Skip to Content

05.சாவித்ரி

"சாவித்ரி"

P.37, God found in Nature, Nature fulfilled in God.

      இயற்கையில் காணும் இறைவன், இறைவனைப் பூர்த்தி செய்யும் இயற்கை

. சாதனையின் சக்தி அவனிடம் தெரிகிறது.

. ஜீவனின் உச்சியில் குடியுள்ள வாழ்வு.

. அவன் மனமும், ஆன்மாவும், இதயமும் ஒரே சூரியனானார்கள்.

. வாழ்வின் அடிமட்டம் மங்கலாயிருந்தது.

. நிலையற்ற வாழ்வின் நிழலும் தீக்கனல் ஆர்வமாக எழுந்தது.

. இறைவனின் வலிமை இருளில் செயல்பட்டது.

. அசைவற்ற அமைதியின் சாட்சியான பார்வை.

. போராடும் இயற்கையும் ஒளியில் புகடம் தேடிற்று.

. அற்புதத்தின் மின்னல் அடுக்கடுக்காகத் தெறித்தது.

. தழலும், கனலும் அனுபவத்தின் அத்தியாயங்கள்.

. கப்பலெனும் கடவுளை, காற்று எனும் ஆடை சூழ்ந்தது.

. ஜடத்தின் அசலனம் ஞானத்துடன் உரையாடிற்று.

. புதுயுகத்தின் புதுமைகள் காணாத காத தூரத்தினின்று வந்தன.

. எண்ணமற்ற சூன்யத்தில் அறிவின் அற்புதம் உதித்தது.

. ஒளிமயமான சக்தி, ஆனந்தம் வெள்ளமாகப் பொழிந்தன.

. புதிரின் புதருக்குள் புது மழை புகுந்தது.

அமைதியான ஆத்மா அசைவற்று உறங்குவதாகும். அது பெறும் அசைவு பரிணாமம். அசைவு பரிணாமத்தால் சக்தியாகி மிளிர்கிறது. மனமும், ஆன்மாவும், இதயமும் ஒரே சூரியனில் ஒன்றாகின்றன. மனமும், இதயமும் பிரிந்து நிற்பது இரண்டாம் அறியாமை. அதைக் கடந்த நிலையில் ஆத்மா விழித்தெழுந்து அவற்றுள் கரைந்து ஜோதியாகி, சூரியனாகின்றன. மனத்தின் அடியிலுள்ள ஜோதியும், இதயத்தின் அஸ்திவாரத்தின் ஒளியும் ஆத்மாவின் காயத்திரியே ஆகும். அவை எழுந்து கலந்த சூழல் பரிணாமத்திற்குரிய சூழல். அறிவு பிறர் கோணத்தில் காணும்பொழுது, இதயம் பரநலத்தைப் பாராட்டும்பொழுது, அவற்றுள் உள்ள ஆன்மா அசைகின்றன. அசைவு ஜோதி, பரிணாம ஜோதி. பரிணாமம் பல கரணங்கட்கும் உள்ளது என்பதால், அவை கலந்து எழுந்து ஜோதி சூரியனாகிறது.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடலிலும், உணர்விலும் நிறைந்து செறிந்த வலிமையே பாதுகாப்பு.

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதிர்காலத்தில் நடக்கக்கூடியவற்றை அறிவது கற்பனை. நடக்கக்கூடாதவற்றை எண்ணித் திருப்திப்படுவது கற்பனைக் கோட்டை.

கற்பனைக் கோட்டை கற்பனையில்லை.


 


 



book | by Dr. Radut