Skip to Content

07. பகவானுடைய இதர நூல்கள்

"பகவானுடைய இதர நூல்கள்"

Vol. 5 Centenary Set - Collected Poems

1972இல் ஸ்ரீ அரவிந்தர் நூற்றாண்டு கொண்டாடும்பொழுது ஸ்ரீ அரவிந்தர் எழுதிய அனைத்தையும் 30 வால்யூமாகப் பிரசுரித்தனர். ஸ்ரீ அரவிந்தர் எழுதியவை தத்துவமானதால் நூல் விற்பது கடினம். எத்தனை பிரதிகள் - செட்டுகள் - அச்சடிப்பது என்ற பொழுது அன்னை 5000 செட் அச்சடிக்கப்பட வேண்டும் என்றார். ஆயிரம் விற்பதே சிரமம் என்பதால் நிர்வாகிகள் மலைத்து நின்றனர். 5000 செட் அச்சடிக்கப்பட்டன. அவை விற்றுப் போனதால் சமீபத்தில் அவற்றை மீண்டும் அச்சிடுகின்றனர். அதனுள் 5ஆம் வால்யூமில் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய எல்லா poems செய்யுள்களும் அச்சடிக்கப் பட்டுள்ளன. "மகாத்மா" என்பது ஒரு கவிதை.

இந்த செட்டில்

The Mother என்பது Vol. 25.

சாவித்திரி இரு வால்யூம்கள் 28, 29.

The Life Divine இரு வால்யூம்கள் 18, 19.

பகவான் எழுதிய கடிதங்கள் மூன்று வால்யூம்கள் 22,23,24.

ஆரம்பக் காலத்தில் பேசியவை, எழுதியவை வந்தே மாதரம் என்ற தலைப்பில் முதல் வால்யூமாக உள்ளது.

தமிழ், சமஸ்கிருதம், வங்காளி, லத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை 8ஆம் வால்யூமாக வெளிவந்துள்ளது.

(தமிழிலிருந்து குறள், ஆண்டாள் பாசுரம், நம்மாழ்வார் பாசுரம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன).

5ஆம் வால்யூமில் "மகாத்மா" என்றொரு செய்யுள் சுமார் 100 வரிகளுள் எழுதப்பட்டுள்ளது. மகான்கள் எப்படி எழுகிறார்கள் என்ற கருத்தை வெறுங்கற்பனையாக எழுதியுள்ளேன் என்று குறிப்பில் பகவான் எழுதுகிறார். செய்யும் குத்துமி என்பவரைப் பற்றியது. இந்த யோக சக்தி பெரியது. உலகில் பெரியவை என்பவற்றைக் கடந்தபின், விட்டொழித்த பின் அடையக் கூடியது, ஹடயோகமும், ராஜயோகமும் இதன் முன் அர்த்தமற்றவை, அந்த சித்திகள் அழிந்தபின் பெற வேண்டியது பூரண யோகச் சித்தி என்ற கருத்து மையமானது. செய்யுளின் கருத்தை கீழே எழுதுகிறேன்.

  • ரிஷிகள் லோகத்திற்குச் சிவன் தலைவர்.
  • என் மக்களான மனித குலம் எனக்குக் கட்டுப்பட்டது.
  • என் பெயர் குத்துமி, நான் க்ஷத்திரியன்.
  • நான் வியாச பகவானைத் தேடி அடைந்தேன்.
  • "இத்தனை ஜென்மங்களாகச் சேகரம் செய்த சித்திகளைக் கொண்டு தெய்வமாகும் பாதையை நாடு. அதன்பின் என்னிடம் வா. இனி உனக்கு மரணமில்லை" என்று வியாசர் கூறுகிறார்.
  • அவர் சொல்லைத் தலைமேல் தாங்கி நான் காட்டையும், மலையையும் அடைந்து ஹடயோகத்தை மூன்று நாளிலும், ராஜயோகத்தை மூன்று நாளிலும் முடித்தேன். வியாசரிடம் திரும்பி வந்தேன்.
  • "நீ கற்றவற்றை கிருஷ்ணபரமாத்மாவைத் தேடி அவனிடம் சரணடைந்து விடு. கிருஷ்ணன் உலகில் ஒளிந்துள்ளான்" என்றார் வியாசர்.
  • உலகெங்கும் தேடினேன், கிருஷ்ணனைக் காணவில்லை. மலைக்குகை ஒன்றில் கண்டேன். கிருஷ்ணன் அங்கு ஓடி விளையாடுகிறான். அவன் காலடியில் வீழ்ந்தேன்.
  • என்னைக் காலால் உதைத்தான். "பிச்சைக்காரா, உன் பரிசை எடுத்துக் கொள்" என்று கொக்கரித்தான்.
  • எனக்கு ஞாபகம் வந்தது. சண்டையும், பூசலும் அழிந்து கிருஷ்ணதரிசனம் யோக ஞானமான அன்பை நான் பெற்றேன்.

*****



book | by Dr. Radut