Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/14. சொல்லி சாதிப்பது சொல்பம். சொல்லாமல் சாதிப்பது அபரிமிதம். பெரும் சாதனைகள் சொல் எழ அனுமதிப்பதில்øல. சாதனையை நாடாத ஆத்மா சாதனையின் மூலம். சாதனை மனிதனுக்கு. சாதனை தேவையற்ற ஆத்மா சாதனையை ஏற்று சாதிப்பது சிருஷ்டி. மனித சாதனை வேதனையிலிருந்து மீள்வது மனிதனில் தெய்வம் சாதிப்பது, உடலின் சாதனை.

  • எல்லோரும் செய்வது சாதனையானாலும், எவராலும் முடியாததை முடிப்பதையே சாதனை என்போம்.
  • பெரியவர் அன்றாட அனுபவம், சிறுவருக்குச் சாதனை.
  • ஐம்பது வயதில் எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக் கொள்பவருக்கு ஒரு புத்தகம் படித்து முடிப்பது சாதனை.
  • 1950-இல் அமெரிக்கா போவது இந்திய இளைஞர்கட்குப் பெரும் சாதனை.
  • திருமணமாகாத பட்டதாரிப் பெண் அந்த நாளில் கல்லூரியில் வேலை செய்தார்.
    அங்கு வந்த அமெரிக்கப் பெண் புரொபசருக்கு இவரைப் பிடித்து விட்டது.
    அமெரிக்காவிற்கு M.Sc.. படிக்கக் கூப்பிட்டார்.
    அது பெரிய வாய்ப்பு, எளிதில் கிட்டாதது.
    அமெரிக்கா போகலாம், பட்டம் பெறலாம், திரும்பி வந்தால் திருமணமாகுமா?
    திருமணம் செய்தபின் அமெரிக்க அழைப்பை ஏற்றுப் பட்டம் பெற்றார்.
  • கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும்பொழுது ஞிடூதtஞிட சரியாக விழுவது பெரும் சாதனை.
  • அகதி முகாமில் வந்தபின் தானிருந்த பெரும் நிலைகள் பயன்படாது. ஒரு நாள் போவதும் சாதனை.
  • தகப்பனாரை இழந்தபின் இளைஞன் உடன் பிறந்தவர் திருமணத்தைச் செய்வது சாதனை.
  • பெரியவர் செய்வதைச் சிறியவர் செய்வது சாதனை.
  • நெடுநாளில் செய்வதைச் சில நாளில் செய்வது சாதனை.
  • சாதனையின் வகை ஆயிரம்,
    பணம் சம்பாதிப்பது சாதனை.
    எலக்க்ஷனில் ஜெயிப்பது சாதனை.
    எலக்க்ஷனில் பணம் கொடுக்காமல் ஜெயிப்பது சாதனை.
    உயர் பதவியிலுள்ள பழைய நண்பன் மாறாமலிருப்பது சாதனை.
    The Life Divine படித்தது புரிவது யோக சாதனை.
    புத்தகம் எழுத்துப் பிழையின்றி அச்சடிப்பது சாதனை.
  • விவரமாகச் சொல்லிச் சாதிக்கலாம். அது சிறிய சாதனை.
  • எதையும் சொல்லாமல் சாதிப்பது பெரிய சாதனை.
  • பொறுப்பற்ற கணவன் வீண் செலவை நிறுத்தி குடும்பத்தைக் காப்பது சாதனை. மனைவி அவனிடம் எதையும் கேட்காமல், வாய் மூடி மௌனியாக இருந்து, பணம் தராதபொழுது கேட்காமல், வீட்டிற்கு வராமலிருப்பதைக் கேட்காமல், வந்தபொழுது கணவனைக் கவனிக்கும் மனைவி அரிது. அவனே மனம் மாறுவது அவளுடைய மௌன சாதனை.
  • விலை மாது வாடிக்கைக்காரரைக் கணவனாக நடத்துவது சாதனை.
  • தமிழ் மீடியம் பிள்ளைகள் இங்கிலீஷ் எழுதுவது சாதனை, பேசுவது பெரும் சாதனை.
  • நம்மூர் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் தானே க்யூவாக மாறுவது சாதனை.
  • அன்பர்கள் சோதனையாக மேற்சொன்ன எதையும் மௌனமாக சமர்ப்பணத்தால் செய்தால் ஒரு முறை ஆச்சரியப்படும்படி நடக்கும். அது யோக சாதனை.
  • சண்டிகேசி மனைவி, சிடுமூஞ்சி எனப் பெயர் வாங்கியவள் கணவன் சமர்ப்பணத்தால் விருந்தாளிகளை உபசரிப்பது யோகத்தைக் கடந்த சாதனை.
  • சுயநலத்தை ரசிப்பவர், பிறரை அவமானப்படுத்திப் பெருமைப்படுபவர், கொடுமைப்படுத்தி இன்பம் துய்ப்பவரை தேவையே இல்லாத காலத்தில்
    விரதமாக ஏற்று மௌனமாகப் பணிந்து
    மனம் கோணாமல் சுயநலமி சந்தோஷப்படும்
    வகையில் நடந்து, சமர்ப்பணத்தால்
    அவர் செயலும் மனமும் மாறுவது, எதிராகத்
    திரும்புவதைக் காண்பது பரிபூரண யோகத்திற்கு
    மட்டும் உரிய வாழ்க்கை சாதனை.
  • மௌனம், சமர்ப்பணம், பணிவு, அகந்தை முனை மழுங்குவது போன்றவை யோகப் பாதையிலும் உயர்ந்த சாதனையைப் பெற்றுத் தரும் கருவிகள்.

********

ஜீவிய மணி
 
அன்னை நம்மை நாடிவரும் தெய்வம். அவர் வழங்குவது அருள். தேடிப்போக வேண்டிய தெய்வம், தேடிவந்து கொடுத்தால் மனிதன் அதன் உயர்வை அறிவதில்லை. அதனை மறுக்கிறான். குறை கூறுகிறான். அன்னையின் அருளைப் பெறுவதிலும் பல நிலைகள் உண்டு. ஒருவன் சுதந்திரமாக அன்னையை நாடினால், ஆன்மாவில் அன்னையை விழைந்தால் அதற்குப் பலன் பெரிது. பிறரைப் பின்பற்றியோ, நூலைப் படித்தோ பிறர் சொல்லைக் கேட்டோ ஒருவன் அன்னையை ஏற்கலாம். அன்னையிடம் பலன் பெறலாம். ஆனால் அதற்கு பயன்கள் சிறியவையே.
 



book | by Dr. Radut