Skip to Content

லைப் டிவைன் - கருத்து

ஜடமும், ஆன்மாவும் ஒன்றே

P-6 Spirit is Matter, Matter is Spirit

  • முதலாளியும், தொழிலாளியும் கம்பனிக்கு அவசியமான இரு அங்கங்கள்.

முதலும், தொழிலும் ஒன்றே.

  • தலைவனும், தொண்டனும் கட்சிக்கும், நாட்டுக்கும் தேவையானவை.

தொண்டனே தலைவனானான்.

தொண்டனுடைய மனப்பான்மையே ஒருவனைத்  தலைவனாக்கும்.

தலைமையும், தொண்டும் ஒன்றே.

  • ஆசிரியரும், மாணவரும் கல்வி என்ற அரங்கத்தின் இரு சமமான பகுதிகள்.

கல்வி புகட்டும் ஆசிரியருக்கு போதிப்பதால் அறிவு நிறைவடைகிறது.

மாணவன் பாடத்தைக் கற்கிறான்.

ஆசிரியர் கற்பிப்பதைக் கற்கிறார்.

கல்வி இறைவனாகும்.

இறைவன் என்ற பிரம்மத்தின் முன் சமமாக இருந்து ஆசிரியரும், மாணவனும் கற்க வேண்டும் என்பது பிரபலமான ஸ்லோகம். 

  • கணவனும், மனைவியும், ஒன்றே எனக் கருதினால் இல்லறம் நல்லறமாகும்.

கணவனும், மனைவியும் குடும்பத்தின் இரு பகுதிகள்.

உலகமே ஆண் பெண் என்ற தத்துவங்களால் செயல்படுகிறது.

குடும்பத்தில் மனைவி கணவனுக்கு அடங்குகிறாள்.

ஆன்மீகத்தில் ஈஸ்வரன் சக்திக்குச் சரணடைவதால் பூர்த்தியாகிறான்.

  • சம்பாதிப்பவனும், செலவு செய்பவனும் ஒன்றே.

செலவு செய்வதால் சம்பாதிக்க முடிகிறது.

செலவாகாவிட்டால், சம்பாத்தியம் நிற்கும்.

ஏரியிலிருந்து நீர் வெளியே போகாவிட்டால், உள்ளே

வரும் நீர் ஏரியை உடைக்கும்.

செலவும், வரவும் ஒன்றே.

  • Positive, Negative என்பவையும் ஒன்றே.

இராணுவமும், சர்க்காரும் ஒன்றே.

நன்மையும், தீமையும் ஒன்றே.

நன்மையிலிருந்து தீமை எழுகிறது.

தீமையிலிருந்து நன்மை எழுகிறது.

வாழ்வுக்கு நன்மை, தீமை இரண்டும் தேவை.

ஆன்மாவுக்குச் சலனமும், அமைதியும் தேவை.

  • பயிரும், கரம்பும் ஒன்றே
  • பள்ளி நடப்பதும், விடுமுறையும் ஒன்றே.

கரம்பாக இருந்தால்தான் அடுத்த பயிர்விளையும்.

விடுமுறையில்தான் மாணவனுடைய அறிவு பக்குவப்படுகிறது.

*************



book | by Dr. Radut