Skip to Content

13. லைப் டிவைன் கருத்து

"லைப் டிவைன் கருத்து"

P. 14. The Energy that creates the world can be nothing else than a Will

சக்தி என்றிருந்தால் அதன் மூலம் Will மனஉறுதி

நாம் ஓர் இடத்திற்கு - பள்ளிக்கூடம், ஆசிரமம், தர்ம ஸ்தாபனம் - போய் அங்கு நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. உள்ளவர்கள் லட்சியமாய்ப் பழகுகிறார்கள். உயர்ந்த இடம் எனக் கண்டால் இதன் தலைவர் யார் எனக் கேட்கிறோம். தலைவர் என நாம் கேள்விப்படுபவர் இவ்வளவு உயர்ந்த ஸ்தாபனத்தை நடத்த முடியாது என மனதில் பட்டால், அவரே செய்கிறாரா அல்லது வேறு யாராவது பின்னணியிலிருக்கிறாரா என விசாரிப்போம். தலைவர் யார் எனத் தெரிந்தபின், ஏன் இந்த ஸ்தாபனத்தை நடத்துகிறார் எனக் கேட்கிறோம். ஒரு பெரிய காரியம் கண்ணில்பட்டால், அதன் பின் ஒரு மூலகர்த்தா இருக்கிறார், இருக்க வேண்டும் என்பது நம் அபிப்பிராயம். சக்தியின் பின்னால் மனஉறுதி என்பது அது போன்றது.

உறுதி (will) இல்லாமல் சக்தியில்லை.
சக்தியை எழுப்பாத உறுதியில்லை.

ஒரு சாதாரண குடும்பப் பையனுக்குப் பெரிய உத்தியோகம் கிடைத்தது எனில் நம் மனம் கேள்வி கேட்கிறது. பையன் rank வாங்கியவன் என்றால், மனம் ஓரளவு சமாதானம் அடைகிறது. மீண்டும் ராங்க் மட்டும் இவ்வளவு பெரிய வேலையை வாங்கித் தாராதே என்ற கேள்வி எழுகிறது. பணமா, சிபார்சா என இதர கேள்விகள் எழும். பணம் என்றால் மனம் அடங்கும். சிபார்சு என்றால் மனம் ஏற்றுக் கொள்ளும். அவையில்லை, பையன் rank உம் வாங்கியவனில்லை என்றால் கேள்வி மேல் கேள்வி எழும். நாம் ஏற்கும் பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் மனம் புதுக் கேள்விகளை எழுப்பும். ஒரு சிலர் personality பர்சனாலிட்டிக்குக் கிடைத்தது என்பார்கள், அடுத்தவர் aptitude testஇல் திறமை talent இருந்திருக்கும் என்பார்கள். ஒருவாறாக பதில் கிடைத்துவிட்டால்,

வேலை பெரியது என்றால், அதன் பின் விஷயம்
இருக்குமே என்று நினைத்தேன்

என்று விஷயம் தெரிந்தவர்கள் கூறுவதுபோல், சக்தி என்று இருந்தால் அதன் பின் will மன உறுதியிருக்கும் என பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். இதுபோன்ற கருத்துகள் வேறு சிலவற்றையும் நாம் கூறலாம். அவை ஸ்ரீ அரவிந்தர் கூறியவை,

  • ஒருவருடைய உயிர் பிரிய வேண்டும் என்றால் பரமாத்மாவும், ஜீவாத்மாவும் அதற்குச் சம்மதிக்க வேண்டும்.
  • எந்தச் சிறு காரியம் நடக்க வேண்டுமானாலும் இந்த இரண்டு - பரமாத்மா, ஜீவாத்மா - உத்தரவும் தேவை.
  • ஒருவர் படுக்கையாக இருந்து உயிர் பிரிகிறது எனில், அவருக்கு முக்கியமானவர் ஒருவர் "இவர் போனால் நல்லது" என்று நினைக்காமல், பேசாமல் அவர் உயிர் பிரியாது.
  • நமக்கு எந்தக் கஷ்டம் வந்தாலும், நாமே - உள்மனம் - அழைக்காமல் அது வாராது. மேல் மனம் கஷ்டமாக உணருவதை, உள்மனம் சந்தோஷமாக அனுபவிக்கிறது. சில சமயங்களில் அழைக்கிறது என்று பகவான் கூறுகிறார்.
  • கஷ்டம் என வந்தால் அதன்பின் நம் அழைப்பு இருக்கும். நல்லதற்கும் அதுவே சட்டம்.

 

******



book | by Dr. Radut