Skip to Content

11. அஜெண்டா

அஜெண்டா

Volume VIII, 1967, Page 134

நரகத்தைக் கண்டுபிடித்தது சாத்தான்.

கார்டினல்கட்கு அது உண்மையல்ல எனத் தெரியும்.

  • தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என்பது உண்மை.
    அது ஆண்டவன் கொடுக்கும் தண்டனையாகாது.
  • சாப்பிடாவிட்டால் உடல் கெட்டுவிடும் என்பதை, டாக்டர் தண்டிப்பார் என்பது சரியாகாது.
  • படிக்காவிட்டால் பெயிலாகும் என்பதை ஆசிரியர் பெயிலாக்குவார் என்பதும் உண்மையாகாது.
  • உம்மாச்சி கண்ணைக் குத்திவிடும் என்பது குழந்தைகளைப் பெரியோர் மிரட்டும் வகை, உண்மையல்ல.
  • நேரத்தில் வரவில்லையெனில் ரயில் போய்விடும் என்பதை ரயில் தண்டிக்கிறது எனக் கூறலாமா?
  • சிவன், விஷ்ணு போன்றது கடவுள்கள். காட்டேரி, ஐயனார் என்பவை சிறு தெய்வங்கள்.
  • தண்டிப்பது சிறு தெய்வங்கள், இறைவனில்லை, கடவுள்களில்லை.
  • பிரபலமான இடங்களில் முதல் பிரார்த்தனை பலிக்கும். அதன்பின் பிரார்த்தனை பலிக்காது. அத்தெய்வத்தை விட்டு அகன்றால் தண்டனை கிடைக்கும். அவை சிறு தெய்வங்கள்.
  • கடமைகளைச் செய்ய பெற்றோர், குருக்கள், மதகுரு போன்றவர் பயன்படுத்திய உபாயங்களிவை.
  • நெடுநாள் பழக்கத்தைக் கைவிடும்பொழுதும் மனம் உறுத்துவதாலும் ஏற்படும் தவறு தண்டனையாகாது.
  • வீட்டுப்பாடம் எழுதாவிட்டால் சாப்பாடு போடமாட்டேன் என்று எல்லா வீட்டிலும் கூறமாட்டார்கள். அது மட்டமான வீடு, தண்டிப்பது பாடமில்லை, அன்பில்லாத பெற்றோர்.
  • அறுவடை சமயத்தில் பெய்த மழை மகசூலை நாசமாக்கியதை தண்டனை எனக் கூற முடியாது.
  • அக்கறையாகப் பயிரிட்டவருக்கு அது போன்ற நஷ்டம் ஏற்படுவதில்லை.
  • அக்கறை பாதுகாக்கிறது என்பது உண்மை.
  • அக்கறையில்லாவிட்டால் பாதுகாப்பிருக்காது என்பது தண்டனை கிடைக்கும் என மாற்றி மனம் புரிந்து கொள்கிறது.
  • சிறிதளவு உண்மை மூடநம்பிக்கையாகப் படிக்காத மக்களிடையே பரவுவது சகஜம்.
  • எண்ணெய் தேய்த்துக் கொள்ளாவிடில் உடல் கெட்டுப்போகும் என்பதை உடல் தண்டிக்கும் என்றோ, வாணியன் தண்டனை தருவான் என்றோ புரிந்து கொள்வது உண்மையாகாது.
  • பெரும்பாலும் ஜாதகத்தை நம்புகிறவர்கள் அரைகுறை செய்தியை நம்புகிறவர்கள்.
  • ஜாதகம் நம்பினால் உண்மை. ஜோஸ்யன் மறைப்பான். ஜாதகம் நேரம் சரியாகக் குறிக்காவிடில் சரியான ஜாதகமாகாது.
  • பொதுவான உண்மையைக் குறிப்பான உண்மையாகக் கொள்வது மூடநம்பிக்கை.
  • ஜாதகத்தை நம்பாமல் அன்னையை நம்பினால் ஜாதகத்திலுள்ள தவறு நடக்காது.
    ஜாதகத்திலில்லாத நல்லது நடக்கும் என்ற உண்மை அன்பர் அனுபவம்.
  • ஜாதகம் நேரப்படி கணிப்பதில்லை. அதுவே சரியான ஜாதகமாகாது.
  • தெய்வ பக்தியுள்ளவர்க்கு ஜாதகம் மெய்யல்ல.

*******



book | by Dr. Radut