Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

53. எது நடக்கலாம் என்பதை அறிவதுடன், எது நடக்கும் என அறியும் திறமை.

  • என்ன நடக்கலாம் எனப் பலரும் கூற முடியும்.
  • என்ன நடக்கும் என்பதை அறுதியிட்டுத் திட்டவட்டமாக எவராலும் கூற முடியாது.
  • அதற்கு முதற் காரணம், நாம் கூறுவதால் அது மாறக் கூடியது.
  • வீட்டிலிருந்து புறப்பட்டவர் வருகிறேன் எனப் போனில் சொன்னால் அவரை எதிர்பார்க்கலாம்.
  • 99 பங்கு அவர் சொன்னபடி வருவார்.
  • 1 பங்கு ஏதோ காரணத்தால் வீட்டிலிருந்து புறப்பட்டபின் மனம் மாறி வராமலிருக்கலாம்.
  • அன்பர் மாடியில் நின்று கொண்டிருந்தார்.
  • மைத்துனிக்குப் பார்த்த வரன் வாரம் ஒரு முறை அவரை வந்து சந்திப்பது வழக்கம்.
  • அவர் கீழே படியேறுவதை அன்பர் கண்டார்.
  • மனைவியை டிபன் செய்யச் சொல்லிக் கொண்டேயிறங்கி வந்தார்.
  • வந்தவர் இளைஞரை எதிர்பார்த்து ஏமாந்தார்.
  • தெருவில் வந்து பார்த்தார் காணவில்லை.
  • எதிர்பார்த்தால் எதிர்பார்ப்பது நிகழ்ச்சி நடப்பதைத் தடுக்கும்.
  • நடக்கக்கூடியதை மனம் கூறும்.
  • தடையில்லாமல், தவிர்க்க முடியாதபடி நடக்கக் கூடியதைக் கூறுவது சத்தியஜீவியம்.
  • காரியங்கள் நடைபெறுமுன் சூட்சும உலகில் உருவாகின்றன.
  • சத்தியஜீவியம் அதைக் காண்கிறது. அதனால் அதைத் திட்டவட்டமாகக் கூற முடிகிறது.
  • சில சமயம் என்ன நடக்கும் எனத் தெரிந்து, சொல்லாமலிருந்தால், நடக்கும்.
  • வெளிநாட்டு அன்பர் அடுத்த 5 நிமிஷத்தில் போனில் கூப்பிடுவார் எனக் கூறியது அப்படி ஒரு முறை நடந்தது.
  • எந்த அன்பருக்கு இதுபோல் எதிர்காலம் தெரிகிறதோ, அவருக்கு யோகம் பலிக்கும்.
  • ஒவ்வொரு முறையும் பலிக்க வேண்டுவதில்லை. ஒரு சில சமயம் பலித்தாலும் நடக்கும்.
  • அன்பர் புதுவை வரும் வழியில் நின்று கொண்டிருந்த நண்பரைக் கண்டு நின்றார்.
  • அவருடன் நண்பர் ஒருவரிருந்தார்.
  • பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலிருப்பதால் எங்கு போகிறீர்கள் என விசாரித்தார்.
  • ஆசிரமம் போவதாகக் கூறினார்கள். நண்பருக்கு அதுவே முதல் முறை.
  • "இந்த நாளைக் குறித்து வைத்து அடுத்த ஆண்டு நினைவுபடுத்தினால் உங்கள் நிலை இரு மடங்காகியிருக்கும்'' என்று அன்பர் கூறினார்.
  • அடுத்த ஆண்டு இருவரும் அதே தினம் அன்பரைப் பார்க்க வந்தனர்.
  • இம்முறை புதியதாக வந்த நண்பர் பேசினார்.

    "எனக்கு ஷாப், லுங்கி வியாபாரம், நிலம், சாயக்கிடங்கு, வட்டிக்கடையென 9 ஸ்தாபனங்கள் உள்ளன. அவை 9உம் சென்ற ஆண்டைவிட இரு மடங்காகின. அவை தவிர 1 ஏக்கர் தென்னந்தோப்புண்டு. அது மட்டும் மாறவில்லை, காய் திருட்டுப்போகிறது'' என்றார்.

  • அன்பர் திருட்டை நிறுத்த வழி கூறினார்.
  • எதிர்காலம் அனுபவமுள்ளவர்க்குப் பொதுவாகத் தெரியும்.
  • அது பெரும்பாலும் நடக்கும்.
  • யோகம் ஒருவருக்குப் பலிக்கும் நேரம் வந்துவிட்டால் அவருக்குத் தெரியும் எதிர்காலம் தவறாமல் பலிக்கும்.

    அப்படிப்பட்டவர் வாயால் கூறியதாலேயே அது தவறாமல் நடக்கும்.

தொடரும்.....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கருத்தைக் கடந்தது காவியம்.
சாவித்திரி ஆன்மாவின் காவியம்.
காலத்தைக் கடந்த கருத்தை காவியம் என்கிறோம்.
 

*******



book | by Dr. Radut