Skip to Content

07. The Life Divine – Outline

The Life Divine – Outline

தமிழ்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

BOOK II - Part 2

ஞானமும் ஆன்மீகப் பரிணாமமும்

ஞானம் அஞ்ஞானத்திலிருந்து வெளிவந்தபின் ஆன்மா ஞானத்திலிருந்து வெளி வருகிறது.

இப்பகுதியில் 14 அத்தியாயங்கள் உள. முதல் அத்தியாயம் (Chapter 15)) பூரண ஞானமும் சத்தியமும் என்பது. மரபு பரமாத்மாவை முடிவாகக் கருதி பரமாத்மா பிரம்மத்தில் சேர்வதுடன் மோட்சத்தை முடித்து விடுகிறார்கள். பகவான் ஸ்ரீ அரவிந்தர் மரபு கூறும் அக்ஷர பிரம்மத்தைக் கடந்த முழு பிரம்மத்தை முடிவாகக் கருதுகிறார். இந்த அத்தியாத்தில் ஜீவாத்மாவோ, பரமாத்மாவோ முடிவல்ல, இரண்டையும் தன்னுட்கொண்ட முழுப் பிரம்மமே முடிவு என்று கூறுகிறார். (அக்ஷர பிரம்மம், க்ஷர பிரம்மம் இரண்டும் சேர்ந்தது முழுப் பிரம்மம்). இதைப் படித்து அறிய முடியாது. யோகம் பயின்று அகந்தை அழிந்து பெற வேண்டிய சித்தியிது, ஞானமில்லை.

(Chapter 16) இரண்டாம் அத்தியாயம் வாழ்வு. நம் இலட்சியம் தெய்வீக வாழ்வு. முழுப் பிரம்மத்தை அடைந்தாலும் இந்த யோகத்திற்கு அதுவும் முடிவல்ல. அதற்கு மேல் அம்முழுப்பிரம்மம் வாழ்வில் வெளிப்பட வேண்டும். அத்துடனும் யோகம் முடியாது. வாழ்வில் முழுப் பிரம்மம் வெளிப்பட்ட பின்னரே பாதாளத் திலுள்ள தீமையைத் தீண்ட முடியும். பாதாளம் மனிதனுக்குக் கட்டுப்பட்டதல்ல. பரமாத்மாவுக்குக் கட்டுப்படும். பாதாளமும் பரமாத்மாவும் மனிதனில் இணைவது மனிதன் தன் இலட்சியக் கடமையை நிறைவேற்றுவதாகும். இக்கருத்து (Chapter 16) இப்பகுதியின் மூன்றாம் அத்தியாயத்தில் கூறப்படுகிறது. Chapter 17 -இல் இதைத் தொடர்ந்து அப்படி இணைந்த பாதாளமும் பரமாத்மாவும் உயர்ந்து, திருவுருமாறி, பிரம்ம சத்தியத்துடன் இணைவது அடுத்த கட்டம் என விளக்கப்படுகிறது. அஞ்ஞானம் மனத்திலாரம்பித்து வாழ்வில் ஆழ்ந்து உடலில் செறிந்த இருளாகி அதன் கீழேயுள்ள ஜட இருளில் பூர்த்தியாகிறது. Chapter 18-இல் எழுவகை அஞ்ஞானம் திருவுருமாற்றத்தால் எழுவகை ஞானமாவதை விளக்குகிறார். இவ்வழியாக சிருஷ்டியில் உள்ள அஞ்ஞானம் பூரண ஞானமானபின் மனிதன் இதுவரை பெற்ற மாற்றங்கள் அனைத்தும் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயுள்ள வாழ்வுக்குரியது எனவும் வாழ்வு பிறப்பிற்குமுன் ஆரம்பித்து இறப்பிற்குப்பின் தொடர்ந்து ஆதியும் அந்தமுமற்றது எனவும் காண்கிறான். பிரபஞ்சமே அந்த வாழ்வுக்குட்பட்டது. பிரபஞ்சமே பிரளயத்தில் அழிந்தாலும் இவ்வாழ்வு இருக்கும். இது மனத்தால் உலகில் சிருஷ்டிக்கப்பட்ட வாழ்வாகும். இதனுள் சூட்சும உலகம் உண்டு. கண்ணுக்குத் தெரியாத ஆவி லோகங்கள் ஆத்ம லோகங்கள் உள்ளன. மரணத்திற்குப்பின் மனித வாழ்வு விரிந்து பரந்து இவ்வுலகில் பரவுகிறது. இக்கருத்துகள் Chapter 19-இல் விளக்கப்படுகின்றன. ஆத்மா உடலிலிருந்தும் மனத்திலிருந்தும் விடுபட்டு இந்த ஜென்மத்தில் பெற்ற அனுபவங்களையும், அதன் சாரங்களையும் முழுவதும் கிரகிக்க ஓய்வு பெற விரும்பி தனக்குரிய இடத்தை சூட்சும உலகில் கண்டு அமைதியுறும் (Chapter 20). ஆத்மா பரிணாமத்தால் வளர்ந்து மறுபிறப்புக்கு தயாராகும்வரை இந்நிகழ்ச்சி தொடரும். அந்த சூட்சும லோக அனுபவம் ஆத்மாவுக்கு இரண்டு பெரிய சித்திகளைத் தருகின்றது. அது அம வாழ்வின் அம்சங்கள். அவை (Chapter 21) 1. ஆத்மா பிரம்மத்தைப் பிறப்பு, இறப்பு இல்லாத லோகத்தில் அறிகிறது. 2. அதே போல் சிருஷ்டியைக் கடந்த லோகத்தில் பிரம்மத்தை ஆத்மா அறிகிறது. இதுவே வேத ரிஷிகள் பெற்ற மோட்சம். இவ்வாத்மானுபவங்களுடன் மறுபிறப்பு எய்தியபின் மனிதனாகிறான். அவன் ஆத்மா உள்ளே தொடர்ந்து பரிணாம வளர்ச்சி பெறும்பொழுது அம்மாறுதலுக்கேற்ப அவன் மனமும், உயிரும் திருவுருமாற்றம் அடைகின்றன. தொடர்ந்த திருவுருமாற்றம் இப்பிறப்பில் முடியாது. அது முடிய உடலும் திருவுருமாற வேண்டும் (Chapter 22). இவ்வழியாக நாமறிந்த மனிதன் ஆன்மிக மனிதனாக அதே உடலில் ஜனிக்கிறான் (Chapter 23). அவனது ஆத்மா பிரபஞ்சம் முழுவதும் பரவும்பொழுது அவன் ஆன்மிக மனிதனாகிறான் (Chapter 24). இவனால் அடுத்தவருக்குத் தான் பெற்ற ஆன்மிகப் பலனைத் தர முடியும். இந்த யோகம் திருவுருமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட யோகம். அவை மூன்று திருவுருமாற்றங்கள்; சைத்தியத் திருவுருமாற்றம், ஆன்மிகத் திருவுருமாற்றம், சத்திய ஜீவியத் திருவுருமாற்றம். அவற்றைக் கூறுவது அடுத்த 25-ஆம் அத்தியாயம். இது பூர்த்தி பெற நேரடியாக பிரம்மத்தை நாட முடியாது. அது பகுதி. அதாவது சிருஷ்டியின் கீழ்ப்பகுதியான பாதாளத்தை விலக்கிய மேல்பகுதி. கீழ் மேல் பகுதிகள் சேர்ந்த முழுமையே பூரண யோகத்திற்குரியது. இதற்கு உள்மனம் சென்று அங்கிருந்து அடிமனம் போய் அங்கு சைத்திய புருஷனை அடைந்து அவனை மேல் மனதிற்கும் அதற்கும் மேலேயுள்ள 4 ஆன்மிக மனங்கட்குமாக உயர்த்தினால் பொன் மூடியைக் கடந்து சத்திய ஜீவியத்தை அடையலாம் (Chapter 26). சத்திய ஜீவியத்தை அடைந்தால் மனிதன் சத்திய ஜீவனாவான் (Chapter 27). அவன் வாழ்வு தெய்வீக வாழ்வு (Chapter 28).

**********

தெய்வீக வாழ்வு - Chapter 28

மனிதன் தன்னை மனம் என நம்புவது பரம்பரை. தான் மனமில்லை சத்திய ஜீவியம் என அறிவது ஸ்ரீ அரவிந்தம். சத்திய ஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவிய ஞானமயமான சக்தி. பூரிதமான தன்னை பிரம்மாவாக உணர்ந்த ஜீவன். இதைத் திருவுருமாற்றம் பெற்றுத் தரும். அதற்குச் சரணாகதி அவசியம். அந்த வாழ்வு எளிமையானதாகவோ ஆடம்பரமானதாகவோ இருக்கலாம். இதை அடைந்தபின் பரிணாமம் அஞ்ஞானம் ஞானமாவதிலிருந்து மாறி ஞானம் பெரிய ஞானமாகும் பாதையில் நுழைகிறது. மனிதன் (Taste of Ignorance) அஞ்ஞான ரசனையில் திளைப்பதால் இந்த அற்புதம் அவனைச் சூழ்ந்திருந்தபோதிலும் அவன் மனத்தைத் தொடுவதில்லை.

(தொடரும்)

**********



book | by Dr. Radut