Skip to Content

அன்பர் உரை

குறுகிய கண்ணோட்டம் - நம் சுயநலத்தை வலியுறுத்துகிறது - அன்னையை விலக்குகிறது பரந்த கண்ணோட்டம் - நம் பர்சனாலிட்டியை விரிவடையச் செய்கிறது - அன்னையை நெருங்கவைக்கிறது

(சென்னை-பெரம்பூர் ரிஷி இல்லம் தியான மையத்தில் 25.04.99 அன்று திருமதி உஷா ராமதாஸ் நிகழ்த்திய உரை)

உலகம் முன்னேறும்பொழுது நாமும் முன்னேற விரும்புகிறோம். நம் முன்னேற்றத்திற்குத் துணை செய்வன பல.அவற்றுள் முக்கியமானது கண்ணோட்டம்.முன்னேற்றத்தின் ஆரம்பம் வசதி. நிம்மதி, சந்தோஷம், பிரபலம், செல்வம், செல்வாக்கு, பதவி ஆகியவை முன்னேற்றத்தின் சமூக நிலைகள்.அறிவு, ஞானம், நிதானம், பொறுமை, ஆத்ம ஞானம், ஆத்மானுபவம், சித்தி ஆகியவை முன்னேற்றத்தின் முடிவான பகுதிகள்.

மனிதன் பெறும் ஆன்மீகச் சித்திகள் மௌனம், சக்தி, ஞானம், மோட்சம், ஆனந்தம் ஆகியவை.முடிவாக மனிதன் பெறும் ஆன்மீகச் சித்தியை முதலிலேயே அவனுடைய முயற்சியின்றி வரமாக அளிக்க அன்னை அவதாரம் எடுத்தார்.அதை நாம் பெற நம்மிடம் அன்னை எதிர்பார்ப்பது சரணாகதி.நம்பிக்கையிருந்தால் சரணாகதி எழும். சரணாகதியை நாடுபவன் யோகம் செய்யும் சாதகன்.

குடும்பவாழ்விலுள்ள பக்தன் விரும்புவது அன்னையை நெருங்கி வந்து, குடும்பக்கடமைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து மனநிம்மதியுடன் சந்தோஷமாகச் சீரும் சிறப்புமாக நல்ல முறையில் வாழ விரும்புகிறான்.அதற்கு எüய இலட்சியங்களான பரந்த கண்ணோட்டம் உதவும்.பரந்த கண்ணோட்டம் வர, குறுகிய கண்ணோட்டத்தைக் கைவிடவேண்டும்.

நாம் சுயநலத்தை அறிவோம்.அது உயர்ந்ததில்லை எனவும் அறிவோம்.ஆனால் சுயநலமானவன் நல்ல வழி, தவறான வழிகளில் திறமையாகச் செல்வாக்காக வாழ்கிறான்.அவன் அன்னைக்கு பிரார்த்தனை செய்தால் பலிக்கிறது.நமக்குப் பலிக்காதவை அவனுக்குப் பலிக்கிறது.இது மனதில் ஒரு கேள்வியை எழும்புகிறது."நாம் சுயநலமில்லாமலிருப்பது தவறா?'' என்ற கேள்வி எழுகிறது.பதில்,

  • சுயநலம் சரியில்லை.
  • நாம் சுயநலமாக இல்லாமலிருப்பது தவறில்லை.
  • சுயநலமி, திறமைசாலியாக இருப்பதால், அவன் திறமைக்குச் செல்வமும், அருளும் கிடைக்கின்றன.
  • நாம் சுயநலமாக இல்லாவிட்டாலும் திறமையின்றி இருப்பதால், செல்வம் பெருகுவதில்லை.பிரார்த்தனை பலிப்பதில்லை.
  • சுயநலத்தை மீறிய திறமை பலிப்பது சரியாகும்.திறமைக்குரிய அளவு அருள் அதிகம்.

மனிதன், நல்லவன், படித்தவன், உயர்ந்தவன் என நாம் அறியும் அனைவருக்கும் அடிப்படையான மனநிலை ஒன்றுண்டு.அது;

  • நான் சரி, பிறர் தவறு.
  • நான் முழுவதும் சரி, பிறர் அனைவரும் தவறு.

இது நம்ப முடியாதது.பெரிய படிப்பு, பெரிய உத்தியோகம், பெரிய அந்தஸ்திலுள்ளவர் அன்னைச் சேவையில் நெடுநாளிருந்து ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறினார்.அவருக்கு அன்னை ஒரு முறையும் பலிக்கவில்லை.ஏன் பலிக்கவில்லை என அவருக்குத் தோன்றவில்லை.பிறருக்குக் கெட்ட செய்தி வந்தால் வாய்விட்டுச் சிரிப்பார், மனம் புளகாங்கிதமடையும்.இது தவறு என அவர் அறியவில்லை.இவர் யாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டாலும்,

 

அவர் தொழில் நசிக்கும், அவர் வீட்டில் தொந்தரவு வரும், சாவும் நேரும்.இவையெல்லாம் அவர் கண்ணில் பட்டாலும், மனதில் படவில்லை.தன்னை, அவர், "எனக்கு அபரிமிதமான நல்லெண்ணமுண்டு'' என விவரிக்கிறார்.நமக்கு அவரைப் பற்றிக் கவலையில்லை.நம்மை இக்கண்ணோட்டத்தில் பரிசீலனை செய்து பார்த்தால்,

  • பிரார்த்தனை பலிக்காத இடத்தில் அவநம்பிக்கையிருக்கும்.
  • பிறர் நம்மைத் திட்டும்பொழுது, நம் மனம் அவர் மீது கெட்ட எண்ணம் கொண்டிருக்கும்.அக்கெட்ட எண்ணமே பிறர் வசவாக வருகிறது.
  • படபடப்பு வரும்பொழுது, அறியாமை செயல்படும்.சிலசமயங்களில் பேராசை முன்வந்து நிற்கும்.
  • அனைவரும் நம் மீது தவறான அபிப்பிராயம் சொல்லும் பொழுது மனம் கர்வமாக இருக்கும்.
  • காரியம் கெடும்பொழுது போட்டி மனப்பான்மை எழும்.
  • வந்த வாய்ப்புத் தவறும் பொழுது பிறர் மீது பொறாமை எழும்.‘''நான்" எழுந்து சாதித்துக் காட்டுவேன் என நினைக்கும்
  • சும்மாயிருக்கும்பொழுது நம் பெருமையை மனம் நினைந்து வியக்கும்.

இவை அனைத்தும் குறுகியக் கண்ணோட்டங்கள்.பரந்த கண்ணோட்டம் எழ முதலில் குறுகியவை விலக வேண்டும்.அது அன்னையை விட்டு நம்மை விலக்குகிறது என அறிய வேண்டும். அன்னையை நெருங்க நாம் குறுகியவற்றை விலக்கி, பரந்த மனநிலையை ஏற்கவேண்டும் என்று தெளிவு பெறுவது அன்னை ஞானம்.

பரந்த கண்ணோட்டம் எது என அறிந்தால் அதைப் பின்பற்றலாம்.நமக்காகச் செயல்படுவதைவிட பிறருக்காக, ஊருக்காக, உலகத்திற்காக, தெய்வத்திற்காகச் செயல்படுவது உயர்ந்தது.தெய்வத்திற்காகச் செயல்படுவதைவிட தெய்வத்தை நம்புவது நல்லது.அதனினும் உயர்ந்தது தெய்வத்திடம் சரணாகதி அடைவது.பிரார்த்தனை பலிக்க வேண்டும் என்று நினைப்பதைவிட இதன் மூலம் அன்னையை நான் அதிகமாக நம்ப விரும்புகிறேன் என்ற நினைவு சிறப்பு.

கம்பனிக்குச் சிரமம் வந்துவிட்டது.கோபுரம் சரிந்தது.எதிரே வர பயப்படுபவர்கள் இன்று எழுந்து நின்று வாய்க்கு வந்தபடிப் பேசுகிறார்கள்.அந்த நிலையில் பலபேரும்'"அன்னையிடம் போவது நல்லது'' என்றனர்.அப்பொழுதுதான் தம் 5ஆம் வயதில் அன்னையைத் தரிசித்தது நினைவு வந்தது.சரி என மனம் ஏற்று பிரார்த்தனை செய்தபொழுது தெம்பு வந்தது.பல நல்ல காரியங்கள் சிறு அளவில் பலித்தன.திடீரென பாங்க் இன்ஸ்பெக்ஷனுக்கு வருவதாகவும், கடுமையான ஆபீசர் தலைமையில் வருவதாகவும் செய்தி.மனம் தளர்ந்தது.அருகிலிருந்த அன்பர், "பயப்படக்கூடாது.நல்லது மட்டுமே நடக்கும்.நாம் செய்வதைச் செய்வோம்.அன்னையை முதலில் கம்பனிக்கு அனுப்புங்கள்'' என்றார்.அப்படியே செய்துவிட்டு பதட்டத்துடனிருந்தார்.மாலையில் கம்பனியிலிருந்து செய்தி வந்தது. "அந்தக் கடுமையான ஆபீசர் வரவில்லை.வந்தவர்கள், கம்பனி, ஆபீஸ், ரிக்கார்ட்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, "இதைவிட நல்லமுறையில் எப்படி நடத்துவது?என்மனம் மாறியது.உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பாங்க் தர நான் சிபார்சு செய்கிறேன்'' என்றார்.

கஷ்டம் விலகியது என்பதைவிட அன்னையை நம்புவது மிகப் பரந்த கண்ணோட்டம்.அது நம்மை அன்னையிடம் நெருக்கமாகக் கொண்டு வருகிறது எனப் புரியலாம்.

சுமார் 25 ஆண்டுகள் அன்னை சேவையிலிருந்து அதிகபட்சத் தவறுகளை ஆர்வமாகச் செய்துவிட்டு தினமும் சமாதிக்குப் போகின்றவர் வாழ்வில் சிரமம் படிப்படியாக அதிகரித்தது.தன்னை உயர்ந்த பக்தன் என நினைப்பதைவிட தம்மிடம் உள்ள தவற்றைக் காண வேண்டும் என அவர் நினைத்த நேரம் ரோட்டில் போகும் 20 மாடு ஓட்டுபவனை, ‘' "பார்த்து ஓட்டக்கூடாதா?'' என்று கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.வந்தவுடன் கரண்ட் போய்விட்டது.ரோட்டில் மாடு வாலால் அடிக்கிறது.வீட்டில் கரண்ட் போகிறது என்றால் என் மேல்தான் தவறா?எனக் கேட்டவர், "சரி மாட்டுக்காரனைப் பேசியது தவறு எனக் கொண்டு மனதால் அவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன்'' என்றார்.கரண்ட் வந்துவிட்டது.விஷயம் கரண்டில் இல்லை, எருமை மாடில்லை.

  • தன் தவற்றை உணர்வது பரந்த கண்ணோட்டம்.
  • அது நம்மை அன்னையிடம் நெருங்க வைக்கும்.
  • மனம் மாறிய நேரம் அன்னை நம்மிடம் வருவதை, கரண்ட் காட்டுகிறது.தினமும் சமாதிக்குப் போய்க் காணாத அன்னை மனம் மாறிய நேரம் நம்மைத் தேடி வருகிறார்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

வாழ்வு ஆசையாலானது.சிறு ஆசை, மனிதனை உத்வேகப்படுத்துகிறது. நாம் சும்மா இருந்தால், ஆழ்மனம் தன் சிறு ஆசைகளில் தீவிரமாக உழல்கிறது.

மனத்தின் ஆழம் ஆசையை ஆழ்ந்து அனுபவிக்கும்.

********



book | by Dr. Radut