Skip to Content

கன்சல்டன்சி

ஆடியோ சென்டர்

ஆடியோ சென்டர் என்பது கனடாவில் T.V. ரேடியோ போன்றவை விற்கும் கம்பனி. 80 கோடி ரூபாய் வியாபாரம் சரிந்து 50 கோடியாயிற்று. மார்க்கட் மாறுகிறது. தொழிலில் நாட்டில் 500 கம்பனிகளிருந்தன. இனி இத்தொழிலுக்கு எதிர்காலமில்லை என்ற நிலையில் தொழில் மந்தமாயிற்று. நாட்டிலிருந்த 500 கம்பனிகள் 300 ஆயின. மார்க்கட் மாறுவதால் எதுவும் செய்வதற்கில்லை. நாமாகக் கடையைமூட வேண்டாம். நடக்கிறது நடக்கட்டும் என்றவர் தொழிலைத் தொடர்ந்தனர். பணம் வசதியில்லாதவர்கட்கு இது இக்கட்டான நேரம். இந்த முதலாளியின் வியாபாரம் குறைவதால் பாங்க் தன் பணத்தைத் திருப்பிக் கேட்டது. அதைத் திருப்பிக் கொடுத்தால் கடையை மூட வேண்டும். June மாதம் 20ஆம் தேதி, பாங்க் அம்மாதம் 30 தேதிவரை வியாபாரத்தைப் பார்த்து முடிவு செய்வதாகக் கூறி 30ஆம் தேதிவரை விற்க வேண்டிய தொகையைக் குறிப்பிட்டது. சரியும் மார்க்கட்டில் அது எட்டாக்கனி. புதுவை அன்பர் அச்செய்தி கேட்டு கம்பனிக்காக 10 நாள் காலை 8 முதல் மாலை 8வரை பிரார்த்தனை செய்ததையும், கடை மூட வேண்டிய அவசியமில்லாமல் தப்பித்ததையும் நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். இது நடந்து 36 மாதமாகிறது.

ஒவ்வொரு மாதமும் 30ஆம் தேதி 31ஆம் தேதி, அன்று கண்டம். 20, 24, தேதிகளில் e-mail வரும், " "நிலைமை படுமோசம்'' என்று. "நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்'' என பதில் அனுப்புவோம். 24 மாதம் தொடர்ந்த நெருக்கடி, புதுவை அன்பர் பொதுவாக அக்கரை கொண்டாரே தவிர முதலாளியைத் தாமே அன்னையை அனுப்பவேண்டும் என்று கூறுவதுடன் இருந்துவிட்டார். 24 மாதமும் நெருக்கடி உருவாகித் தப்பித்துக் கொள்வார். சென்ற செப்டம்பர் மாதம் முதலாளி சமாதிக்கு ஒரு நாள் வந்திருந்தார். புதுவை அன்பரைச் சந்தித்து நன்றி கூறினார். 4,5 மணி நேரம் பேசினார்கள். "நான் இதுவரை இதுபோல் உற்சாகப்பட்டதில்லை'' என்று மலர்ந்து திரும்பினார்.

அன்னை பக்தர் வேறொருவர் சென்ற நவம்பர் மாதம் ஆடியோ சென்டருக்குப் போனார். இவர் Management Consultant. முதலாளி, அன்னை அன்பரானாலும் மேல் நாட்டாருக்கு அன்னையை தொழிலில் சம்பந்தப்படுத்த கூச்சப்படுவார்கள். சென்ற அன்பர் அப்படிப்பட்டவர். இந்த முறை மனம் மாறி, "இந்த முதலாளியிடம் 8 ஆண்டுகளாக நண்பர்களாகப் பேசுகிறோம். இவர் எதையும் முறையாகச் செய்வதில்லை. எப்படிப் பலன் வரும்? இம்முறை அன்னையை அனுப்பச் சொல்கிறேன்'' என்ற முடிவோடு இரண்டு வாரம் தங்கினார். அன்னையை அழைப்பது, சேல்ஸ்மேன், T.V., சரக்கு, வாடிக்கையாளர்கள் ஆக அனைத்துக்கும் எப்படி அனுப்புவது, கம்பனியில் என்ன system செய்வது எனச் சொன்னார். 15 நாளில் வியாபாரம் குறையவில்லை. முதலாளி என்ன பீஸ் கொடுப்பது எனக்கேட்டார். 10 நாள் வேலைக்கு $ 20,000 வழக்கமான பீஸ். "நண்பராக வந்தேன். அன்னையைப்பற்றி பேசியதால் பீஸ் வேண்டாம்'' என்றார்.

முதலாளிக்குச் சென்ற ஆண்டில் இதேமாத சேல்ஸ்சை எட்டிப்பிடிக்க முடிவதில்லை. ஜனவரியில் சென்ற ஜனவரியைவிட 15% அதிகம் எனக் கொண்டாடினார். பிறகு 28% 35% 39% என ஒவ்வொரு மாதமும் வியாபாரம் பெருகியது. நேற்று "இந்த ஜுன் மாதம் சென்ற ஜுன் மாதத்தைப்போல் 100% அதிகம். அன்னையை நான் அழைக்க வேண்டியதேயில்லை. என் அருகில் பெரும்பாலும் நிற்பது தெரிகிறது'' என்று e-mail வந்தது.

நான் அவருக்கு எழுதிய பதில், "அன்னையை அழைப்பது சிறந்தது. அதை நீங்கள் மேற்கொண்டு பலன் பெற்றது சந்தோஷம். அன்னை தருவது சக்தி energy, அதை systems மூலம் organise செய்தால் வரும் பலன் நிரந்தரமாக இருக்கும். மேலும் வளர முடியும்''.

  • தொழில் பெருக அன்னையை அழைத்தால் பெரும் பலன் உண்டு.
  • Systems, பெற்ற சக்தியை முழுவதும் பலனாக மாற்றித் தரும்
  • வெறும் அழைப்புக்குக் குறைந்தபட்சப் பலன் வரும்.

*************book | by Dr. Radut