Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 191: Accepted by her mighty loneliness.

வலிமை நிறைந்து தனித்து வந்ததை ஏற்று

  • அவளுடன் நிஷ்டையின் சிகரத்தில் நின்றான்
  • ஜீவனையும் வாழ்வையும் புனிதமாக்கும் சிகரங்கள்
  • கடந்துறையும் சத்தியத்திற்கு அவை அர்ப்பணம் செய்யப்பட்டன
  • அனந்தத்துள் அவள் இவ்வழி அவிழ்த்து விடப்பட்டாள்
  • படம் எடுத்த கழுகுகள் தரும் முக்கியத்துவம்
  • எண்ணத்தின் தூதுவன் பிரம்மத்தை நாடிப் போகிறான்
  • ஆத்ம திருஷ்டியும் ஆத்ம புலனும் ஐக்கியத்தால் ஏற்கும்
  • வீட்டினுள் நுழைவதைப் போல் அவள் ஆழத்துள் புகுந்து
  • அவள் அடைய விரும்பிய அனைத்தையும் அவன் அடைந்தான்
  • அவள் எண்ணத்தால் சிந்தித்து, அவள் சுவட்டால் யாத்திரையை ஏற்று
  • அவள் மூச்சில் வாழ்ந்து, அவள் பார்வையால் பரீட்சித்து
  • அவள் ஆத்ம இரகஸ்யத்தை அறிய விழைந்து
  • கண்ட காட்சியால் ஆக்ரமிக்கப்பட்டு
  • அவள் ஆடம்பர ஆட்டத்தை அவன் வியந்து புகழ்ந்தான்
  • அவள் மென்மையான கலையின் அதிகபட்ச அற்புதம்
  • வலிந்த அவள் குரல் கேட்டுப் புல்லரித்து
  • அவள் வலிமையின் மாயங்களைத் தீவிர உணர்வுடன் தாங்கி
  • புதிரான அவள் முடிவு படீரென அவன் மீது விழுந்ததையறிந்து
  • விதியைக் கடைந்தெடுக்கும் அவள் கைகள் அவற்றின் வலிய பிடியில்
  • அவள் தொட்டு நகர்ந்தான், அவள் சக்தி பிடித்து ஓட்டுகிறது
  • உள்ளே அவள் ஆத்ம அழுகையையும் அவன் கண்டான்
  • தொட்டு அழியும் சக்தியைப் பிடிக்க முயன்று தோற்று
  • அவள் நம்பிக்கையான நிதானமான பார்வை ஏமாற்றத்துடன் கலந்து
  • ஆர்வமுள்ள அவளுறுப்புகளைப் பற்றியணைத்த அவன் பாசத்தீவிரம்
  • விம்மும் மார்பின் சிரமமும் உணர்ச்சியின் எழுச்சியும்
  • திருப்தியற்ற பலனுடன் போராடும் அவள் மனம்
  • அவள் பிடிக்கும் தவறும் பிரியமான காந்தன்
  • திரையிட்டும் தேடும் சக்தியை அவன் சந்தித்தான்
  • கடத்தப்பட்ட தெய்வம் கட்டும் கற்பனை மோட்சம்
  • மாயச்சிலை மறைந்த சூரியனை நிமிர்ந்து நோக்கிற்று
  • அவள் ரூபத்தில் எப்பொழுதும் அவன் கண்ட ஆத்மா
  • அமைதியாய் அருகிலிருப்பது அவள் சுபாவத்தின் வலிமை
  • தோன்றுமிடமெல்லாம் தோன்றாதவளைக் கண்டான்
  • பூவுலகிலும் ஆத்மா வாழ்வின் இரகஸ்யம்

*********



book | by Dr. Radut