Skip to Content

அன்பர் அனுபவம்

என் மாங்கல்யம் காத்த மகேஷ்வரி

அருள் அமுதம் வழங்கும் அன்னைக்கும் நமஸ்காரம்

நாங்கள் அன்னையைப் பற்றித் தெரிந்து கொண்டதே என் நாத்தனாரிடம் இருந்துதான். அப்பொழுது நாங்கள் புவனேஷ்வரில் இருந்தோம்.யதேச்சையாக அவர்கள் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த இடம் பார்க்கவேண்டி கல்கத்தா வந்திருந்தார்கள்.அந்தச் சமயம் பார்த்து எனக்கும், என் மகனுக்கும் சிறிய அம்மை வந்திருந்தது.அவர் சென்னை திரும்பும்போது அவரைப் பார்க்க என் கணவர் புவனேஷ்வர் ஸ்டேஷனுக்குப் போயிருந்தார்.விவரம் தெரிந்து கொண்ட அவர், அவருக்கு மனதில் என்ன தோன்றியதோ உடனே வண்டியை விட்டு இறங்கிவிட்டார்.சென்னைப் பயணத்தை தொடரவில்லை.வீட்டுக்கு வந்த அவர் தம்மிடமிருந்த அன்னை, ஸ்ரீ அரவிந்தர் போட்டோவை எங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டார்.எங்கள் பக்கத்திலிருந்து கொண்டு தியானம் செய்வதும், எங்களைக் கவனித்து கொள்வதுமாகவே இருந்தார். இத்தனைக்கும் அப்போது அவருக்கு உடம்புகூட நல்ல நிலையில் இருக்கவில்லை.அன்னைதான் அவருக்கு ஓர் அபாரத்தெம்பை கொடுத்தார்.எனது மாமியார் கூட என்னைப் பார்த்துப் பயந்துவிட்டார்.எனது உடம்பு சரியான நிலையில் என்னைப் பார்த்த டாக்டருக்கு ஒரே அதிசயம், ஏனென்றால், எனக்கு இருந்த நிலைமைக்கு ஒன்று கண் பார்வை போயிருக்கலாம், இல்லை புத்தி ஸ்வாதீனமில்லாமல் போயிருக்கலாம்.அந்த அன்னைதான் இப்போது என்னை இந்த நிலையில் வைத்திருக்கிறார்கள்.

நன்றாக நடந்து கொண்டிருந்த என் கணவரின் அலுவலகத்தில், திடீர் என்று ஸ்டிரைக் ஆரம்பித்துவிட்டது.என் கணவரையும், அவர் சக உத்தியோகஸ்தரையும் வலுக்கட்டாயமாக ரூமில் அடைத்து வைத்து விட்டார்கள்.ஊழியர்கள் போதை நிலையில் இருந்தார்கள்.அவரை அடிக்க திட்டம் தீட்டியிருந்தார்கள்.என் கணவர் எப்போதும் வீடு வர தாமதமானால் போன் செய்து விடுவார்.அன்று இரவு 8.45 ஆகியும் போனே வரவில்லை.அவரும் வரவில்லை.நான் prayer முடித்து, officeக்கு phone செய்து பார்க்கலாம் என்று செய்தால் ஒரு கடைநிலை ஊழியர் என்று சொல்லிக்கொண்டு போனை எடுத்தவர் ஒருவர், "சார் முக்கியமான வேலையில் இருக்கார், இப்பொழுது உங்களிடம் பேசமாட்டார்'' என்றான்.ஆனால் phone-ஐ எடுத்தது கடைநிலை ஊழியர் இல்லை என்பது எனக்கு தெரிந்துவிட்டது.ஏனென்றால் அவனுக்கு English தெரியாது.அங்கு நடந்து கொண்டிருந்த விஷயமே வேறு.அவன் டெலிபோன் ரிசீவரை மீண்டும் போன் மேல் வைப்பதற்குப் பதிலாக, டேபிள் மேலேயே வைத்து விட்டான்.நானும் தொலைபேசியை disconnect செய்யாததினால் அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் நன்றாகத் தெரிந்து கொண்டு விட்டேன்."ஐயோ!மதர் இவர் ஏதோ ஆபத்தில் இருக்கார், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டு உடனே இவர் advocate-க்குப் போன் செய்து வேண்டிய action எடுக்கச் சொன்னேன்.அவர் உடனே இரண்டு பேரையும் போலீசையும் அழைத்து வந்து இவரைக் காப்பாற்றினார். அன்று இவர் பிழைத்ததே அன்னையின் அருளால்தான்.உடனே என் கணவர் இங்கே சென்னையிலிருக்கும் தன் தம்பிக்குப் போன் செய்து, பாண்டிக்கு தகவல் கொடுக்கவே, அவரும் உடனே அன்னையின் அருளும் பாதுகாப்பும் எங்களுக்குக் கிடைக்கும்வகையில் ஒரு telex message அனுப்பினார்.அன்னையின் பிரசாதப் பாக்கெட்டும் அனுப்பினார்.அடுத்து வந்த இரண்டு மாத strike period-இயிலும் இவர் தனியாகப் பாதுகாப்பிற்கு ஒருவரும் இல்லாமல், ஆபீஸுக்குத் தனியாகவே போய் வந்தார்.Mother கூடவே இருந்ததனால் இவரையோ, இவர் காரையோ ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.அந்தச் சமயத்தில் எங்கள் கஷ்டத்தில் எங்களுக்காகப் பிரார்த்தனை செய்த எல்லோருக்கும் நாங்கள் கடமைபட்டிருக்கிறோம்.ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் மானஸீகமாக எங்களுடனேயே இருந்தார்கள்.அன்னையிடம் முறையிட்டபோதெல்லாம் எங்கள் குரலுக்குச் செவி சாய்த்திருக்கிறார்கள்.

என் மகள் இன்று நன்றாக இருக்கிறாள் என்றால், அது அன்னை கொடுத்த மறுவாழ்வுதான்.நாங்கள் புதுவருடப்பிறப்புத் தரிசனம் முடித்து வந்த அடுத்த நாள், திடீர் என்று நடு இரவு 1.30 அளவில் என் மகளுக்கு ஜுரம் வந்து 106-107 என்று ஏற ஆரம்பித்துவிட்டது.வீட்டிலும் யாரும் இல்லை.என் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்.போனும் கிடையாது. "அன்னையே உங்களைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நீங்கள்தான் என் மகளைக் காப்பாற்ற வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்து கூடவே நான் கொண்டு வந்திருந்த ஸமாதிப் பூவை டவலில் வைத்து, அவள் தலைக்கு அடியில் வைத்து, "மதர், மதர்'' என்று அழைக்கும்படி என் மகளிடம் சொன்னேன். அரைமணிநேரத்தில் ஜுரம் கம்மியாகி விட்டது.பிறகு 4,-5 நாள் ஜுரம் வந்து போய் கொண்டேயிருந்தது.பிறகு அன்னையின் உத்தவுரப்படி மதரிடம் சரணாகதி அடைந்து ஸமாதிமுன் மானஸிகமாக இருந்தபடி தியானம் செய்ததில், என் மகள் பூரண குணமடைந்தாள்.

அன்னையின் அருளினால்தான் என் மகனுக்கும் பல கஷ்டங்களுக்குப் பிறகு நல்ல காலேஜில் அட்மிஷன் கிடைத்தது. எப்போதும் அன்னையின் அருள் எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டு என் கட்டுரையை முடித்து கொள்கிறேன்.

- கிரிஜா மணி

**********book | by Dr. Radut