Skip to Content

சிறு குறிப்புகள்

Encyclopaedia Britannica

கலைக்களஞ்சியம்

சுமார் 30 வால்யூம்களில் 40,000 பக்கமுள்ள நூல். இதன் விலை சுமார் 30,000ரூபாய். நம் நாட்டில் இது அதிகமாக விற்பனையாவதில்லை. வருஷத்தில் சென்னை ஆபீஸ் 150 செட் விற்கிறது. மேல் நாடுகளில் இந்த செட் இல்லாத வீடிருக்காது, பள்ளி மாணவர்கள் என்ஸைக்குளோபீடியா இல்லாமல் வீட்டுப் பாடம் எழுதமுடியாது. சிறுவர்கட்கு என எளிமையான மொழியில் தனிப் பிரசுரம் உண்டு. குழந்தைகட்கானதும் உண்டு.

நம் நாட்டில் இந்த செட் லைப்ரரிகளில் தானிருக்கும். எடுத்துப் பார்ப்பவர்கள் குறைவு. வீடுகளில் இருக்காது. இருந்தால் பயன்படுத்துவது குறைவு, இல்லை எனலாம். கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் வந்தபிறகு ரயிலால் பிரயாணம் மாறியது போன்ற நிலை. ரயில் வருமுன் நடந்து போகலாம் அல்லது வண்டியில் போகலாம், ரயில் வந்தபிறகு பிரயாணம் வெகுவாக மாறியது. பஸ்ஸும், விமானமும், கப்பலும் மேலும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.

தள். 30,000க்கு விற்ற என்ஸைக்குளோபீடியா கம்ப்யூட்டர் வந்தபின் ரூ6000/-க்கு டிஸ்க்கில் வெளிவந்தது. பின் விலை தொடர்ந்து குறைந்தது. ரூ. 2000/-ம் ஆயிற்று. இன்டர்நெட் வந்தபின் என்ஸைக்குளோபீடியா புத்தகமாக வெளிவருவதை நிறுத்தியது. அடுத்தாற் போல் டிஸ்க்காக விற்பதையும் நிறுத்திவிட்டு இன்டர்நெட்டில் இலவசமாக எவரும் பெறலாம் என்று அறிவித்தது.

அடுத்த நாள் 1 கோடியே 20 லட்சம் பேர் இன்டர்நெட்டில் என்ஸைக்குளோபீடியாவைத் தேடி வந்து படித்தனர். 

பகவான் ஸ்ரீ அரவிந்தரை அன்னை சூட்சும உலகில் சந்தித்த பொழுது 1967 முதல் உலக அரசுகள் சத்தியஜீவியத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறினார். எதிர்காலம் எப்படியிருக்கும்? 1 கோடிக்கு மேற்பட்டவர் 1 நாளில் கலைக் களஞ்சியத்தை நாடிவந்தனர் என்றால் அறிவுத் தாகத்தின் அளவு தெரிகிறது. சத்தியஜீவிய சக்தி வெளிப்படுவதாக நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

  • பட்டங்கள் எடுக்க, பட்டப்படிப்பை மேற்கொள்ள இன்டர்நெட் பயன்படுகிறது.
  • முதல்வகுப்பு முதல் B.A., M.A., Ph.d. வரை இன்டர்நெட்டில் படித்து பட்டம் பெற முடியும் என்ற நிலை இன்றுண்டு.
  • அமெரிக்கப் பல்கலைக்கழக வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பது போல் படிக்கும் வசதியும் உண்டு.
  • உலகப் பெரு நூலகங்களில் உள்ள நூல்களை இன்டர்நெட்டில் எடுத்துப் படிக்கமுடியும்.
  • எதிர்காலத்தில் பல்கலைக்கழங்கள் செய்யும் வேலையை இன்டர்நெட் செய்யும்.

படிப்பைப் பொறுத்தவரை finite சிறியது என்ற நிலை மாறி பெரியது infinite என்பது வந்துவிட்டது, This is practical concept of infinity in education.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருள், உன்னை வலிய திருவுருமாற்ற முயன்றால், திரும்பத்திரும்ப கசப்பானவற்றின் மூலமே உன்னை நாடும்.



book | by Dr. Radut