Skip to Content

06. அஜெண்டா - உடல் பெற்ற தெம்பு உலகத்துத் தெம்பு

அஜெண்டா

உடல் பெற்ற தெம்பு உலகத்துத் தெம்பு.

Volume 2, page 143

  • உடல் ஜடம், ஒதுக்கப்பட வேண்டியது. உடலைக் கவனிப்பது துறவிக்கு முறையில்லை என்பது ஆயிரம் கால மரபு. தலைமுடி சடையாகும். காயம் பட்டால் கவனிப்பது சரியில்லை. தானே குணமாக வேண்டும். உடல் துறவிக்குத் தடை.
  • பூரண யோகம் அநேகமாக மரபு கூறுவதைத் தலைகீழாகக் கூறும்.
  • உடலைப் பேண வேண்டும். உடல் உயர்ந்தது உன்னத- மானது. உயிரைவிட உயர்ந்தது உடல். உடல் ஆனந்தமய ஜீவன். வராத ஆனந்தம் தவப்பலனாக வந்தால் மின்னல் போல் மறையும். உடல் திருவுருமாறினால் மின்னலாக வந்த ஆனந்தம் பேரானந்தமாகப் பெருகி நிலையாக இருக்கும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.
    உடல் ஜீவனுக்கு அஸ்திவாரம். உபநிஷதம் கூறியபடி உடல் ஆன்மாவுக்கு ஆடை, உடலுள் பெரும் சக்தி ஒளி வேகத்தில் ஓடுகிறது என விஞ்ஞானம் கூறுகிறது. பகவான் அதை ஏற்று உடல் absolute peace பிரம்ம சாந்தியுடையது, absolute mastery பிரம்ம ஆளுமையுடையது. ஆனால் அதன் சக்தி கண்மூடியானது. சக்தி கண் விழித்தால் ஆனந்தம் புல்லரிக்கும் என்கிறார். கண் மூடிய சக்தி உடலை ஆள்கிறது. சக்தி கண் விழித்தால் உடல் சக்தியை ஆளும். அது உலகத்தின் திறனாகும் என்கிறார்.
  • உடலில் சத்திய ஜீவியம் வந்து இறங்கினால் பிரம்மம் (Self) ஆத்மா (Spirit) வெளிவரும். அதுவே பரிணாமத்திற்கு முடிவான நிலை.
  • உடலுக்குப் பார்வையுண்டு, குரலைக் கேட்கும், ருசியை அறியும், மணத்தை நுகரும். அன்னைக்கு யோகம் பலித்தபின் முதுகில் கண் ஏற்பட்டது என்றார்.
    காலை நாலரை மணிக்கெழுந்து Mother தம் அறையுள் நடப்பார். நடப்பார் எனில் கால்களால் நடப்பதில்லை. தன்னையும், தன் உடலையும், தன் கால்களையும் உள்ளிருந்து எழும் சக்தியிடம் சமர்ப்பணம் செய்து நடப்பார். ஒரு நிமிஷத்தில் தன் 92ஆம் வயதில் அறையை நான்கு (அல்லது) ஐந்து முறை சுற்றி வருவேன் என்றார்.
  • உடலில் உணர்வுண்டு, மனம் உண்டு. உடலின் செல்லில் மனம் அன்னைக்கு விழிப்புற்றது. செல் உருவம் பெற்றது. செல்லைக் கடந்த நிலையுண்டு. அதை material body ஜடமான உடல் என்கிறார். அவ்வுடலுக்கும் மனம் உண்டு material mind. அம்மனம் அன்னையின் பிரார்த்தனையைத் தானே ஏற்றது. தான் திருவுருமாறப் பிரார்த்தனை செய்தது. அன்னை ஒரு நாள் 24 பேப்பர் எடுக்க ஓரளவு பேப்பர் எடுத்தார். அது சரியாக 24 இருந்தது. ‘என் விரல்களுக்கு எண்ணிக்கை தெரியும்’ என்றார்.
  • இது அன்பர்கட்கு ஒரு சமயம் நடப்பதுண்டு.
  • உடல் ஆன்ம விழிப்புற்றால் அற்புதம் நடக்கும்.
  • உடல் ஜடமல்ல, உயிரல்ல, மனமல்ல, ஆத்மாவாகும் என்கிறார் அன்னை.
  • உடலில் விழிக்கும் ஆத்மா சைத்திய புருஷன்.
  • உடல் உயிரைவிட உயர்ந்தது.

***********

ஜீவிய மணி

அனைவரையும் பற்றிய நல்லெண்ணம் நம்மை ஆண்டவன் நல்லெண்ணத்திற்குப் பாத்திரமாக்கும்.

********



book | by Dr. Radut