Skip to Content

10.லைப் டிவைன் - கருத்து

The Life Divine-கருத்து

உடலின் இருளைத் திருவுருமாற்ற மனித யத்தனம் போதாது, பரமாத்மாவின் ஒளி கீழே வரவேண்டும்

கோபக்காரன், ஆசைப்பிடித்தவன், அநியாயக்காரன் ஆகியவரை எளிதில் மாற்ற முடியாது. ஆனால் மாற்றும் சக்தி உலகில் உண்டு. அது அறிவு. அதுவும் அவனுடைய சொந்த அறிவானால் நிச்சயமாக அவை அடங்கும், மாறும், திருவுருமாறவும் முடியும்.

இந்து முஸ்லீம் கலவரம் ஆரம்பித்தபொழுது போலீஸ் கலவரத்தை அடக்கியது. கலவரம் களேபரமானபொழுது ரிஸர்வ் போலீஸ் வந்து சமாளித்தது. அதுவும் முடியாதபொழுது ஸ்பெஷல் ரிசர்வ் போலீஸ் வரும். கலவரம், களேபரமாகி, மனிதன் நிலையிழந்து செயல்படும் நேரங்களில் போலீஸ், ரிசர்வ் போலீஸ் பயன்படா, இராணுவம் வரும். வடநாட்டில் நிலைமை அதையும் கடந்தது. இராணுவம் வந்தால் இந்து சிப்பாய்கள் முஸ்லீம்களைச் சுடுகிறார்கள், முஸ்லீம் சிப்பாய்கள் இந்து மக்களைச் சுடுகின்றனர். இராணுவம் கலவரத்தை அடக்குவதற்கு பதிலாக கலவரத்தில் பங்குகொள்கிறது. இனி ஆயுதம் பயன்படாது என்பது நிலை. அந்த நேரம் காந்திஜீ வந்தார். உண்ணாவிரதமிருந்தார். மக்களை ஆத்ம சுத்தியை நாடச்சொன்னார். நாட்கள் பல கடந்தன. குண்டர்கள் அடங்கினர், கலவரம் அடங்கியது. நாட்டு வரலாற்றில் இது ஒரு பெரிய திருப்பம். பொதுவாக இது நம் அனுபவம். பிரச்சினை வலுக்கும்பொழுது அடுத்த பெரிய சக்தி தேவை. அவையெல்லாம் தவறும் நிலையில் முடிவான சக்தியே செயல்படும்.

சிறப்பாக மனப்பாடம் செய்பவன் முதல் மார்க் வாங்குகிறான். ஜில்லாவில் முதல் மார்க் வாங்க மனப்பாடம் மட்டும் போதாது. பாடம் புரிந்து மனப்பாடம் செய்பவன் தேவை. மாநிலத்தில் முதல்வனாக வர மனப்பாடம் உதவாது. சொந்த அறிவு தேவை. அகில இந்தியாவில் முதல்வனாக நிற்க சொந்த புத்திசாலித்தனமும், பரம்பரையாக வந்ததாக இருக்கவேண்டும். இவையெல்லாம் ஒருவன் மேதையாக மலரப் பயன்படாது. அதற்கு புத்தி போதாது. ஆத்ம ஞானம் வேண்டும்.

. The Life Divineஇல் கடைசி அத்தியாயம் Divine Life தெய்வீக வாழ்வு. அதில்,

. தெய்வீக வாழ்வு பெற நாம் சத்தியஜீவியம் என்றறிந்து உள்ளே சென்று, முழுமை பெற்று, பிரபஞ்சம் முழுவதும் பரவி, ஜடத்தை ஆன்மா ஆட்சி செய்ய வேண்டும்.

. அதைச் செய்வது திருவுருமாற்றம்.

. திருவுருமாற்றத்தைச் சாதிப்பது சரணாகதி. என்று எழுதுகிறார்.

. மேற்சொன்னது 28ஆம் அத்தியாயம்.

 அதற்கு முந்தைய அத்தியாயம் No.27 சத்தியஜீவன்.

. No.25ஆம் அத்தியாயம் திருவுருமாற்றம்.

இங்கு 3 திருவுருமாற்றங்களைக் கூறுகிறார்.

. No.26ஆம் அத்தியாயம் சத்தியாரோகணம்.

மூன்று திருவுருமாற்றம் பெற்றபின் சத்திய ஜீவன் பிறக்க நம் உலகினின்று சத்தியஜீவியம் செல்வது சத்தியாரோகணம். இவ்வத்தியாயத்தின் இரு முக்கியக் கருத்துகளில் மேற்சொல்லப்பட்டது ஒன்று. அடுத்தது,

. புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும். மேற்சொல்லியதை

. பாதாளத்தின் இருளை பரமாத்மாவின் ஒளியே திருவுருமாற்ற வல்லது

என்று கூறுகிறார்.

****


 



book | by Dr. Radut