Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/76) "மனிதன் ஏற்கக்கூடிய பொறுப்பை" நீ மறுக்கும் நேரம் கற்பனைக்கெட்டாத அதிர்ஷ்டத்தை வலிய விலக்குகிறாய் என அறிவதில்லை.

  • கசப்பான கடும்பொறுப்பு கற்பனைக்கெட்டாத அதிர்ஷ்டம்.
  • குழந்தைகள் பள்ளிக்கூடம் போவது அவர்கட்கு சிம்ம சொப்பனம்.
  • அது படும் அவதியைக் கண்டு பள்ளிக்கூடம் அனுப்ப முடியாது என்பதில்லை.
  • ஏதோ ஓர் பெற்றோர் அப்படியும் இருப்பதுண்டு.
  • அக்பர் அது போல் அடம்பிடித்துத் தற்குறியானார்.
  • பிற்காலத்தில் படித்த குழந்தைகள் வேலைக்குப் போகும் பொழுது, படிக்காதவன் மாடு மேய்ப்பான்.
  • பள்ளிக்கூடம் போகும் கசப்பான கடும்பொறுப்பு சர்க்கார் வேலைக்குப் போகும் அதிர்ஷ்டம்.
  • மாமியாரின் கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு இப்படிப்பட்ட எதிர்காலமுண்டு என அவளிடம் முதலிலோ, முடிவிலோ சொல்ல முடியாது.
  • கொடுமையை இரசிக்கும் கொடுமைக்காரனிடம் அகப்பட்டு தாக்குப்பிடிக்காமல் ஓடிப்போனவன் பெரிய பஸ் முதலாளியானான்.
  • ஊரார் செய்த அநீதியை ஆயிரம் காலமாக அனுபவித்தவர் சமூக உச்சிக்கு வருவார் என்று எவரும் அவரிடம் அன்று கூற முடியாது.
  • இன்று ஒபாமா பிரசிடெண்ட் ஆனது நீக்ரோக்கள் அடிமைப்படுத்தப்பட்டதால் என உலகம் அறியுமா எனத் தெரியவில்லை.
  • 1000 ஆண்டு இங்கிலாந்து அடிமையாக இருந்ததினால் 200 ஆண்டு உலகை ஆண்டது.
  • 700 ஆண்டு இந்தியா அடிமையாக இருந்ததால், உலகத்திற்கு குருவாகும் என்று பகவான் கூறுகிறார்.
  • இதன் தத்துவத்தை யோகத்தில் பகவான் முதன்முதலாகக் கூறியுள்ளார்.
  • மனிதன் மனம் உடையவன், மனம் பகுதியானது.
  • மனம் கண்ட பிரம்மம் சச்சிதானந்த பிரம்மம்.
  • சத்திய ஜீவியம் முழுமையானது.
  • சச்சிதானந்தம் என்பது சத்.
  • அசத் அதற்கு எதிரானது.
  • சத்தும் அசத்தும் சேர்ந்த முழுமை பிரம்மம்.
  • உலகில் நல்வாழ்வு வாழ்ந்து மனிதன் சுவர்க்கத்திற்குப் போகிறான்.
  • அவன் தீமையை விலக்கி வாழ்ந்து சுவர்க்கத்தை அடைகிறான்.
  • தீமையும், நன்மையும் சிருஷ்டியின் பகுதிகள்.
  • தீமை நம் உலகில் இருள்; சத்தும் அசத்தும் சேர்ந்த முழு உலகில் நமக்குத் தீமையாகப்படுவது உயர்ந்த நன்மை.
  • நம் உலகில் தீமை எப்பொழுதும் நன்மையுடனிருக்கும், பிரிக்க முடியாது.
  • நன்மையை நாடினால் மனிதனுக்குச் சுவர்க்கம் கிடைக்கும்.
  • யோகி நன்மையுடன் தீமை சேர்ந்து வருவதால் இரண்டையும் விலக்கிப் பற்றற்றிருப்பான்.
  • அவன் பெறுவது ஆத்மாவுக்கு மோட்சம்.
  • தீமையை விலக்காமல் ஏற்பது கடினம், திருவுருமாற்றத்தால் ஏற்கலாம்.
  • அவன் உடல், பொருள், ஆவி, ஆத்மா அனைத்திற்கும் மோட்சம் பெறுகிறான்.
  • யோகிக்குத் திருவுருமாற்றம்.
  • குடும்பஸ்தனுக்குத் தீமை கொடுமை, தரித்திரம், துர்அதிர்ஷ்டம்.
  • அவனிடம் போய் தீமை உனக்குப் பெரும் அதிர்ஷ்டம் பெற்றுத் தரும் எனக் கூற முடியாது.
  • அவனுக்குத் தீமை கடமையாகப் பொறுப்பாக வரும்.
  • கசப்பான கடமையையும் பொறுமையாக ஏற்றுக்கொள் என அன்னை கூறுகிறார்.
  • திருஷ்டியிருந்து கசப்பான கடுமையின் பின் கற்பனைக்கெட்டாத அதிர்ஷ்டம் தெரிந்தால் நாளைக்கு அது வருவதால் இன்று பட முடியாது.
  • விழிப்பானவர் தீமையின் முனையில் உள்ள ஒளியை ஏற்றால் தீமை மனிதனுக்கு அவதி தராமல் பெரும் நன்மையாகத் திருவுருமாறும்.

*****

II/77) தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது சச்சிதானந்தத்திலிருந்து ஜடம் வரை உண்மை. வலிமையுடையவனிடம் நியாயத்தை ஒப்படைப்பது அநாகரிகமான கொடுமை என்பது சரி. ஆனால் நியாயத்திற்கு அநாகரிகமான வலிமை வரும்வரை அது செல்லாது என்பதும் உண்மை. மனம் சச்சிதானந்தத்தைப் போற்றினால் ஜடம் அதற்குட்படுவதில்லை. ஜடம் சச்சிதானந்தமானால் அது நடக்கும்.

  • உண்மை எடுபட கொடுமையின் வலிமை தேவை.
  • பலம், அதிகாரம், பதவி, வலிமை ஆகியவை அன்று முதல் இன்று வரை உலகை ஆள்கின்றன.
  • பலமும், பதவியும் அதிகாரம் தரும். வலிமை கொடுமையாக இயல்பாக மாறும். இவற்றைப் புறக்கணித்தால் தொழில் நடக்காது; குடும்பம் சிதையும்; ஊர் ரகளையாகும்; உலகம் அழியும்.
  • இவை உள்ளவர் நியாயமாக நடக்க வேண்டும்.
  • ஆத்மாவுக்கு நியாயமான பலம் உண்டு.
  • அதைச் செலுத்தாமலே ஆளும்.
  • அது உள்ளதே பலம், வலிமை, அதிகாரம்.
  • பெற்றோர்-பிள்ளைகள், கணவன்-மனைவி, நட்பில் இவை எழுவது பூலோகச் சுவர்க்கம்.
  • மேல் நாட்டிற்கும், இந்தியாவுக்கும் உள்ள வேற்றுமையைப் பகவான் கூறுகிறார்.
  • இங்கு வாழ்வு மையம், வாழ்வே எல்லாம்.
  • அங்கு ஆட்சி செய்வது மனம்.
  • மனத்தைப் பயன்படுத்தி வாழ்வை வளமாக்குவது மேல் நாடுகள்.
  • அவர்கள் பொய் சொல்வதில்லை, கொடுத்த வாக்கை மீறமாட்டார்கள், பிறர் விஷயத்தில் தலையிடமாட்டார்கள். மாதக்கணக்காகக் குளிக்காவிட்டாலும் வீடு, வெளியில் சுத்தம் கண்ணாடி போலிருக்கும். ரயில் 20 வருஷமான பெட்டியானாலும், இன்றே செய்தது போலிருக்கும்.
  • இவ்வளவு உயர்வும் அந்நாட்டை உயர்த்தாது என்கிறார் பகவான்.
  • நம்மவர்கள் காலையில் எழுந்தவுடன் குளிக்கத் தவறுவதில்லை. ஆனால் எங்கும் எச்சில் துப்புவார்கள், வீடு அசுத்தமாக இருக்கும். வீதிகளை மல, ஜலம் கழிக்குமிடமாகப் பயன்படுத்துகிறோம்.
  • நாம் நாடுவது இறைவனை வாழ்வில் வெளிப்படுத்துவது.
  • உலகம் இதுவரை எண்ணாத அக்கருத்தை நாம் 2000 ஆண்டுகட்குமுன் எட்டினோம்.
  • கடந்த சில நூற்றாண்டுகட்கு முன் உலகிலேயே
    • வளம் நிறைந்த நாடாகவும்,
    • அறிவியலில் வெகு முன்னோடியாகவும்,
    • சங்கீதம், சிற்பம், ஓவியம், நாட்டியத்தில் தலைசிறந்தும்,
    • வணிகத்தில் உலகுக்கு வழிகாட்டியாகவும்,
    • குடும்பம், சமூகம், சர்க்கார் நிர்வாகத்தில் அனைவரையும் கடந்தும்
    இந்தியா விளங்கியது என பகவான் கூறுகிறார். நாடு ஒன்றுபடாமல் ஏராளமான பிரிவுகளாக ஆனதால் நாட்டின் ஆத்மா திறனிழந்துவிட்டது. அதனால் வாழ்வின் சிறுமைகளான வறுமை, நம்பிக்கையின்மை, நாணயமின்மை, பகட்டு, ஏமாற்று, இலஞ்சம், ஊழல், அந்நியனைத் துதிக்கும் நோக்கம், ஆதாய மனப்பான்மை வளர்ந்துவிட்டது. என்றாலும் அடிப்படை நிலையாக இருக்கிறது. நாட்டின் செல்வ நிலை உயராமல் அதன் பெருமை வெளிவராது. நமக்கே தெரியாது. அதனால் செல்வம் அபரிமிதமான செல்வம் அத்தியாவசியம்.
  • இன்று தார்மீகத் தலைமை என்று உலகிலிருந்தால், அது இந்தியாவுக்கே.
  • ஆன்மீகத் தலைமையான ஜகத் குரு ஸ்தானம் இந்தியாவுக்குண்டு என்கிறார் பகவான்.
  • மக்கள் பலம், அதிகாரம், வலிமை, பதவி பெறாத வரை அவை எடுபடாது. நமக்கே நம்பிக்கை வாராது.
  • திரண்ட பெரும் செல்வம் அன்பர்க்குண்டு என "அன்பு அமிர்தமாகி ஆனந்தம் அபரிமிதமாகும் அழைப்பு' எழுதினேன். இந்தியன் ஒவ்வொருவருக்கும் அச்செல்வம் உண்டு என இன்று - புது வருஷம் 2011 - நான் நம்புகிறேன்.
  • இறைவனை உலக வாழ்வில் வெளிப்படுத்தும் பூலோக சுவர்க்கத்தின் வாழ்வு மையம் இந்தியா.

தொடரும்....

*******

ஜீவிய மணி
 
அன்னை என்ன செய்வார்களோ,
அதையே நான் செய்ய முனைவது அகந்தை.
அன்னையே அனைத்தும் செய்ய விழைவது சரணாகதி.
வாழ்க்கை கொடுத்ததை அடுத்தவர் கொடுத்ததாகவும் அறிவதுண்டு.
 

******



book | by Dr. Radut