Skip to Content

09. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

Synthesis of Yoga

Part IV Chapter 1, Principle of Integral Yoga (P. 586)

  1. சிரமம் என்று காண்பது சிறப்பை அறிவது.
  2. வேலை உள்ளேயிருக்கிறது - உள்ளே மட்டும் உள்ளது.
  3. முக்கியத்தை மூலம் உணர்ந்தால், முடியாதது முடியும்.
  4. பெரிய வேலையைச் சிறியதாக்க, கருவி பெரியதாக இருக்க வேண்டும்.
  5. சமர்ப்பணம் தவிர வேலையில்லை.
  6. யோகத்தைக் கருத்து ஏற்று, ஆத்மாவுக்குச் சமர்ப்பணம் செய்தால் யோகம் சூட்சுமத்தில் பூர்த்தியாகும்.
  7. யோகம் ஜீவனானால் க்ஷணம் யுகமாகும்.
  8. நேரடியாக ஆத்மாவை அடைவது நெறி.
  9. நிதர்சனம் ஆத்ம தரிசனம்.
  10. அன்னை தரிசனம் நிதர்சனம் நித்ய தரிசனமாவது.
  11. உள்ளே கரைந்தவன் உலகைக் காண்பது திரிகால திருஷ்டி.
  12. சத்திய ஜீவனின் விழிப்பு சமாதி.
  13. காலம் மனத்திற்குரியது.
  14. ஆத்மாவுக்குரியது காலத்தைக் கடந்தது.
  15. யோகியில் காலமும், கடந்ததும் சத்திய ஜீவியமாகின்றன.
  16. தன்னை மறந்த பிரம்மம் அன்னையில் வளர்வது சிருஷ்டி.
  17. கணவன், மனைவி, தலைவர் உருவில் அன்னையை ஏற்று கடமையைச் செய்வது வாழ்வில் யோகம்.
  18. இடைவிடாது இதயத்தை அன்னை ஆட்கொண்டதைக் காட்டுவதே மணிக்கொருமுறை செய்யும் சமர்ப்பணம்.
  19. இலட்சியத்தால் இதயம் மலர்வது பொங்கி எழும் பூரிப்பு.
  20. அன்னை பகவானைச் சந்தித்த பொழுது கிருஷ்ண பரமாத்மா நிலையிலிருந்தார்.
  21. ஆத்மா ஆழத்தில் கனிந்து மலர்ந்தால் அன்னை நம்மை நாடி வருவார்.

பொங்கி வரும் சந்தோஷம் ஆத்ம விழிப்புக்கு அறிகுறி. அது நல்ல திருப்பம்.

முதற்படியாக ஒரு முடிவு - தீர்மானம் - எடுப்பது நல்லது. யோகம் என்பது பெரிய விஷயம். அதைச் செய்ய எடுக்கும் முடிவு தீர்க்கமான முடிவாக இருப்பது நல்லது. முடிவு எடுக்க நாளாகலாம். ஆனால் முடிவு என எடுத்தபின், முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது. அது போல் முடிவு அன்னை நம்முள் எடுக்கும் முடிவாக இருக்க நாம் செய்யக் கூடியவை என்ன?

  1. குடும்பத்திலுள்ள சிறு பிரச்சனைகளைச் சமர்ப்பணத்தால் ஒன்று விடாமல் தீர்ப்பது.
  2. வீடு சுத்தமாக இருப்பது.
    (வீட்டைச் சுத்தம் செய்ய நேரம், முயற்சி, செலவாகும். உங்களுக்குத் தெரிந்த வீடுகளில், இடங்களில் அதிகபட்ச சுத்தம் உள்ள இடம் போல் நம் வீட்டைச் சுத்தம் செய்ய முடிவு செய்து, அதற்குரிய தேவைகளைச் சேகரித்தால் அவை தானே சேகரமாவது நம் முயற்சிக்கு சாங்ஷன் - அன்னை அனுமதி - இருப்பதாக அர்த்தம். இங்கும், எங்கும், நிதானமாக பொறுமையாக ஆரம்பிக்கலாம். ஆரம்பித்ததை தவறாமல் தொடர வேண்டும்.)
  3. பேச்சு சத்தம் குறைந்து, அளவும் குறைய வேண்டும். அளவு லீ பாகம் லி பாகம் என 1/8 பாகமாகி தேவைப்பட்டதை சில சொற்களால் முடிந்தால் ஒரு சொல்லால் சொல்லப் பழக வேண்டும்.
  4. சண்டை, சச்சரவு வாழ்வில் இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் வீடு, தொழிலில் அது அறவே விலக்கப்பட வேண்டும்.
  5. முதற்கட்டத்தில் எரிச்சலை வெளியிடக் கூடாது. முடிவான கட்டத்தில் உள்ளே எரிச்சல் எழக் கூடாது.
  6. இதுவரை கூறியவற்றை அடிக்கடி - மாதம் ஒருமுறை, வாரம் ஒருமுறை - மீண்டும் படிப்பது.
  7. சமர்ப்பணத்தை முக்கியமாக மேற்கொள்ள மனமும், செயலும் தயாராகி, இனிச் சமர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலை எழ வேண்டும்.
  8. கடனிருந்தால் திருப்பிக் கொடுக்க முயல வேண்டும். வர வேண்டிய பணம் காலதாமதமானால், கேட்காமல் மௌனமாக வசூல் செய்ய வேண்டும்.
  9. வாழ்வில் புதிய வாய்ப்புகள், நம் தொழிலில் இல்லாத வாய்ப்புகள் எவருக்கும் வராத வாய்ப்புகள் வந்தால் நாம் யோகம் செய்ய முடிவு எடுக்கப் போவதை வாழ்வு ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.
  10. அன்னை அதுபோல் நம் முடிவை ஏற்றுக் கொண்டால் ஆழ்ந்த நிலையில் அமைதியும் சந்தோஷமும் எழும். பொறுமையாக, நிதானமாக, அவசரத்தின் சுவடேயில்லாமல் யோகத்தை ஆரம்பிக்க எடுக்கும் முடிவை அன்னை நிறைவேற்றுவார்.

*********



book | by Dr. Radut