Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 267
Para 10
27. சப்த ஜீவன்
Mind, Life and Matter are the lower trilogy.
மனம், வாழ்வு, ஜடம் என்பவை தாழ் நிலையிலுள்ள முக்கூறுகளாகும்.
They are also indispensable to all cosmic being.
எல்லா பிரபஞ்ச ஜீவனுக்கும் அவை இன்றியமையாதவையும் ஆகும்.
This is not necessarily in conditions we know upon earth.
இது புவியில் நமக்குப் புரியும் அளவில் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை.
But they are indispensable in some kind of action.
ஆனால் அவை ஏதோ ஒருவிதமான செயல்பாட்டிற்கும் இன்றியமையாதவையாகும்.
The action may be luminous or puissant or subtle.
அச்செயல் ஒளி பொருந்திய அல்லது சக்தி வாய்ந்த அல்லது சூட்சுமமானதாக இருக்கலாம்
Mind is that faculty of Supermind which measures and limits.
மனம் அளவிடுவதும், வரையறை செய்வதுமான திறனுடைய சத்திய ஜீவியத்தின் ஒரு கருவியாகும்
It fixes a particular centre and views from that.
அது குறிப்பிட்ட ஒரு மையத்தை ஏற்படுத்தி அதன் வழியாக பார்க்கிறது.
It views the cosmic movement and its interactions.
பிரபஞ்சத்தின் சலனத்தையும், மற்றதுடன் அதன்  செயல்பாட்டையும் பார்வையிடுகிறது.
In a particular world, or plane, mind need not be limited.
ஒரு குறிப்பிட்ட உலகத்தில் அல்லது நிலையில் மன வரையறைக்குட்பட அவசியமில்லை.
Mind is a subordinate faculty.
மனம் ஒரு கீழ்ப்படியும் நிலையிலான திறன்.
But, one who uses it can see things from other standpoints.
ஆனால், அதை உபயோகப்படுத்துபவர் மற்ற காட்சிக் கோணங்களிலிருந்து விஷயங்களைப் பார்க்க முடியும்.
Or he can see things from the real Centre of all.
அல்லது எல்லாவற்றுக்குமான உண்மையான மையத்திலிருந்து அவரால் பார்க்க முடியும்.
He can see in the vastness of a universal self-diffusion.
பரந்த பிரபஞ்சத்தின் சுய வியாபித்த நிலையிலிருந்து பார்க்க முடியும்.
Sti ll he must fi x himself normally in his own fi rm standpoint.
ஆனாலும் அவர் தன்னை தன் சொந்த இயல்பான காட்சி கோணத்தில் நிலைநிறுத்த வேண்டும்
This is for certain purposes of divine activity.
இது தெய்வீக நிலைக்குரிய செயல்பாட்டின் சில குறிக்கோள்களுக்கு அவசியம்
Suppose there was only universal self-diffusion.
ஒருவேளை வரையறையற்று சுயமாக பரவி வியாபித்த நிலையாக இருக்கலாம்.
Or if there were only infinite centres without a limiting action.
அல்லது செயல் வரையறை இல்லாத அனந்தமான மையங்கள் மட்டும் இருக்கலாம்.
Then there would be no cosmos.
அப்போது பிரபஞ்சம் என்ற ஒன்றிருக்காது.
It would be only a Being musing within Himself infinitely.
அது ஜீவன் அனந்த நிலைகளில் தனக்குள்ளே ஆழ்ந்த ஈடுபட்டிருப்பதாகும்.
He would muse as a creator or poet may muse freely.
ஒரு சிருஷ்டிகர்த்தா அல்லது கவிஞர் சுதந்திரமாக தன்
உள்ளார்ந்த சிந்தனையில் ஈடுபடுவதுபோல் அது தன்னுள் ஆழ்ந்திருக்கும்.
He would muse before proceeding to the work of creation.
படைப்பை செயலாக்கும்முன் அது தனக்குள் ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருக்கும்
This state may exist somewhere in infinite existence.
இந்த நிலை அனந்தமான சிருஷ்டியில் எங்காவது இருக்கலாம்.
But it is not what we understand by a cosmos.
ஆனால் பிரபஞ்சம் என்பதாக நாம் அறிந்து கொள்வது அது இல்லை.
It would have a kind of order unfixed and unbinding.
வரையறையற்ற, கட்டுப்படுத்தாத ஒழுங்கு முறை அதற்கு இருக்க வேண்டும்.
Such an order Supermind might evolve.
அந்த ஒழுங்குமுறையைச் சத்திய ஜீவியம் வெளிப்படுத்துவதாக இருக்கலாம்
Before proceeding to its work of fixed development, it might do so.
வரையறைக்குட்பட்ட வளர்ச்சியை செயல்படுத்தும்முன் இதைச் செய்வதாக இருக்கலாம்
It would proceed to measurement and interaction of relations.
அதைத் தொடர்ந்து, அளவீடு செய்வதிலும் மற்றவைகளுடன் தொடர்புக்கான செயலிலும் அது ஈடுபடுகிறது.
For that measurement, Mind is necessary.
அளவிடும் செயலுக்கு மனம் அவசியமாகிறது.
Mind needs to be aware only as a subordinate action of Supermind.
சத்திய ஜீவியத்தின்கீழ் செயலாற்றும் அளவிற்கு மன தன்னையறிந்தால் போதும்.
It need not develop relations on the basis of egoism.
அது அகந்தையின் அடிப்படையில் தொடர்புகளை ஏற்படுத்தும் அவசியமில்லை
This we see active in terrestrial Nature.
Page 268
Para 11
இது புவியுலகத்தின் இயற்கை சக்தியில் அதிகமாக செயல்படுவதைக் காணலாம்
Once Mind exists, Life and Form follow.
மனம் என்று ஒன்று இருந்தால், வாழ்வும் தோற்றமும் அதைத் தொடர்ந்து வரும்.
Life is simply the determinati on of force and action.
It is the determination of relation and interaction of energy.
வேகம் மற்றும் செயலை நிர்ணயம் செய்வது வாழ்வாகும். அது தொடர்புகளை நிர்ணயிப்பதும், சக்திப் பரிமாற்றமும்ஆகும்.
The interaction is from many fixed centres of consciousness.
இப்பரிமாற்றம் ஜீவியத்தின் பல நிலையான மையங்களிலிருந்து எழுகிறது.
They are not fixed in place or time.
அவை காலம் அல்லது இடத்தில் நிலைப்படவில்லை
They are in a persistent coexistence of beings
அவை ஜீவன்களின் உறுதியான உடனிருத்தலாகவும் அல்லது
or soul-forms of the Eternal.
சாசுவதமானதின் ஆத்ம ரூபங்களாகவும் உள்ளன.
They support a cosmic harmony.
அவை பிரபஞ்ச ஒற்றுமைக்கு ஆதரவு தருகின்றன.
That life may be very different from life as we know or conceive.
அவ்வாழ்வு நாமறிந்த வாழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.
Essentially it would be the same principle at work.
அடிப்படையில் அதே தத்துவம் செயல்படுவதாகும்.
That principle we see here figured as vitality.
நாம் இங்கு பார்க்கும் அத்தத்துவம் உயிரின் வீரியமாக கருதப்படுகிறது.
The ancient Indian thinkers called it Vayu or Prana.
பண்டைய இந்தியச் சிந்தனையாளர்கள் அதை வாயு அல்ல பிராணன் என்றழைத்தனர்.
It is the life-stuff , the substanti al will and energy in the cosmos.
அது வாழ்விற்கான மூலப்பொருள், பிரபஞ்சத்தில் உறையும் திடமான உறுதி மற்றும் சக்தி.
It is working out into determined form.
அது நிர்ணயம் செய்யப்பட்ட தோற்றமாக உருவாகிறது.
It is working out into action and conscious dynamis of being.
அது செயலாக மற்றும் ஜீவனின் தன்னையுணர்ந்த உள்ளுறைத் திறனாக உருவாகிறது.
Substance too might be very different from our sense of material body.
அதன் பொருளும் நாம் உணரும் ஜட உடலை விட வேறுபட்டிருக்கலாம்.
It would be much more subtle, much less rigidly binding.
அது மிகவும் நுட்பமானதாகவும், உறுதி மிகவும் குறைந்த பிணைப்பாகவும் இருக்க வேண்டும்
Its law of self-division and resistance would be less binding.
அதன் சுய பிரிவினைக்கான சட்டம் மற்றும் தாங்கும் ஆற்றல் குறைந்த கட்டுப்படுத்துதலை உடையது.
The body or form might be an instrument and not a prison.
உடல் அல்லது உருவம் ஒரு கருவியாக இருக்க வேண்டும்அது ஒரு சிறையல்ல.
Yet some determination and form and substance would be necessary.
இருந்தாலும் சில நிர்ணயம், உருவம் மற்றும் பொருள் அவசியம்.
This would be necessary for the cosmic interaction.
இது பிரபஞ்ச செயல் பரிமாற்றத்திற்கு அவசியம்.
Even if it were only a mental body .
அது மனதிற்கான ஒரு உடலாக இருக்கலாம்.
Or it might be something more luminous and subtle.
அல்லது அதிகமாக ஒளிமயமானதும் சூட்சுமமானதுமாக இருக்கலாம்.
It might be more puissantly and freely responsive than the freest mental body.
அதிக வலிமை பொருந்திய, மனதைவிட சுதந்திரமாக செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும்.



book | by Dr. Radut