Skip to Content

“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்

IX.The Pure Existent

P. No. 71

Para 1

We sometimes withdraw our gaze.

Normally we are preoccupied.

 

It is an egoistic preoccupation.

 

It is of limited interests.

They are fleet in nature.

 

Thus we can look upon the world.

It is a dispassionate view.

It is a conscious search.

It seeks only the Truth.

There is a first result.

 

It perceives a boundless energy.

It is of an infinite existence.

It is of an infinite movement.

It is also of an infinite activity.

It pours itself out in limitless Space.

 

It is in eternal Time.

 

It surpasses infinitely our ego.

The collective ego is surpassed too.

Every ego is thus surpassed.

The aeons have grandiose products.

In the balance of that existence they are dust.

9. சத் புருஷன்

 

 

நாம் பார்வையை உள்ளே செலுத்தும் நேரம் உண்டு.

பொதுவாக நாம் நம்மை மறந்திருக்கிறோம்.

நம்மை நாம் நம்மில் இழந்திருக்கிறோம்.

அதன் பார்வை குறுகியது.

க்ஷணத்தில் அழியும் தன்மையுடையவை அவை.

உலகை நாம் இப்படிப் பார்க்கமுடியும்.

அது பற்றற்ற பார்வை.

அது ஆர்வத்தின் தேடுதல்.

அது நாடுவது சத்தியம்.

முதற்பலன் தெரிகிறது.

சமுத்திரமான சக்தி தென்படுகிறது.

அது அனந்தம்.

அது முடிவற்ற சலனம்.

அது முடிவில்லாத செயலுமாகும்.

எல்லையற்ற பிரபஞ்சத்தினுள் அது தன்னைப் பொழிகிறது.

காலத்தைக் கடந்த காலம் அதன் அரங்கு.

அதன் முன் நாம் கடுகு.

உலகமே அதன் முன் சிறியது.

எவரும் அதன் பார்வையில் சிறியதாகும்.

யுகங்கள் சாதித்தவை ஏராளம்.

அச்சாதனைகள் முன் அவை தூசியாகும்.

They are but dust of a moment.

Its sum is incalculable.

 

The numberless myriads count little there.

If counted, it does so as a petty swarm.

 

We have an instinctive feeling.

 

According to it, we weave our thoughts.

We see this stupendous world movement around us.

 

We also see it at work.

 

We conceive ourselves at the centre.

 

We understand that is works for our benefit.

We assume it is for our help or harm.

 

Our chief concern is our egoistic concerns.

Our ego craves, have emotions, ideas and standards.

 

We think they are its proper business.

 

We can pause and see.

We perceive it exists for itself.

 

It does not exist for us.

It has its own gigantic aims.

Its ideas are complex and boundless.

 

It has its own vast desires.

 

It wants to fulfil its own delight.

Its standards are formidable and immense.

 

It looks down at us with indulagence.

Before that our life is petty.

 

It smiles ironically at us.

க்ஷணத்தில் மறையும் தூசியாகும்.

கடந்ததன் பொருளைக் கணக்கிட முடியாது.

அளவிறந்த அற்புதங்கள் அங்கு அர்த்தமற்றவை.

கணக்கெடுத்தால், அவை அல்பமாகும்.

நாம் நம்மை, தானே இயல்பாக உணர்கிறோம்.

நம் சிந்தனைகள் அதன்படி எழுந்து சிறக்கின்றன.

நம்மைச் சுற்றி இப்பிரம்மாண்டமான உலகம் சுழல்வதைக் காண்கிறோம்.

அதன் செயல்களையும் காண்கிறோம்.

நம்மை அதன் மையமாகக் கொள்கிறோம்.

நமக்காக ஏற்பட்டதாக அதைக் கொள்கிறோம்.

நமக்கு உதவி, உபத்திரவம் செய்ய ஏற்பட்டதாக அதை நினைக்கிறோம்.

நாமே நமக்கு முக்கியம்.

நமக்கு ஏக்கமுண்டு. எண்ணங்களும், உணர்வுகளுமுண்டு.

நம்முடைய தேவைகள் உலகத்தின் கடமை என நினைக்கிறோம்.

நின்று நிதானித்துப் பார்க்கலாம்.

பிரம்மாண்டம் தனக்காக ஏற்பட்டது.

நமக்காக வாழ்வதில்லை அது.

அதன் இலட்சியங்கள் பெரியவை.

சிக்கலானதும், பெரியதுமான எண்ணங்களுடையது அது.

அதன் ஆசைகள் அளவு கடந்த பெரியவை.

தன் இன்பத்தைத் தானே பூர்த்தி செய்ய முனைகிறது.

அதன் தரம் உயர்ந்தது, பயங்கரமானது.

நம்மை அது பரிதாபமாகப் பார்க்கிறது.

அதன் முன் நம் வாழ்வு அல்பமானது.

நம்மைக் கண்டு கேலி செய்கிறது.

It makes us go to the other extreme.

We find ourselvesinsignificant.

We should not form such a positive idea.

It would be an ignorant act.

The facts of the universe are great.

We should not shut our eyes to them.

Page 71

Para 2

This is a boundless Movement.

It does not consider us unimportant.

We learn this from Science.

It tells us the case is minute.

The devices in Nature are cunning.

It bestows an intense absorption on works.

It does so to the smallest of works.

Nor does it distinguish the largest of them.

This energy is mighty.

It is a mother.

It is an equal and impartial mother.

It is saman brahma.

It is a great term of the Gita.

It forms the system of sums.

It organises the life of an ant hill.

In both, its intensity is the same.

Even the force of movement is the same.

Size is an illusion.

அதனால் நாம் மறுகோடிக்குப் போகிறோம்.

நாம் பொருட்டல்ல எனக் கருதுகிறோம்.

அதுபோல் தீர்மானமான முடிவுக்கு வரக்கூடாது.

அது அறியாமை.

பிரபஞ்சம் பெரியது.

நாம் அதை மறக்கக் கூடாது.

இது கட்டுக்கடங்காத பிரவாகம்.

நம்மை அது அர்த்தமற்றதாக நினைக்கவில்லை.

விஞ்ஞானம் அதை நமக்கு அறிவுறுத்துகிறது.

இயற்கையின் கவனம் பெரியது.

இயற்கையின் உபாயங்கள் அறிவுடையவை.

வேலைகளை ஊன்றிக் கவனிப்பது இயற்கையின் இயல்பு.

வேலை சிறியது என்பதில்லை.

பெரியது என்பதும் பொருட்டன்று.

சக்தி பிரமாண்டமானது.

அது தாய்.

பாரபட்சமற்ற தாய் இயற்கை. நிதானமானது.

சமம் பிரம்மம் எனப்படும்.

அது கீதையின் வாசகம்.

சூரிய மண்டலத்தை உற்பத்தி செய்ததும் அதுவே.

எறும்புப்புற்றைச் செய்ததும் அதுவே.

இரண்டும் அதற்குச் சமம்.

செலவிட்ட சக்தியும் இரண்டிலும் ஒன்றே.

பரிமாணம் மாயை.

Quantity is another illusion.

In illusion we find one great, the other petty.

We are free to look at the mass of quantity.

Or, we can look at the force of quantity.

Then, we find, the ant is greater than the solar system.

We know the ant lives inside the solar system.

And man is greater than inanimate Nature.

Man reamins greater than even all of Nature.

Again it is an illusion.

It is an illusion of quality.

We can go behind quality and quantity.

Both are aspects of the intensity.

It is the intensity of the movement.

We realise the truth.

Brahman dwells in all.

It dwells equally in all existences.

Brahman is equally partaken by all.

That is the truth of the being.

Brahman is equally distributed in all.

It is so in its energy.

But this too is an illusion of quantity.

The Truth is different.

Brahman dwells in all.

It is indivisible.

It looks as if divided.

எண்ணிக்கையும் மாயை.

மாயையால் ஒன்றைப் பெரிதாகவும், அடுத்ததைச் சிறியதாகவும்

நினைக்கிறோம்.

நாம் பரிணாமத்தைக் கணக்கிடலாம்.

அல்லது சக்தியின் தன்மையைக் கருதலாம்.

அதன்படி எறும்பு சூரிய மண்டலத்தைவிடப் பெரியது.

ஆனால் எறும்பு சூரிய மண்டலத்தின் பகுதி.

மனிதன் ஜடமான இயற்கை அனைத்தையும்விடப் பெரியவன்.

முழுப் பிரபஞ்சத்தைவிடவும், மனிதன் பெரியவன்.

அதுவும் மாயை.

குணம் என்ற அளவில் இது மாயை.

பரிமாணத்தையும், குணத்தையும் கடந்து செல்ல முடியும்.

இரண்டும் சலனத்தின் அம்சங்களாகும்.

அது சலனத்தின் தீவிரமாகும்.

அதன் வழி சத்தியம் தெரிகிறது.

அனைத்திலும் உள்ளது பிரம்மம்.

எல்லாவற்றிலும் பிரம்மம் சமமாக இருக்கின்றது.

அனைத்தும் பிரம்மத்தைச் சமமாக ஏற்கின்றன.

அது - புருஷன் - சத்தியத்தின் அம்சம்.

பிரம்மம் அனைத்திலும் சமமாகப் பரிமாறப்பட்டுள்ளது.

அது சக்தியின் அம்சம்.

இதுவும் - அளவு - பரிமாணத்தின் மாயை.

சத்தியம் வேறு.

பிரம்மம் அனைத்திலும் உள்ளது.

அது அகண்டம்.

பிரம்மம் கண்டமாகத் தென்படுகிறது.

It looks as if distributed.

We can look again.

We can perceptively observe.

Let us not be dominated by intellectual concepts.

Let us be informed by intuition.

It will culminate in knowledge.

That is a knowlege by identity.

Now we make a discovery.

It is other than the mental consciousness.

It is indivisible.

It gives itself wholly to all.

It does not give an equal part of itself.

It gives at one and the same time.

The solar system and the ant hill are the same for it.

To Brahman there is no whole and its parts.

Each thing is all itself.

Each benefits by the whole of Brahman.

Quality and quantity differ.

The self is equal.

The form varies infinitely.

Manner too varies similarly.

The force of action also varies.

But the energy is the same in all.

It is eternal, primal and infinite.

Force of strength goes to make a strong man.

பரிமாறப்பட்டதாகக் காண்கிறது.

நாம் மீண்டும் அதைப்பற்றிச் சிந்திப்போம்.

கூர்ந்து கவனிப்போம்.

அறிவின் ஆட்சியை ஒதுக்குவோம்.

ஞானம் செயல்படட்டும்.

அது பிரம்ம ஞானத்தில் முடியும்.

அது ஐக்கியம் தரும் ஞானம்.

இப்பொழுது புதியது தென்படுகிறது.

நாம் காண்பது மனத்தின் ஜீவியமன்று.

பிரம்மம் அகண்டம்.

தன்னை அனைத்திற்கும் முழுமையாகத் தரவல்லது.

சமமான பகுதிகளைத் தரவில்லை.

ஒரே சமயத்தில், சூரியமண்டலத்திற்கும், எறும்புப் புற்றுக்கும்

தன்னை முழுமையாகத் தருகின்றது என்பது விளங்கும்.

பிரம்மத்திற்கு முழுமை, பகுதி என்பதில்லை.

எதுவும் முழுமையான பிரம்மமே.

பிரம்மத்தின் முழுமைக்குப் பலனுண்டு. எதற்கும் அது

உண்டு.

தரமும், அளவும் மாறும்.

ஆத்மா எங்கும் சமம்.

தோற்றம் முடிவில்லாமல் மாறும்.

செயலின் தோற்றமும் அதுபோல் மாறும்.

செயலின் சக்தியும் அளவு கடந்து மாறும்.

ஆனால் எங்கும் சக்தி சமம், ஒன்றேயாகும்.

அது காலத்தைக் கடந்தது, ஆதியானது, அளவற்றது.

வலிமையின் திறன் பலவானை உருவாக்கும்.

Force of weakness makes the weak.

Both forces are equal.

One is not a whit more than the other.

In one the energy expresses.

In the other the energy is repressed.

The energy spent in both is the same.

Not only these.

Negation and affirmation are likewise equal.

Silence and sound too are similarly equal.

Contd.

வலிமையற்றவனின் திறன் பலஹீனனை உருவாக்கும்.

ஆனால் இரு திறன்களும் சமம்.

ஒன்று அடுத்ததைவிட மயிரிழை மாறாதது.

ஒன்றில் திறன் வெüப்படுகிறது.

அடுத்த இடத்தில் திறனை மறைக்க முயல்கிறோம்.

இரண்டிலும் செலவாகும் சக்தி சமம்.

அது மட்டுமன்று.

உடன்பாடும், எதிர்மறையும் அதேபோல் சமமானவையே.

மௌனமும் சப்தமும் அதேபோல் சமம்.

 

தொடரும்

 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவன் நம்மை நாடி வரும்பொழுது (descent) ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் எழும்பொழுது மனிதன் எப்படி இருக்கிறான் என்பதை பகவான் விவரித்திருக்கிறார். எல்லாப் பழக்கங்களிலிருந்தும் விலகினால் ஆர்வம் எழும்.

பழக்கம் விலகினால் ஆர்வம் எழும்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாடுவதை நிறுத்தி, பார்வை உள்ளே சென்றால், வாழ்வு அற்புத உணர்வாக அணைக்கும்.

உள் நோக்கின் அற்புதம்.

********



book | by Dr. Radut