Skip to Content

அஜெண்டா

Vol III P. 92. Sri Aurobindo & The Mother did things that were considered dangerous but they were not dangerous to them

ஆபத்து என்பதை அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் செய்தனர். அவர்கட்கு அது ஆபத்தாக இல்லை.

ஒரு குருவினுடைய நேர் பார்வையில்லாமல் செய்யும் யோகம் ஆபத்து. புதிய யோகத்தைக் கண்டுபிடிப்பவருக்கு குரு இல்லை என்பதால் அந்த ஆபத்து தவிர்க்க முடியாதது. ஸ்ரீ அரவிந்தர் அந்த ஆபத்தை அனுபவித்தார், அன்னை அவரைப் பின்பற்றினார்.

  • மனித வாழ்வில் அடிக்கடி ஆபத்து வரும். 
  • வசதியும், செல்வாக்கும், அதிர்ஷ்டமுமிருந்தால் ஆபத்து வாராது. வந்தால் விலகும். 
  • எந்த ஆபத்தும் வாராத வாழ்வை மனிதன் "நிம்மதியான'' வாழ்வு என விரும்புகிறான். 
  • வாழ்விலும் முன்னேறுபவன் வாழ்வில் ஆபத்து ஏராளமாக வருவது உண்மை. *
  • ஆபத்தைச் சமாளிக்க முடியாவிட்டால் மனிதன் அழிவது நிச்சயம். 
  • ஆபத்தை சமாளித்தால் விலகும். 
  • அதிர்ஷ்டமிருந்தால் ஆபத்து வாய்ப்பாகிறது
  • யோகம் என்பது ஆபத்தை அதிர்ஷ்டமாகக் கருதி வரவேற்பதாகும்.
  • ஸ்ரீ அரவிந்தம் புது யோகமானதால் இவர் ஆபத்தை நாடிப் போக வேண்டியிருந்தது.
  • எல்லா யோக ஆபத்தையும் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் அனுபவித்தனர்.
  • எல்லா ஆபத்துகளும், அவர்கட்கு வாய்ப்பாக மாறின.
  • அவர்கள் பெற்ற வாய்ப்புகள் மனிதகுலத்துக்கு மட்டுமல்ல புவிக்கேயுரிய வாய்ப்பாக மாறின.
  • ஆபத்தைக் கடந்து, அதை வாய்ப்பாக அவர்கள் மாற்றியதன் யோகப் பலனை நமக்கு அன்னை அருளாகக் கொடுக்கின்றார். 
  • வாழ்வில் ஆபத்தை வாய்ப்பாக மாற்றும் மனப்பான்மையும், தைரியமும் உள்ளவர்க்கு அவ்வருள் உண்டு.
  • அந்த அருள் மனிதனுக்கு அதிர்ஷ்டமாகவும், பக்தனுக்கு அன்னை அதிர்ஷ்டமாகவும் மாறுகிறது.
  • குந்தளினி எழுந்தால் யோகி மோட்சமடைவார். அதன்பின் அதிகநாள் உயிருடனிருக்க மாட்டார்கள். அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் குந்தளினியை எழுப்பினர். அதன்பின் நெடுநாள் வாழ்ந்தனர்.
  • இருவரும் தலை உச்சி மூலம் மூச்சு விட்டனர்! அதுவே அவர்களின் பிராணாயாமம்.
  • வாழ்வுக்குரிய ஆபத்தும் அவர்கட்கு நிகழ்ந்தது. 5 முறை ஸ்ரீ அரவிந்தரைத் தூக்கிச் செல்ல முயன்றனர். அன்னை கழுத்தை அவர் கணவர் நெறித்தார்.
  • இறைவன் பாம்பின் விஷப்பற்களை அன்னை முன் கொண்டு வந்தார். அன்னை உடல் நடுங்கியது. கேலி என்றார் இறைவன்.
  • தியான் என்ற குரு அன்னை உயிரை சூட்சுமத்தில் துண்டித்தார். தானே மனம் மாறி மீண்டும் கொடுத்தார்.
  • சாதகர்கள் இஷ்டப்படி தங்கள் வாழ்வை மாற்றியதால் இருவரும் சாதகர்களுடைய தான்தோன்றித்தனமான போக்கால், சொல்லொணாத் தொந்தரவுகளையும், ஆபத்துகளையும் அனுபவித்தனர்.
  • தங்களை நாடி வந்தவர்கள், ஏற்றவர்கள், சிஷ்யர்களுடைய துரோகத்தால் ஸ்ரீ அரவிந்தர் உலகைவிட்டுப் போனதாக அன்னை எழுதியுள்ளார்.



book | by Dr. Radut