Skip to Content

அன்பர் கடிதம்

அன்புள்ள அசோகனுக்கு ,

அன்னையை நினைத்துச் செய்த வேலை என் மனத்தைமலர்போல மணம் வீசசெய்தது. என்னுடைய கேள்விக்குப் பதில்எழுதியது பற்றி நன்றி...அன்னை Sincerity என்று கூறுவதைச் சொல்வது எளிது. செய்வது கடினம்.

- பிரியா.

மேற்சொன்ன கடிதம் விரிவானது. அதில் ஒரு வாக்கியத்தை மட்டும் மேலே எழுதியுள்ளோம். இக்கடிதம் வரும் முதல் நாள் இங்கு சூழல் சிறந்து, மலர்ந்து, இனித்தது. அதே சமயம் இந்த சீசனுக்கு Grace மலர் வர ஆரம்பித்ததால் 12 மலர்கள் வந்தன. கம்ப்யூட்டர் வேலை கடுமையாக இருப்பதாகப் பிரியா எழுதியிருந்தார். சமர்ப்பணம் செய்தால் கடுமை இனிமையாகும் எனப் பதில் எழுதியதற்கு இந்த e-mail வந்துள்ளது. அன்னைக்குத் தியானத்தைவிடச் சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலை பிடிக்கும். இறைவன் முன்னால் நிற்கும் உணர்வைக் கடிதம் விவரிக்கிறது. பிரியா அப்படி உணர்ந்த நேரம் அதே சூழல் இங்கு தெரிந்தது. Grace மலர் வந்து தன் அருள் முத்திரையைக் குத்தியுள்ளது. அதே நேரம் 3 பேர் காணிக்கை வந்தது. காணிக்கை அனுப்பிய அன்பர்கள் மனநிலையையும் சூழல் காட்டுகிறது. அடுத்த ஆண்டு மலர்ந்த ஜீவியத்திற்காக "காணிக்கை பிரசாதம்'' என்று எழுதப்பட்ட கட்டுரை xeroxக்குப் போன சமயம் அது.

  • அன்னை நம்மையும் நம் செயல்களையும் கவனிக்கிறார் என்று பகவான் கூறுவதை இந்நிகழ்ச்சி காட்டுகிறது.
  • நம் நற்செயல்கள் அன்னையை மகிழ்விக்கும் என்பது அன்றுபோல் இன்றும் உண்மை
  • Sincerity உண்மை தியானத்தைவிட உயர்ந்தது.

**********



book | by Dr. Radut