Skip to Content

1. பக்தியின் ரூபம்

பக்தியின் ரூபம்

நம் கருத்துகளை எழுதினால் கருத்து வரிவடிவம் பெறுகிறது. மனிதனைச் சிருஷ்டிக்கும்பொழுது இறைவன் அவன் உடலுக்குரிய ரூபத்தைத் தேடிய பொழுது இறைவன் பெற்ற ரூபங்கள் பல. இறைவன் முடிவாகத் தேர்ந்தெடுத்தது இன்று நாம் பெற்றுள்ள ரூபம். நாமம், ரூபம் என்பவை சூட்சும சக்தி வாய்ந்தவை. ஓம் சிருஷ்டியின் ரூபமான வரிவடிவம். சூரியன் ஞானத்தின் ரூபம். சூட்சுமப் பார்வைக்கு ரூபங்களும், அதற்குரிய கருத்துகளும் தெரியும். அரசியின் சிலையைச் செதுக்கிய சிற்பி சிலையின் தொடை வரும்பொழுது ஒரு சில் உடைந்து விழுவதைப் பல முறை கண்டான். சிலைகள் ரூபமானாலும், அரசியின் ஜீவன் சிலைக்குண்டு. கோவில் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்த காலத்தில் உயிருடனிருந்தவை. அவற்றிற்கு மந்திர ஜபம் ஜீவன் அளித்தது. பெண்ணின் உடல் பக்தியின் ரூபம், சிலை வடிவம் என பகவான் கூறியுள்ளார். ஒலி வடிவம், வரி வடிவம், சிலை வடிவம் ஜீவனுள்ளவை. தந்திரயோகத்தில் மந்திரப் பிரயோகமும், யந்திரப் பிரயோகமும் உண்டு. யந்திரம் என்பது யோக சக்தியைத் தாங்கி வரும் வடிவம். தந்திர யோகம் இந்தியர் பயிலும் பெரும் யோகங்களின் சாரம் இணைந்தது என்கிறார் பகவான்.

 



book | by Dr. Radut