Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேக்கப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

II/1. Indeterminates, Cosmic Determinations and the Indeterminable
Page 306
Para 11
II/1. பிரபஞ்ச சிருஷ்டி பிரம்ம சிருஷ்டி
 
An approach from material end of Existence cannot give us any certitude of validity for this hypothesis.
 
 
 
 
Also for any other explanation of Nature and her procedure.
ஜடம் எனும் முனையிலிருந்து நெருங்கினால் இந்த அனுமானம் ஏற்புடையது என்று உறுதி செய்ய முடியாது.
இயற்கை மற்றும் அதன் செயல்பாட்டின் வேறு எந்த விளக்கத்திற்கும் அது உறுதிப்பாடு அளிக்க முடியாது.
The veil cast by the original Inconscience is too thick for the Mind to pierce.
மூலமான ஜட இருளால் எழுப்பப்பட்ட திரை மனத்தால் ஊடுருவ முடியாத அளவு தடிப்பானது.
Behind this veil is hidden the secret origination of what is manifested.
வெளிப்பட்டுள்ளவைகளின் ரகசியத் தோற்றுவாய் இத்திரைக்குப் பின் மறைந்துள்ளது.
There are seated the truths and powers appearing to us as Nature.
அங்கு வீற்றிருக்கும் சத்தியங்கள் மற்றும் சக்திகள் நமக்கு இயற்கையாகத் தோற்றமளிக்கின்றன.
They underlie the processes of that material front of Nature.
இயற்கையின் ஜடத்தோற்றச் செய்முறைகளின் அடிப்படையாக அவை அமைகின்றன.
We want to know with greater certitude.
நாம் இவற்றை மிக உயர்ந்த உறுதிப்பாட்டுடன் அறிய விரும்புகிறோம்.
For that, we must follow the curve of evolving
consciousness.
அதற்கு நாம் பரிணாமம் பெறும் ஜீவியத்தின் வளைகோட்டைப் பின்பற்ற வேண்டும்.
It arrives at a height and largeness of self-enlightenment.
அது உயர்ந்தும் பக்கவாட்டிலும் பெருகும் சுய ஞானத்தை அடையும்.
In that the primal secret is self-discovered.
அதில் ஆதியான ரகசியம் சுயமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
For presumably it must evolve.
நம் ஊகத்தின்படி அது பரிணாமம் பெற வேண்டும்
It must eventually bring out what was held from the beginning.
ஆரம்பத்திலிருந்து மறைந்துள்ளதை அது வெளிக்கொணர வேண்டும்.
It was held by the occult original Consciousness in things.
மூலமான நுண்ணிய ஜீவியத்தால் பொருட்களில் அது மறைக்கப்பட்டுள்ளது.
It is a gradual manifestation of that Consciousness.
அது ஜீவியத்தின் படிப்படியான வெளிப்பாடு.
In Life it would be clearly hopeless to seek for the truth.
வாழ்வில் சத்தியத்தை நாடுவது என்பது நிச்சயமாக நம் நம்பிக்கையைத் தகர்க்கும் ஒரு செயல்.
For Life begins with a formulation in which consciousness is still submental.
ஏனெனில் வாழ்வு அதன் படைப்பைத் தொடங்கும் பொழுது ஜீவியம் மனத்தினுள் ஆழ்ந்து உள்ளது.
Therefore to us as mental beings, it appears as inconscient.
ஆகவே, மனத்தால் செயல்படும் மனிதனுக்கு அது ஜட இருளாகக் காட்சியளிக்கிறது.
Our own investigation cannot be more fruitful of the secret truth .
நம் சொந்த ஆராய்ச்சி அந்த ரகசியமான சத்தியத்தை அறிய உதவாது.
Even when mind develops in life, its first aspect is a mentality.
மனம் வாழ்வில் வளர்ச்சி பெறும் போது அதன் முதல் அம்சம் மனப்பான்மை.
It is involved in action, in vital physical needs, in impulses, desires.
அது செயல், உணர்வு மற்றும் உடலின் தேவைகள், உத்வேகம், ஆசைகள் இவற்றில் ஆழ்ந்துள்ளது.
It is unable to stand back from these things and observe and know them.
அவற்றிலிருந்து பிரிந்து நின்று அவற்றைக் கண்காணிக்க மற்றும் அறிய அதனால் இயலவில்லை
In the human mind there is the first hope of understanding
மனித மனத்தில் புரிந்து அறியும் திறனுக்கான முதல் ஆர்வம் உள்ளது.
There is hope of discovery, a free comprehension.
அங்குக் கண்டுபிடிக்கும் ஆர்வம் மற்றும் சுதந்திரமாக அறியும் சக்தி உண்டு.
Here we might be coming to self-knowledge and worldknowledge.
இங்கு நாம் சுய ஞானம் மற்றும் உலக ஞானத்தை அடையலாம்.
But in fact our mind can at first only observe facts and processes
ஆனால் உண்மையில் நம் மனம் முதலில் நிகழ்பாடுகள் மற்றும் செய்முறைகளை மட்டுமே பார்க்க முடியும்
For the rest it has to make deductions and inferences.
பிறவற்றை அது பகுத்தறிகிறது மற்றும் ஊகித்தறிகிறது.
It has to construct hypotheses, to reason, to speculate.
பகுத்தறிய, ஊகித்தறிய அது அனுமானங்களை எழுப்ப வேண்டியுள்ளது.
To discover the secret of Consciousness it would have to know itself.
ஜீவியத்தின் ரகசியத்தைக் கண்டறிய அதற்கு தன்னையறிவது அவசியமாகிறது.
It would have to determine the reality of its own being.
அது தன் சொந்த ஜீவனின் சத்தியத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
But the emerging Consciousness in animal life is involved in vital action and movement.
விலங்கு வாழ்வில் வெளிப்படும் ஜீவியம் உணர்வின் செயல் மற்றும் உணர்வின் இயக்கத்தில் புதைந்துள்ளது.
Our mind-consciousness is involved in its own whirl of thoughts.
அது போல் மனிதனின் ஜீவியம் அவனது சொந்த எண்ணச் சுழல்களில்ஆழ்ந்துள்ளது.
That is an activity in which it is carried on without rest.
அச்செயலில் ஜீவியம் ஓய்வின்றித் தொடர்கிறது.
In that its very speculations are determined by its own temperament.
அதில் அதன் சிந்தனை அதன் சொந்த மனப்போக்கால் நிர்ணயிக்கப்படுகிறது.
They are determined by its turn, past formation and line of energy.
அவை அதன் திருப்பம், கடந்த கால உருவாக்கம் மற்றும் சக்தி செயல்படும் வழி இவற்றால் நிர்ணயிக்கப்படுகிறது.
They are determined by inclination, an inborn natural selection.
அவை பிறப்பால் அமையப் பெற்ற இயல்புக்குரிய விருப்பத் தேர்வால் நிர்ணயிக்கப்படுகின்றன.
We do not freely determine our thinking according to the truth of things.
நாம் நம் எண்ணத்தை விஷயங்களில் பொதிந்துள்ள சத்தியத்தின்படி சுதந்திரமாக நிர்ணயிப்பதில்லை
It is determined for us by our nature.
நம் குணத்தால் நாம் அதை நிர்ணயிக்கிறோம்
We can indeed stand back with a certain detachment.
உண்மையில் பற்றற்ற நிலையில் நம்மால் விஷயங்களிலிருந்து ஒதுங்கி நிற்க முடியும்
We can observe the workings of the mental Energy in us.
நம் மனோசக்தியின் செயல்பாடுகளை நாம் பார்வையில் முடியும்.
But it is still only its process that we see.
இருந்தாலும் நாம் பார்ப்பது அவற்றின் செயல்முறைகளை மட்டுமே.
It is not any original source of our mental determinations.
நம் மனத்தின் தீர்மானங்களுக்கான மூல உற்பத்தி ஸ்தானத்தை அல்ல.
We can build theories and hypotheses of the process of Mind.
மனத்தின் செயல்முறைகளைப் பற்றிய கொள்கைகள் மற்றும்
அனுமானங்களை நாம் எழுப்ப முடியும்
 
But a veil is still there over the inner secret of ourselves, our consciousness, our total nature.
ஆனால், நம் அகத்தின் ரகசியம், நம் ஜீவியம் மற்றும் நம் முழு இயல்பின்மேல் திரை இன்னும் உள்ளது.
Contd...
தொடரும்…



book | by Dr. Radut