Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

107. Life Response - எதிரியை உயர்த்தும், தாழ்த்தும் வாழ்வின் எதிரொலி

  • Life Response தவறறியாதது. இது பலவகையிலும் எழும்.
  • நிலையை உயர்த்தும், எதிரியை மடக்கும், அழித்தவனை வாழ வைக்கும், அழிக்க முயல்பவனை அழிக்கும். வாழ்வின் எல்லா அம்சங்களும் எதிரொலிக்குண்டு.
  • எந்த அளவில் ஒருவருக்கு Life Response இருந்தாலும் அவருக்கு யோகம் பலிக்கும்.
  • பவர் என்பதை நல்ல முறையில் மட்டும் பயன்படுத்துவது முறை.
  • மந்திரம் (Magic) என்பது வேத காலப் பொக்கிஷம். அதர்வண வேதம் அதற்குரியது என்பது பாமர மக்கள் வழக்கு. மாயத்தை ஏற்படுத்தும் மந்திரம் ஆச்சரியமான உண்மைகளையும் சாதிக்கும் எனப் பகவான் கூறுகிறார். நடைமுறையில் மந்திரம் மனிதனை அழிக்கப் பயன்படுகிறது. அதற்கு எதிரானது
    மனித நிலையை உயர்த்துவது.
    பிறர் நிலையை உயர்த்துவது சிறப்பு.
    தன்னிலையை உயர்த்துவது தவறில்லை.
  • குதர்க்கமான குரு அல்பமானவர். சிஷ்யர் இவரை குருவாக ஏற்கவில்லை.
    குரு ஸ்தானத்தை சுயநலமி தானே ஏற்படுத்திக் கொண்டார். அன்பன் தன் ஆத்ம சுத்திக்காக ஏற்றுக்கொண்ட கட்டுப்பாடுகளில் (discipline) சுயநலமான பலன் பெற ‘குரு’ முடிவு செய்து விஷயம் நடக்கிறது.
  • அன்பனுடைய பல கட்டுப்பாடுகளில் ஒன்று தனக்கு வரும் டாலர் (dollar) செக்குகளை தன் அக்கௌண்ட்டில் போடாமல் குரு அக்கௌண்ட்டில் போட்டு பணம் எடுப்பது.
  • அன்பனுக்குக் கார் பரிசளிக்க ஒருவர் $3000 செக் கொடுத்தார். அன்பன் வழக்கம் போல் குருவிடம் அதைக் கொடுத்தார். குரு பெற்றுக் கொண்டு மறுநாள் செக்கைத் திருப்பிக் கொடுத்து “உன்னுடைய அக்கௌண்ட்டில் போட்டுக் கொள்” என்றார். தன் அக்கௌண்ட்டில் போட்டால் அது அன்பன் ஆசீர்வாதம் பெறுவது என ‘குரு’ தன் நிலையைத் தானே உயர்த்திக் கொண்டார்.
  • Life Response செயல்பட்டது. குருவிடம் வேறொருவர் $1000 கேட்டு வந்தார்.
  • மறுநாள் குரு சிஷ்யனிடம் “அந்த செக் வேண்டும்” எனக் கேட்டார்.
    செக் பாங்கிற்குப் போய் பணமாகி விட்டது.
    குருவிற்கு டாலர் கிடைக்கவில்லை.
    வாழ்க்கை ஒரு அன்பர் வாழ்வில் எதிரொலியை எழுப்புமானால் அவருக்கு யோகம் பலிக்கும் எனப் பொருள்.
    அன்பன் பங்கு கொள்ளாமல் குதர்க்கமானவர்க்கு வாழ்க்கை குதர்க்கமாக பதில் கொடுத்த நிகழ்ச்சியிது.

எதிரிக்கும் எதிரொலி நல்லது செய்யும்
அதுவே நாம் எதிரொலியைப் பயன்படுத்தும் முறை.
நல்லதைப் பெற்ற எதிரியும் அல்பமாகத் தொந்தரவு
செய்யத் தவற மாட்டார்.

*******

ஜீவிய மணி

எவர் எப்படிப் பழகினாலும் நாம் பிரியமாகப் பழகினால்தான் நம் மனம் சரியாக இருப்பதாக அர்த்தம்.

**********



book | by Dr. Radut