Skip to Content

07. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 • எது உண்டு
  • வெளிநாட்டாருக்கு விசா வேண்டும்.
   நம் நாட்டாருக்கு அது தேவையில்லை.
   "உனக்கு இல்லாதது இல்லை. நீ எடுத்துக்கொள்ளாதது உண்டு''.
   அதுவே அன்னையிடம் அனைவருக்கும் உண்டு.
   தகுதி தம் மனத்தைப் பொருத்தது.

   உன் உரிமையை அன்பாக, அழகாக, உயர்வாக, பெருந்தன்மையின் சிகரமாக உணர்ந்து எடுத்துக் கொண்டால் அது உன் உறவுக்குரிய யோக சித்தி.
   உரிமையை எடுத்துக் கொள்ள எல்லா உரிமையையும் விட்டவரால்தான் முடியும்.
   உரிமையை விடும் உள்ளம் உலகத்தினளவுக்குப் பரந்து விரியும்.
   உரிமை புனிதம்.
   அதை விடுவது ஆத்மானுபவம்.
   உரிமையை எடுத்துக் கொள்வது பிறருக்கு உயர்ந்த உரிமையைக் கொடுப்பது.
   தவறான உரிமையை தயக்கமில்லாமல் எடுத்துக் கொள்ள பெருமைப்பட உலகுக்கு இதுவரை இல்லாத உரிமையைத் தருபவரால்தான் முடியும்.
     மனைவியைவிட மகிமை பொருந்திய நிலை கணவனுக்கில்லை.
   மனைவியை அன்பால் வழிபடுவது இறைவனுக்குப் பக்தியைச் சமர்ப்பணம் செய்வது.
   உறவு என்பது பிள்ளைகளிடம் பாசமாகவும் (physical), நண்பர்களிடம் நட்பாகவும் (vital), உலகத்துடன் (mental), மனத்தாலும், அறிவாலும் கொள்வது அறிவு.
   ஆன்மீக உறவு உண்மையானது. அது மனத்தில் ஆரம்பித்து உணர்வால் கனிந்து, உடலில் சமர்ப்பணத்தால் பூர்த்தியாகும். அந்நிலையில் நினைவு தொடுவது போலிருக்கும்.
 • குறை கூறுவது, ஆதரவு தருவது
  • கோள் சொல்லும் பழக்கம் உள்ளவரிடம் நாம் அடுத்தவர் சொல்லிய கோளைப் பற்றிப் பேசுதல் அர்த்தமுள்ளதாகாது.
  • அவரிடம் இல்லாத குறையை அவரிடம் சொல்லிக் கொள்வது அர்த்தப்படும்.
  • உள்ள குறையை விட்டுவிட்டால் (e.g.பொறாமை, சின்ன புத்தி) அடுத்தவருடைய பொறாமையைப் பற்றி நாம் அவரிடம் கூறுவது உலகில் பொறாமை அழிய உதவும்.

   உடன் வேலை செய்தவர் என் மீது பொறாமைப்படுகிறார் என அவரைப் போன்றவரிடம் சொல்வது உலகில் பொறாமை வளர உதவும்.

   கேட்பவர் பொறாமையில்லாதவரானாலும், இருந்த பொறாமையை விட்டுவிட்டவரானாலும், அவரிடம் உடன் வேலை செய்தவர் பொறாமையைச் சொன்னால், உலகில் பொறாமை ஓரிழை குறையும்.

   நம்மிடம் உள்ள குறைகளை நாம் அழித்தால், நம்மிடம் வரும் குறைகள் உலகில் குறையும்.

  • இது குழந்தை வளர்க்கும் தகுதியைத் தரும்.

   ஒரு குழந்தை தன் குறைகளைத் தாயாரிடம் கூறினால் அக்குறை அக்குழந்தையை விட்டுப்போவது அவளைத் தாயார் ஸ்தானத்திற்குத் தகுதியுள்ளவராக்கும்.

  • மனிதத் தன்மை அவசியம். அது வாராமல் நாகரீகம், நல்ல குணம் வாராது. அது இல்லாதவனை விலங்காகக் கருதுவது பயன் தரும்.
  • குறை கூறுவதற்கும் இடம் சரியாக இருந்தால் நல்ல பலன் உண்டு.
  • எதை எவரிடம் சொல்வது எனில், எதையும் எவரிடமும் சொல்ல முடியாது எனப் பதில் வரும்.
 • நிலையான ஆனந்தம்
  • Objectless ananda in the objects.

   பார்வை கண்ணுக்கு மட்டும் உரியது.

   உடலில் எல்லா பகுதிகட்கும் பார்வையுண்டா?

   எண்ண - counting - மனம் அறியும். கை எண்ணுமா?

   54 பேப்பர் வேண்டுமானால் எடுத்தால் 54 பேப்பர் வந்தால் விரலே எண்ணிற்று என ஆகும்.

   ஆனந்தம் மின்னல் போல் எழும். நிலையாக வானில் மின்னல் நிற்காது.

   ஆனந்தம் ஜடத்துள் எழுந்தால் மின்னல் நிலையானது போலாகும்.

   எல்லா புடவைகளும் பட்டுப்புடவையானது போலாகும்.

   தவம், யோகம் என்பது ஆனந்தத்தை எட்டித் தொடும், நிஷ்டையில் பெறுவது ஆனந்தம்.

   ஸ்ரீஅரவிந்தம் ஆனந்தம் நம்மை நாடி வந்து உடலில் புகுந்து நிலைப்பது.

   ஒன்று நாம் பிரதமரைப் போய்ப் பார்ப்பது.

   அடுத்தது பிரதமர் நம் வீட்டில் தங்கி நாட்டை ஆள்வது.

   அதுவே பூரண யோகம்.

   மற்ற யோகத்தில் மனிதன் இறைவனையடைகிறான்.

   இந்த யோகத்தில் மனிதன் இறைவனாகிறான்.

   வாழ்வில் மனிதன் வெற்றியை நாடுகிறான். இங்கு அதிர்ஷ்டம் அன்றாட வெற்றியாக மனிதனை நாடுகிறது.

 • வீடு சிறியது, கடுகு
  வீடு கோயில் - எல்லாம் நாம் முடிவு செய்வது
  வீடே (Mother’s Ashram) அன்னை ஆசிரமம்

  முதல் தலைமுறை பாடுபட்டு உழைக்கும், பொறுப்பானது.
  இரண்டாம் தலைமுறை பொறுப்பற்றது, சோம்பேறி, இஷ்டப்படி நடக்கும்.

  குடும்பங்கள் உயர்வது முதல் தலைமுறையின் உழைப்பாலோ,

  இரண்டாம் தலைமுறையின் போக்காலோ, மூன்றாம் தலைமுறை உணர்வதாலோ அல்ல.

  குடும்பம் உயர்வது பண்பால்.

  வேலை என்பது உடல் ஏற்கும் பண்பு.

  இனிய பழக்கம் உயிரின் பண்பு.

  வேலையை அறிவுடன் செய்வது மனம் போற்றும் பண்பு.

  உடலின் பண்பும், உயிரின் பண்பும், அறிவின் பண்பும் பண்பாவதற்கு அடிப்படையான காரணம். இதர பண்புகளான நேர்மை, விஸ்வாசம், நாணயம், பகுத்தறிவு, நிதானம், அடக்கம். பண்புகள் குடும்பப் பரம்பரையினின்று எழுகின்றன.

  குடும்பம் பண்புடையதாக இல்லாவிட்டால், அன்னை எந்தப் பண்பையும் தருவார்.

  பெற்றோர் அன்னையைப் பிள்ளைகட்குத் தர, பெற்றோருக்கு அன்னை வாழ்வில் நிதர்சனமாக இருக்க வேண்டும். அதற்குப் பணமோ, அந்தஸ்தோ, பண்போ இணையாகாது.

  • எதுவும் அழியும்.
  • அன்னை அழியாமல் நிலையாக இருப்பார்.
  • எதையும் அழிய அன்னை அனுமதிக்கமாட்டார்.

  பில்கேட்ஸ் $ 64 பில்லியன் சம்பாதித்து பிள்ளைகட்கு $ 300 மில்லியன் மட்டுமே கொடுத்தார். (தள். 256,000 கோடியில் தள். 1200 கோடி). மீதியைத் தானம் செய்துவிட்டார். அன்னை தைரியலக்ஷ்மி. அன்னையிருந்தால் அனைத்தும் வரும். மற்றது இருந்தால் நாமே முனைந்து காப்பாற்ற வேண்டும்.

  அன்னை மட்டுமே சொத்து.
  பிள்ளைகட்கு நாம் தரும் பெரிய சொத்து
  அன்னை மீதுள்ள நம்பிக்கை.

 • யார் எக்காரணத்தை முன்னிட்டுக் கோபமாக இருந்தாலும் நாம் சரியில்லை எனப் பொருள்

  நாம் என்பது "நான்'' என்ற ஒருவரை நாம் கருதுகிறோம்.
  நாம் என்பது மனிதன், மனித குலம். அதன் பிரதிநிதியான "நான்'' என்பவர், குளத்தில் நாம் ஒரு இடத்தில் குளித்தால் நம் உடலின் வியாதி எல்லாத் தண்ணீரையும் பாதிக்கும்.

  • ஒரு மனிதன் அனைவரையும் உட்கொண்ட மனிதன்.
   இதைப் புறக்கணித்து நான் கோபப்படுகிறேன் என்கிறோம்.
   இதற்குப் பதிலாக, கோபத்தை மனித குலத்துள் நான் அனுமதிக்கிறேன் என அறிய வேண்டும்.
   ஒரு தொட்டியில் ஒரு துவாரம், தண்ணீர் காலியாக உதவும்.
   ஆனால் எல்லா துவாரமும் அடைபட்டால்தான் தண்ணீரைப் பாதுகாக்கலாம்.
   மனித குலத்துள் ஒருவர் ஒரு உணர்ச்சியை அனுமதிக்கலாம். ஒருவரே ஒரு உணர்ச்சியை அழிக்கலாம் என்பது சத்தியஜீவிய அமைப்பு. அது உலகிலில்லை. அதனால் உதாரணம் கொடுக்க இயலாது. அனைவரும் ஒருவருள், ஒருவர் அனைவருள்ளும் (All is in each, each is in all) என்பதால் இந்நிலை ஏற்படுகிறது. 1943இல் சிப்பாய்கள் சென்னை வந்தனர். சொறி, சிரங்கு தமிழ்நாடு முழுவதும் அவர்கள் மூலம் பரவியது. 1914இல் ஜப்பானில் விஷ ஜுரம் வந்து அன்னைக்கு வந்தது. அன்னை உடலை அது தொட்டவுடன் ஜப்பானை விட்டே அந்த ஜுரம் நிரந்தரமாகப் போய்விட்டது.

தொடரும்....

******

 
அறிவில்லை என அறிவது ஞானம்.
 

******book | by Dr. Radut