Skip to Content

06. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. உழுகிற நாளில் ஊருக்குப் போய், அறுக்கிற நாளில் அரிவாள் கொண்டு வந்தது போல.

    உழுகிற நாளில் உள்ளே போய் அறுக்கிற நாளில் வெளியே வந்தால் அதிர்ஷ்டம் உள்ளும் புறமும் நிறையும்.

  2. கஞ்சி கண்ட இடம் கைலாசம். சோறு கண்ட இடம் சொர்க்கம்.

    நினைவிருந்தால் நிதர்சனம்.
    அழைப்பிருந்தால் அருள்மயமான அதிர்ஷ்டம்.

  3. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது.

    சூடு கண்ட பூனை அடுப்பங்கரை சூட்டை அழிக்கும்.

  4. குறையச் சொல்லி நிறைய அள.

    குறையச் சொல்வதும் நிறைவு.
    நிறையச் சொன்னாலும் பெரு நிறைவு.

  5. அரைக்காசை ஆயிரம் பொன்னாக்குகிறவளும் பெண்சாதி. ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குகிறவளும் பெண்சாதி.

    பெண்சாதியைப் பெண் தெய்வமாக அறிந்தால், அரைக் காசெல்லாம் ஆயிரம் பொன்னாகும்.

தொடரும்....

******



book | by Dr. Radut