Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

மொழிபெயர்ப்பு

ஸ்ரீ அரவிந்தர் பன்மொழிப் புலவர். அவர் பல மொழிகளிலிருந்து நூல்களை மொழிபெயர்த்துள்ளார். அவை,

1) பிரெஞ்சு மொழியிலிருந்து அன்னை எழுதிய "தியானமும், பிரார்த்தனையும்'' என்ற நூலின் பகுதியை மொழிபெயத்துள்ளார்.

2) சமஸ்கிருதம்

இராமாயணத்திலிருந்து தசரதனுடைய பேச்சு, ஆரியநகரம், தாயின்புலம்பல், மனைவிபோன்றவற்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

மகாபாரதத்திலிருந்து விராடபர்வம், உத்யோக பர்வம், பகவத்கீதை ஆகியவற்றை மொழி பெயர்த்தார்.

காளிதாஸனுடைய விக்ரம ஊர்வசி பர்த் ஹரியின் நூல்கள்

3) வங்காளி

பங்கிம் சந்திர சட்டர்ஜியின் "வந்தே மாதரம்', "ஆனந்த மடம்', வைஷ்ணவப் பாசுரங்கள், 14 சாதகர்களுடைய செய்யுள், கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.

4) லத்தீன், கிரேக்க மொழி

ஹோமர், வர்ஜில் ஆகிய கவிகளுடைய காவியங்களைச் சுமார் 10 பக்கங்களில் எழுதினார்.

5) தமிழ்

ஆண்டாள், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருக்குறள் ஆகியவற்றிலிருந்து சுமார் 20 பக்க அளவுக்குச் செய்யுள், குறள், பாசுரம் ஆகியவற்றை ஆங்கிலப்படுத்தியுள்ளார். இவற்றைப் பாரதியின் துணை கொண்டு செய்ததாகக் கேள்விப்பட்டுள்ளேன்.

உலகப்பெருங்கவிகளுள் நம்மாழ்வாரை வைத்து பகவான் எழுதியுள்ளார்.

ஆண்டாள்

வாரணமாயிரம் சூழவலம் வந்து.... கனாக் கண்டேன் தோழி நான் என்ற வரிசையில் 4 பாசுரங்களை மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் ஒன்று.

I dreamed a dream, O friend.

The wedding was fixed for the marrow. And, He, the lion Madhav,

the young Bull whom they call the master of radiances.

He came into the hall of wedding decorated with luxuswis palins.

நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளைக் கழுகு பரிசுடைப் பந்தர்க் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளைப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்.

திருவள்ளுவர்

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவான்

முதற்றேயுலகு. -- என்பதன் மொழிபெயர்ப்பு

Alpha of all letters the first

Of the worlde the original God head the begining

பாயிரத்தில் 10 குறள்களும், வான்சிறப்பு என்ற அதிகாரத்தில் 5 குறள்களும் அவரால் மொழிபெயர்க்கப்பட்டன. தமிழின் பாங்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இசையவில்லை என்கிறார்.

**********



book | by Dr. Radut