Skip to Content

லைப் டிவைன்- கருத்து

P. 50 All totality is a reversion to harmony and a reconciliation of the opposites

 

முழுமை சுமுகத்திற்குரியது. எதிரான வாதத்தின்  நியாயத்தை அறிவதாகும்.

குடும்பத்தில் அவரவர் தம்தம் ஆதாயத்தைக் கருதுவது சுயநலம். அதுபோன்ற குடும்பங்கள் நாளடைவில் உடைந்து பிரியும். வசதி குறையும். விவசாயக் குடும்பமானால் நிலம் சிறுசிறு துண்டுகளாகும். அடுத்த தலைமுறையில் சிறு விவசாயி, விவசாயக் கூலியாவான். வியாபாரம் செய்யும் குடும்பம் குடும்பத்தைப் பாராட்டினால் வியாபாரம் பெருகும். சிறு தொழில் பெரியதாகும். குடும்பத்தில் சுமுகம் வளரும். எதிரியின் நியாயத்தை ஏற்கும் மனம் பண்புள்ளதாகும், சுயநலம் வளராது.

ஸ்தாபனத்தில் தம் சௌகரியத்தைக் கருதுபவர் மட்டுமிருந்தால் ஸ்தாபனம் வளராது. பிணக்கு வளரும்.

முழுமையான இறைவன் பகுதிகளிலான உலகைச் சிருஷ்டித்தான். பகுதி தன்னை வலியுறுத்தினால் மீண்டும் முழுமையை அடையமுடியாது. சுமுகமும், முழுமையும் மீண்டும் இறைவனையடைய உதவும் என்பது Life Divine இல் முக்கிய கருத்து.

1947இல் காங்கிரஸ், முஸ்லீம் லீக் சுமுகத்தை நாடாததால் நாடு இரண்டாயிற்று. பின்னர் இரண்டு மூன்றாயிற்று. பிணக்கு வளர்ந்தால் ஆங்கிலேயரும், முஸ்லீம்களும் வருமுன் இருந்த நிலையான 56 தேசமாக மாறும்.

உலகம் globalisation ஒன்றாக முனையும் நேரம், நாடும், ஸ்தாபனமும், வீடும் முழுமையை நாடுவது நல்லது. அது நடைபெற மனிதன் தன்னை ஆராய வேண்டும். தன் ஜீவனின் 4 பகுதிகளில் ஒன்றான ஆன்மாவை மற்றதினின்று பிரித்து ஆன்மாவுக்கு மோட்சம் தேடும் பாதை நாட்டுக்கோ, தனிமனிதனுக்கோ இறைவன் வகுத்த பாதையில்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

உடல், உணர்வு, மனம், ஆன்மா நான்கும் இணைவதே பூரண யோகம். அவை எந்த மனிதனில் ஒன்று சேருகிறதோ அவனே நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவான். அவனே global citizen உலகத்திற்குரிய குடிமகனாவான்.

வறுமையிலுள்ள குடும்பம் பிணக்கை விலக்கி, முழுமையை நாடினால், குடும்ப நலனை நாடினால் வறுமையிலிருந்து விடுபடும் என்பது இதன் மூலம் நாமறிவதாகும்.

நஷ்டமாகும் கம்பனி இலாபம் பெற ஒவ்வொரு பகுதியும் அடுத்த பகுதியுடன் இணைந்து செயல்படுவது முறையாகும்.

  • முழுமையை நாடினால் சுமுகமும்,
  • சுமுகத்தைத் தேடினால் வளமும்,
  • வளம் பெற்றால் தெளிவும்,
  • தெளிவு பெறுவதால் ஆன்மவிளக்கமும்,
  • ஆன்ம விளக்கம் ஏற்படுவதால் ஜீவன் பூரணம் பெறுவதும்,
  • பூரணயோகப் பாதைகளாகவும், இலட்சியங்களாகவுமிருப்பதை பகவான் ஸ்ரீ அரவிந்தர் அடிப்படையாக்கி, நிர்வாணம், துறவறம், மாயை என்ற கருத்துகளை, பூரணம், முழுமை, சத்தியம் என மாற்றி அமைக்கிறார்.



book | by Dr. Radut