Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

பல இடங்களில் ஒரே சமயத்தில் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

Volume 10, page 88

  • ஒரு மகான் பிறர் திருஷ்டியில் வெளிப்பட பார்ப்பவர் நிலையும், தெரிபவர் நிலையும் உயர வேண்டும்.
  • ஆசை, ஆர்வம், ஈடுபாடு, பக்தி என மனம் அறியும் பல நிலைகள் உள்ளன.
  • நம்மை அறியாத ஒருவரை நாம் பார்த்ததில்லை என்றாலும், ஆழ்ந்து நினைத்து உருகினால் அவர் உருவம் மனத்தில் உதயமாகும். இது மனத்தின் திறன்.
  • தெரிந்தவர் ஒருவர் அதுபோல் மனத்தில் எழுந்தால், எதிரில் நிற்பார்.
  • கல்லூரி ஹாஸ்டலில் உள்ள அண்ணனை தங்கை அது போல் நினைத்தால் அவள் குரல் அவனுக்குக் கேட்கும்.
  • விஸ்வாமித்திர காயத்ரியை முறைப்படி உபாசிப்பவருக்கு அவர் விரும்பினால் விஸ்வாமித்திரர் மனத்தில் தோன்றுவார்.
  • 40 ஆண்டிற்குமுன் பார்த்த நண்பரை அது போல் நினைத்தால், அவர் மனதில் தோன்றினால் அவர் அந்த வாரம் எதிரில் தென்படுவார்.
  • பிதிர்ராஜ்யம், முன்னோர் ஆசிகளை நாம் அறிவோம்.
  • தொடர்பு விட்டுப் போன உறவினர், நண்பர், 20,000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்வதாகக் கேள்விப்பட்டு அவர் பெரும் சொத்து பெற மனம் மேற்சொன்னது போல் கொஞ்ச நாள் விழைந்து மறந்தபின் சில ஆண்டுகட்குப்பின் அவர் அன்பர் நினைத்த அந்தச் சொத்தை பெற்று விட்டார் என்ற செய்தி வரும்.
    இது வாழ்வின் கூறுகள்.
  • பொதுவாக ஒரு ரிஷி முக்தியடையும் பொழுது அவர் 1000 இடங்களில் தோன்றுவார்.
  • கூலி வேலை செய்தவர் 100 கல்லூரிகள் நடத்துகிறார் என்றால், அவருக்குத் திறமை, உழைப்புள்ளது தெளிவு. அவர் வாழ்வில் அவரை அன்பாக இதமாக நினைந்து அன்பால் வாழ்த்தும் ஜீவன் ஒன்றிருந்தால் அது உலக வழக்கை நமக்குணர்த்தும்.
  • சனியனிருப்பதற்கு ஏராளமான அடையாளங்களுண்டு. அவற்றுள் தலையில் காக்கை அடிப்பது ஒன்று. அவர் வாழ்வு அதிர்ஷ்டமாகி, அவர் தொடர்புள்ள அனைவரும் அதிர்ஷ்டம் பெறுவதை அவர் அன்பரானபின் அறிந்து கடந்த கால சமர்ப்பணத்தில் அந்த துர்பாக்கியமான ஆண்டில் புதுவைக்கு உறவினரை சந்திக்க வந்தது நினைவு வந்தது.
    சனியன் விலகி, அதிர்ஷ்டமாக மாறுவது திருவுருமாற்றம்.
  • ஆன்மீக அம்சம், ஆன்மீக அதிர்ஷ்டம், ஆன்மீகப் பெருந்தன்மை, ஆன்மீக உயர்வு, ஆன்மீக பெருமையென ஏராளமானவையுண்டு. கலகலப்பாக சிரித்து மகிழும் அன்பருக்கு இவற்றுள் ஒன்று நெல்லிடையிருந்தால் அவர் அன்பரானபின் அது உலகளவு பெருகும்.
    அவரை நினைப்பவருக்குக் குதூகலம் எழும்.
    அவர் ஆன்மீகப் பொக்கிஷம்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகம் ஆனந்தத்தால் சிருஷ்டிக்கப்படுகிறது. செயல்கள் ஆனந்தத்தால் இயங்குகின்றன. முடிவாக அவை ஆனந்தத்தை நாடுகின்றன’ என உபநிஷதம் கூறுகிறது. உபநிஷதம் கூறும் ஆனந்தம் - Bliss - சச்சிதானந்தத்தின் பேரானந்தம். ஸ்ரீ அரவிந்தம் கூறும் ஆனந்தம் - Delight - அதைவிடப் பெரியது. பேரின்பத்தைவிடப் பெரிய ஆனந்தமான சிருஷ்டியின் ஆனந்தம் அது. மேலுலகில் உள்ள பேரின்பத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்த சச்சிதானந்தம் முயன்று வெற்றி பெறுவது, இதுவரை உலகில் எவரும் அறியாத ஆனந்தம். இன்று விமானத்தில் சாதாரண மனிதர்கள் போகிறார்கள். அன்று அரசனோ, சக்ரவர்த்தியோ அறியாத சௌகரியம் அது. சத்திய ஜீவியம் உலகில் வந்தபின் அன்பர்கள் அனுபவிக்கும் ஆனந்தம் இது.

**********



book | by Dr. Radut