Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

Page 167: All here is dreamed or doubtfully exists

இருப்பதெல்லாம் கனவு, நினைப்பதெல்லாம் ஐயம்

  • கனவு காண்பது யார்? எங்கிருந்து பார்க்கிறாள்?
  • அது தெரியவில்லை, அது தெளிவற்ற யூகம்
  • அல்லது உலகம் உண்மை, நாம் கடுகளவு சிறியவர்
  • மேடையின் பெருமைக்குப் பத்தாது
  • வாழ்வின் சிறு அலை அசுரனின் வேகத்தைக் குறுக்கிடுகிறது
  • ஆத்மாவற்ற பிரபஞ்சம் பவனி வரும் பாதை
  • உருளும் சிறிய உருண்டையின் வயிற்றுள்
  • சிறிய தற்செயலாய் எழுந்த கோளத்துள் மனம் பார்க்கிறது
  • யார் நான், இதெல்லாம் என்ன என வியப்புறுகிறது
  • இருப்பினும் உள்ளுறை அகக்கண் பார்வைக்கு
  • ஜடத்தின் பார்வையற்ற பொருளில் விநோதமாக உருவான
  • சிறு கூர்ந்த சித்திரம் வரையும் முறை
  • காணும் ரூபங்களை உலகின் ஆத்ம விழிப்பான அடிப்படையெனக் கொள்ளும்
  • கீழுள்ள மங்கிய ஒளியில் இதுவே நாம் கண்ட காட்சி இதுவே ஜடம் அனந்தம் என்பதன் அடையாளம்
  • இதுவே கண்ட படத்தின் காணாத நோக்கம்
  • விஞ்ஞான ராட்சசி, அவள் அரங்கம் பெரியது
  • அவள் கூர்ந்த ஆராய்ச்சியின் விஷயத்தை அவள் கொட்டிப் பொழிகிறாள்
  • பிரம்மாண்டமான அவள் புற உலகை கணிதத்தாலறிந்தாள்
  • புலனுணர்வின் வட்டத்துள் தெறிப்பாக செயல்படும் பகுத்தறிவு
  • பரந்த எண்ணம் பிடிபடாத உரையாடல்
  • பிரம்மாண்டமான தெளிவற்ற எண்ணங்களில் விளையாடும் ஆட்டம்
  • சூன்யத்தின் சாரம் அவள் பொற்காசு
  • அதன் அஸ்திவாரத்தின் உயர்ந்த பண்புகளை நாமறியோம்
  • இத்திவால் சூழலில் மதம் மட்டும் நிலைக்கிறது
  • சந்தேகமான செல்வத்தை நம் இதயத்திற்கு அளிக்கிறது
  • ஆதாரமில்லாத செக்கை பிரம்ம பாங்கிற்கு அனுப்புகிறது
  • இகவாழ்வின் ஏழ்மை பரவாழ்வில் பழிவாங்கும்
  • அர்த்தமற்ற வாழ்வை ஆத்மா உதறித் தள்ளும்
  • தெரியாத கறுத்த உலகுக்குள் எடுத்துப் போகிறது
  • மரணமே அமரத்துவத்தின் வாயில்
  • இதுவும் தற்காலிகமான திட்டமே
  • அளவோடுள்ள புலனில் எழுதிய பொய்யான தோற்றம்
  • மனம் அரைகுறையாகத் தன்னைக் கண்டுகொண்டது

*******

ஜீவிய மணி
 
பாகவதர் கிருஷ்ணனுடைய நகைகளை விவரித்ததைக் கேட்ட திருடன் அவனைப் பிருந்தாவனத்தில் தேடிக் கண்டு, அந்நகைகளைப் பெற்றபின், கிருஷ்ணன் ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்றார். ‘தினமும் உன்னைக் காணும் பாக்கியம் வேண்டும்’ என்றான் திருடன்.
 
திருடனுடைய ஆத்மா விழித்தது.
விழித்தபின் தேடுவது ஒன்றே.
 



book | by Dr. Radut