனத்திற்குட்பட்டவர்களே. இவ்விஷயத்தில் அவர்களும் மனிதனைப் போன்றவர்கள்.

சத்திய ஜீவியத்தில் நல்லதுண்டு. அது கெட்டதற்கெதிரான நல்லதன்று, நல்லது. ஆங்கிலத்தில் பகவான் good x bad என்று நம் நிலையையும், சத்திய ஜீவிய நிலையை Good எனவும் capital letter பெரிய எழுத்தைப் பயன்படுத்தி எழுதுகிறார். தமிழில் பெரிய எழுத்து இல்லாததால், அதுபோல் குறிப்பிட முடியாது. சத்திய ஜீவியத்தில் கெட்டதில்லை, நல்லதுண்டு. அதேபோல் பொய் இல்லை, சத்தியம் உண்டு; விகாரமில்லை, அழகுண்டு; துன்பமில்லை, ஆனந்தம் உண்டு; வரையறை (limit) இல்லை, அனந்தம் உண்டு.

தற்காலிகமான வேலை, நிரந்தரமான வேலை என்ற பாகுபாட்டை நாம் அறிவோம். பெரிய அதிகாரி சிறிய அதிகாரியைக் கண்டிக்கிறார், தண்டிக்கிறார். பெரிய அதிகாரியை மந்திரி கண்டிக்கிறார். மந்திரியைச் சட்டம் கண்டிக்கும், தண்டிக்கும். ஹைகோர்ட் நீதிபதி வேலையைத் தற்காலிமானதா, நிரந்தரமானதா எனக் கேட்பதில்லை. அவரை நியமித்தால் பிறகு 60 வயதில் அவர் ஓய்வு பெறுவார். அவருக்கு மேல் அதிகாரி என ஒருவரில்லை. கண்டிக்க மேலே எவரும் இல்லை; தண்டனை எழாது. அவர்கள் சட்டத்தைவிட உயர்ந்தவர்கள். சத்திய ஜீவியம் அதைப் போன்றது. மனத்தைக் கடந்த நிலை அது போன்றது. நம் நாட்டில் நீதிபதிகள் 60இல், 65இல் ஓய்வு பெறுகிறார்கள். வேறு சில நாடுகளில் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்று ஒன்று நிர்ணயிக்கப்படவில்லை. அவர்களே - நீதிபதிகள் - தான் ஓய்வு பெறுவதை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.

கீழ்மட்ட அதிகாரிகளுக்குப் புரியாத சட்டம், உரிமை, நிலைமை இது. வாழ்விலும் இதுபோன்ற இடங்கள் அரிபொருளாக இருக்கின்றன. அடிக்கடி நம் கண்ணில் பட்டதில்லை.

"நான் அகந்தையால் செய்த ஆர்ப்பாட்டங்கள் ஆயிரம். அத்தனையும் என் கணவர் பொறுத்துக்கொண்டார். நிலைமை மீறியபொழுது ஓர் அடி அடித்தார். அந்த அடி பட்டவுடன் அவர் மீது எனக்கு அன்பு சுரந்தது'' என்ற மனைவியின் அனுபவம் தாம்பத்தியத்தில் உள்ளது எனினும், கணவன் அடித்தால் கோபம் வருவதுதான் இயற்கை. அடிபட்டாலும் சுரப்பது அன்புதான் என்ற உறவு, அதற்குரிய உள்ளம் உயர்ந்தது. மனித வாழ்வில் அந்த உள்ளமும் ஆர்ப்பாட்டம் செய்கிறது.

அந்த உறவில் ஆர்ப்பாட்டம் செய்யும் மனநிலையில்லை எனில், அன்பு மட்டுமே சுரக்கும் ஆனந்த உறவாகும் அது. அதுவே வெறுப்பொழிந்த அன்பாகும்.

****

745) உடலாலானவன், உணர்வாலானவன், மனமுடையவன் அல்லன். அவனால் மனத்தைப் பயன்படுத்த முடியாது. மனத்தால் சிந்திக்க அவன் முதலில் மனத்தைப் பெற வேண்டும். அதேபோல் நன்மையைக் (good) கருதும் நிலை அவனுள் இல்லை. அதைச் செய்ய சத்திய ஜீவியத்தைப் பெறவேண்டும். ஜீவனின் பகுதிகளாலான ஒரு புருஷனை (.ம். மனோமயப் புருஷனை) நாடுவதால் இதைப் பெற முடியாது. சைத்தியப் புருஷனை நாடினால் இது முடியும். பகவான் பத்து வருஷமாகத் தேடிய இரகஸ்யம் இது.

பூரணயோகம் பரிணாம ரகஸ்யம்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் தேடியது சுதந்திரம், யோகமில்லை. சுதந்திரத்திற்காக யோகத்தை நாடினார். மௌனம், பிரம்ம ஞானம், அத்துவைத சித்தி, நிர்வாணம் ஆகிய சித்திகள் அவரை நாடி குறுகிய காலத்தில் வந்தன. "ராஜயோகத்தை 3 நாளில் செய்தேன்'' என குத்துமி கூறுவதாகத் தம் பாடலில் எழுதுகிறார். ஜெயிலில் சுவாமி விவேகாநந்தர் கையில் கீதையைக் கொடுத்து 15 நாள்வரை தினமும் "வந்து'' நீ தேடுவது எதுவும் தேவையில்லை, நாடவேண்டியது "இது'' தான் என சத்திய ஜீவியத்தைச் சுட்டிக்காட்டினார். பின்னர் பகவானுக்கு அது பலித்தது. இது என்ன?

  • மனிதன் தான் உடலோ, மனமோயில்லை, ஆன்மா என அறிந்து உடலிலிருந்து பிரிந்து ஆன்மாவின் பிறப்பிடமான பரமாத்மாவை அடைவது மோட்சம்.
  • மனிதன் மோட்சம் பெறுவது திருவுள்ளமில்லை.
  • உலகில் பரமாத்மா வந்து வாழ்ந்து பூலோகம் சுவர்க்கமாவது திருவுள்ளம்.
  • இதை மனோமயப் புருஷன் மட்டும் செய்ய முடியாது.
  • நாம் ஆதியும் அந்தமுமில்லாததாக அறியும் ஆன்மாவுக்கு ஆதியும் அந்தமும் இடையே வளர்ச்சியும் உண்டு. அதை spiritual evolution ஆன்மீகப் பரிணாமம் என்கிறார் பகவான்.
  • அது நடைபெறும் முனை பிரகிருதியின் ஆன்மாவெனும் சைத்தியப் புருஷன்.
  • ஞான யோகத்தால் விடுதலை பெற்ற ஜீவாத்மா நேரே பரமாத்மாவை அடைகிறது.
  • சைத்தியப் புருஷன் பிரகிருதியினின்று விடுதலை பெற முயலாமல் பிரகிருதியை மனத்திலிருந்து மௌனம், ஜோதி, ஞானம், தெய்வீகம் மூலமாக சத்திய ஜீவியத்திற்குக் கொண்டு போகிறது. இப்பரிணாமத்தில் சைத்தியப் புருஷன் ஈஸ்வரனாக மாறுகிறது.
  • மேலிருந்து சிருஷ்டி கீழே வந்த பாதை மூலம் மீண்டும் மேலே போவதாகும் இது.
  • ஜீவாத்மா தானே நேரடியாகப் பரமாத்மாவை அடைவது முழுமையன்று. பிரகிருதி விட்டுப்போகிறது. பிரகிருதி ஆன்மீக வளர்ச்சி பெற்றுயர்வது பரிணாமம். இதன் பாதை சிருஷ்டியின் பாதை.

சுவாமி விவேகாநந்தர் காட்டிக் கொடுத்த இலக்கையடைய பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்த உபாயத்தைக் கண்டுபிடித்தார். அதற்கு அவருக்கு 10 ஆண்டுகளாயின.

பகவான் கண்ட யோக இரகஸ்யத்தை அவர் இரகஸ்யமாக வைத்திருக்கவில்லை. தம் நூல்களில் அவற்றை விவரித்தார். சாதனையாக யோகத்தை மேற்கொண்டவர்கள் மேலும் கேட்பதொன்றுண்டு, "எப்படி ஆரம்பிப்பது''. அதை பகவான் கூறியிராவிட்டால், அதை நாம் இந்த 50 ஆண்டுகளில் கண்டுபிடித்திருக்க முடியாது. அதையும் விவரமாக எழுதினார். அவ்வுபாயம் சரணாகதி. அதற்கும் முந்திய நிலையுண்டு. அதையும் கூறியுள்ளார். அதன் பெயர் சமர்ப்பணம். சமர்ப்பணத்தை மேற்கொள்ள பக்குவமான மனநிலையுண்டு. அதை அன்னை Psychic Education சைத்தியக் கல்வி என்ற தலைப்பில் 6 விதிகளாகக் கூறுகிறார். அறிவை நம்பாமல், உடலைப் பேணாமல், உணர்வை வருத்தாமல், எந்த நேரமும் இறைவனை நோக்கி முன்னேற, புறத்தில் அகத்தைக் காணுதல் பக்குவம் தரும்.பகவான்

அத்துவைத சித்தி பெற்றதையும், நிர்வாணமடைந்ததையும் (poems) செய்யுளாக எழுதியிருக்கின்றார். ஆரம்பத்திலேயே அவருக்கு இந்தச் சித்திகள் கிடைத்தன. காஷ்மீரத்தில் மலை மீது உலவும்பொழுது சித்தி தம்மை நோக்கி வந்ததையும் குறிப்பிடுகிறார்.

மோட்சம் என்பது அவருக்கு உரியது. ஆனால் அது அவரது இலட்சியமுமில்லை, இலக்கும் இல்லை. உலகைத் திருவுரு மாற்றவேண்டும், மரணம் அழியவேண்டும், சத்திய ஜீவன் பிறக்கவேண்டும் என்பவை அவர் எண்ணம். தியானத்தில் அமர்ந்தால் மனம் தூய்மைப்பட்டு, நிலைத்து, உயர்ந்து ஆன்மாவைத் தொட்டு அதனுடன் கலந்து, ஆன்ம விடுதலைக்குரிய நிலை ஏற்படுவது அவருக்கு சகஜமானபின், அதை அவர் நாடாமல், எப்படி சத்திய ஜீவியத்தை அடைவது, அடைந்தபின் எப்படி அதை உலகுக்குக் கொணர்வது என்று யோக நிலைக்குரிய ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

1943இல் வங்காளப் பஞ்சம் வந்தது. 30 லட்சம் பேர் இறந்தார்கள். 1950க்குப் பின் சைனாவில் பஞ்சம் வந்தது. அதைவிட அதிகம் பேர் இறந்ததாகச் சொல்கிறார்கள். ஐரோப்பாவில் black death வந்தபொழுது ஜனத்தொகையில் ஒரு பகுதி இறந்தனர். பன்னிரண்டாண்டு வற்கடம் (பஞ்சம்) என்ற சொல் தமிழ் இலக்கியத்தில் அடிக்கடி காணப்படுவது. 12 ஆண்டு மழை பெய்யாமல் ஊரை விட்டுப் போய், மழை பெய்ய ஆரம்பித்தபின் வந்ததை வரலாறு அறியும். 1965இல் பஞ்சம் ஏற்பட்டது. வெளிநாட்டுத் தானியம் வாங்கி ஒரு வருஷம் சமாளித்தால், ஒவ்வோர் ஆண்டும் 100 கோடி, 150 கோடி ரூபாய் எனத் தானியம் வாங்க வேண்டியிருந்தபொழுது, இது தவிர்க்க முடியாதது என உலகில் அனைவரும் நினைத்தனர். புத்தர் மரணம், காசநோயைக் கண்டு தவமிருந்து ஞானோதயம் பெற்று மரணத்தை வெல்ல முடியாது என்று முடிவு செய்தார். அந்த முடிவை பகவான் ஏற்க மறுத்தார். G.சுப்ரமணியம் பஞ்சம் தவிர்க்க முடியாது என்பதை ஏற்க மறுத்தார். மறுத்தது சரி, எப்படிப் பஞ்சத்தை தவிர்ப்பது? சுப்ரமணியம் கண்டது, "உலகில் விவசாய விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. அது இங்கு வந்தால் பஞ்சம் தவிர்க்கப்படும். உற்பத்தியைப் பெருக்க முடியும்''. அதை எப்படி நிறைவேற்றுவது, யார் நிறைவேற்றுவது என்பது சுப்ரமணியத்தின் கேள்வி. விவசாய விஞ்ஞானிகள் விவசாயியை அணுகி விஞ்ஞான அறிவின் பலனை நடைமுறையில் காட்டவேண்டும். அதைச் செய்தால் உற்பத்தி பெருகும் என்று முடிவு செய்தார். அதையும் செய்தபின் விவசாயி புதுமுறை பயிரை ஏற்றால் நாடு பஞ்சத்தை ஒழிக்கும் என்று தெளிவு பெற்றார். விஞ்ஞானிகளும் அதைச் செய்தனர். விவசாயிகளும் அதை ஏற்றனர். நாடு மாறியது.

பகவான் மரணத்தை வெல்ல முடியாது என்பதை ஏற்க மறுத்தார். சத்திய ஜீவியம் மரணத்தை வெல்லும் என்று கண்டார். எப்படி சத்திய ஜீவியத்தை அடைவது என அவருக்குத் தெரியவில்லை. அவர் அடைந்த சச்சிதானந்தம் சத்திய ஜீவியத்தைவிட உயர்ந்தது. என்றாலும் சச்சிதானந்தம் மரணத்தை வெல்லலாம், சத்திய ஜீவியம் வெல்லும். அன்னமயப் புருஷன், பிராணமயப் புருஷன், மனோமயப் புருஷன், ஜீவாத்மா மூலம் மோட்சம் பெறலாம். சத்திய ஜீவனை அடைய முடியாது. பத்து வருஷம் அவருடைய முயற்சியால் சைத்தியப் புருஷனை நாடினால், அவன் மூலமாக ஜீவாத்மாவுக்குப் போனால்,சத்திய ஜீவியத்தை அடையலாம், அடைந்தால் சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டுவரலாம் என்று கண்டார். கண்டதைப் பயின்று வெற்றி கண்டார். சத்திய ஜீவியத்தை அவர் அடைந்தார். உலகுக்கும் கொண்டுவந்தார்.

புதுமுறை விவசாயத்தை மக்கள் ஏற்கவில்லை என்றால் சுப்ரமணியத்தின் முயற்சி ஏட்டளவிலிருக்கும், நாட்டுக்குப் பலன் தந்திருக்காது. பகவான் சத்திய ஜீவியத்தை உலகுக்குக் கொண்டு வந்த பின்பு உலகம் மரணத்தை வெல்ல, சைத்தியப் புருஷனை நாடவேண்டும். உலகம் அதை நாடவில்லை. என்றாலும் ஒரு சிலர் (10, 12 பேர்) நாடினால் உலகம் அவர்கள் மூலம் மரணத்தை வெல்லும். அன்னை தவிர வேறொருவரும் அதை இலட்சியமாக ஏற்கவில்லை என்பதால், பகவான் சூட்சுமத்தைக் கண்டும், வெற்றி பெற்றும், உலகம் அதன் முழுப் பயனை, இந்திய விவசாயி பெற்றதுபோல் பெறவில்லை. தம் சூட்சும இரகஸ்யத்தை உலகுக்கு பகவான் வெளியிட்டும், அதைப் பாராட்டியவரில்லை.
 

****

தொடரும்...

Comments

745para 1, bullet point no.8

745

para 1, bullet point no.8 - line 2 - மனத்திலி ருந்து - மனத்திலிருந்து

do.   2, line 10 - from பகவான் அத்துவைத சித்தி to வந்ததையும் குறிப்பிடுகிறார். - separate paragraph.

para 4, line 12 - ஈ.சுப்ரமணியம் - G.சுப்ரமணியம்

 

744para 1, line 2 - பெரிய ஏயை

744

para 1, line 2 - பெரிய ஏயை - பெரிய Gயை

do.   2, do. 5 - ஊரிலி ருந்து - ஊரிலிருந்து

do.  13, do. 2 - badஎன்று - bad என்று

after the last paragraph  - line 1 - செய்யும்மனநிலையில்லை - 

செய்யும் மனநிலையில்லை 

 

யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் IV

742

para 1, line 5 -ஆரம்ப நாளிலி ருந்து - ஆரம்ப நாளிலிருந்து

after para 5, bullet point no.1, line 1 - constitutionஅரசியல் -

constitution அரசியல்

743

 

para 3, line 2 - திருடாமலி ருக்க - திருடாமலிருக்க

do.   5, do.    - வாழ்வில்லை - வாழ்விலில்லை

யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம் IV   

 

 

741 - sub heading - line 3 - ஞானம்

கூர்மை பெறும். - ஞானம் கூர்மை பெறும்.

para 1, line 5 - from செடியில் தான்யம் to இன்று உண்மையாகிவிட்டது. -

separate paragraph.

para no.1 line 10 - from விஞ்ஞானம் உலகில் to என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். - a separate sentence after the 2nd paragraph.

para1, line 12 - from எப்படி வைரம், to நமக்கு வாழ்வு கட்டுப்படும் - separate paragraph.

para 1, line 16 - from விதையிலிருந்து to ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். - separate paragraph

para 2, line 1 - Cosmic determinants - Cosmic Determinants

do.   3, line 2 - செயலி ன் - செயலின்

do.   4, do.  4 - from விஞ்ஞானம் to வளர்ச்சியடைந்துள்ளது. - separate paragraph.

para 5, line 5 - விதையிலி ருந்து  - விதையிலிருந்து

do.      do.  6 - துல்யமாகக் - துல்லியமாகக்

do.   6, do.  4 - கண்ச்ங் உண்ஸ்ண்ய்ங் - Life Divine

do.   7, do.   7 - ignoranceநடைமுறை - ignorance நடைமுறை 

 

 



book | by Dr. Radut