Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

65. வேலை தானே தன்னை நடத்திக் கொள்வது.

  • தானே நடப்பது இறைவன் நம் வாழ்வில் செயல்படுவது.
  • இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் என்று பட்டினத்தார் கூறியது இறைவன் கொடுத்தாலன்றி உணவு தேவையில்லை எனக் கூறுகிறது.
  • பக்தி, தவம் ஆகியவற்றிற்குச் சில அடையாளங்கள் உள.
  • உடல் நலம், உள்ளத்தின் நிறைவைக் குறிக்கும்.
  • செய்யும் வேலை கூடி வருவதும் அதைக் குறிக்கும்.
  • தேடிப் போனவர் நாடி வருவதும் ஓர் அறிகுறி.
  • காரிய சித்தி என்பது வழக்கு.
  • உடல் நலம், காரியம் கூடி வருவது, மனிதர் செயல் அவற்றுள் பல கட்டங்கள் உள்ளன.
  • கைரேகை போல் காலிலும் சக்கரங்கள் இருக்கும்.
  • எதிர்கால மடாதிபதிகளுக்கும் அந்தச் சக்கரம் இருக்கும்.
  • சொல் நயம், குறிப்பறிந்து பேசுவது, நடப்பது, முன்யோசனை, சமயோசிதம் இறைவன் நம் வாழ்வில் செயல்படுவதைக் குறிக்கும்.
  • இந்த நயம் சூட்சுமமாக அறிபவர் எழுதப் படிக்கத் தெரியாதவனைப் பட்டம் பெறச் செய்யும்.
  • மடையனுடைய சிறப்பு மற்றவர்களை மடையன் என நினைப்பது.
  • அவனுடன் எவரும் தீவிரமான விஷயங்களைப் பேசமாட்டார்கள்.
  • மடையன் தனக்குத் தெரியாததை அடுத்தவர்க்குத் தெரியாது எனக் கருதி மகிழ்வான்.
  • மடையனின் மனநிலைகளைக் கடந்து வெல்பவன் வாயில் எழுவது இறைவனின் அசரீரி.
  • அவனுக்கு ஒரு விஷயத்தைக் கூறினால் "உன்னால் எனக்கு விளக்க முடியாது'' எனச் சவால் விடுவான்.
  • அவன் சவாலை ஏற்க முடிவற்ற பொறுமை வேண்டும்.
  • மடையனுக்குப் பலமிருந்தால், அவன் மடையன் என்பதாலே ஜெயிக்கும்.
  • அறிவில்லாதவன் மடையன்.
  • சொரணையற்றவனுக்குரிய குறிப்பான சொல்லில்லை.
  • சொரணையற்றவன் தன் மடமையை வெளிப்படுத்தினால் "உன்னை நான் மடக்குவேன், ஜெயிப்பேன், நீ எதைச் செய்தாலும் அடுத்த கட்ட கயமை எனக்குதவும், எந்த நிலையிலும் எனக்குச் சொரணையில்லையே, உனக்குத் தெரியுமா? என்னை உன்னால் வெல்ல முடியாது'' என்பான்.
  • மடையன் "உன்னால் விளக்க முடியாது" என்பான். சொரணையற்றவன் "உன்னால் என்னை ஜெயிக்க முடியாது" என்பான்.
  • உழைப்பால் முன்னேறும் நாடு இந்தக் கட்டங்களை positiveஆக நல்ல முறையில் எதிர்கொண்டு முன்னேறும்.
  • பண்பாலும், பக்குவத்தாலும், ஆன்மாவாலும் உயர்ந்த நாடு சீரழிந்தால், அது மீண்டும் உயரும் பொழுது மடையன், சொரணையற்றவன், கேவலமானவன் ஆகியவர்களைத் negative தவறான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.
  • லஞ்சம் இதில் பணத்தின் பங்கு.
  • துரோகம் விஸ்வாசத்தின் பங்கு.
  • நம் நாட்டில் பிரகிருதி (most opulent rich complexity) பெரிய சிறந்த சிக்கலாகத் தோன்றும். சிறப்பை எழுப்ப முயன்றபொழுது நாடு 560 பிரிவுகளாக இருந்ததால் முடியவில்லை.
  • வெளிநாட்டு ஆக்ரமிப்பால் நாட்டை ஒன்றுபடுத்த பிரகிருதி முயன்றது.
  • அதனால் இக்குறைகளைத் தவறான முறைகளில் சந்திக்கிறது.
  • இம்முறையில் அசத் (Non-Being)தின் அடிமட்டத்திலிருந்து மக்களை உயர்த்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர், கொடுமைக்கு ஆளானவர் இம்முறையில் ஆட்சிக்கு வந்து அவர்களுடைய பண்பின் சிறப்பை நிலைநாட்டுவர்.
  • இது இன்றைய அரசியல் நிலை.
  • மடையனை வெல்வது மனிதனால் முடியாது.
  • அது முடிந்தாலும் சொரணையற்றவனை வெல்ல முடியாது.
  • இதுவரை உலகம் இவற்றை வெல்ல முயலவில்லை.
  • அதற்கடுத்த கட்டம்: சொரணையற்றவன் திராணியற்றவனாகி குதர்க்கமானால் அவனை அவனிஷ்டப்படியும் வெல்ல முடியாது.
  • நாடு ஜகத்குருவாக அதையும் எதிர்பார்க்கிறது.
  • அதையும் சாதிப்பவனுக்கு வேலை தானே தன்னை நடத்திக் கொள்ளும்.

தொடரும்.....

********



book | by Dr. Radut