Skip to Content

அன்பர் கடிதம்

அன்புள்ள அன்னை அவர்களுக்கு பாதம் தொட்டு வணங்கிக் கொண்டு தாழ்மையாயும் பணிவன்போடு கூடி எழுதிக் கொள்கிறேன்.

என் கடைசி மகள் பத்மாவுடைய கணவர் குடும்பத்தில் கணவரோடு சேர்த்து 3 ஆண் சகோதரர்கள், 2 சகோதரிகள். இவர்களுக்கெல்லாம் பெண் குழந்தையே இல்லை. என் மகளுக்கும் முதல் பிள்ளை ஆண். இரண்டாவது உண்டாயிருந்தாள். அப்போது பெண் குழந்தையாகக் கிடைக்கவேண்டும் என்று எங்களுக்கும் அவள் கணவர் குடும்பத்தில் எல்லோருக்கும் ஆசை.

என் மகளிடம் அன்னையை நினைத்துக் கொள். அன்னையை வணங்கி வேண்டினால் பெண் குழந்தையே தருவார் என்று சொல்லிஅன்னையின் பிரசாதத்தையும் ஸ்ரீ அரவிந்தர் அன்னை படத்தையும் என் மகளிடம் கொடுத்து எப்போதும் இந்தப் பிரசாதத்தையும் படத்தையும் வைத்து மனதில் நினைத்துக் கொள் என்றேன், அவளும் அப்படியே செய்தாள்.

நாகர்கோவில் அன்னை ஸ்ரீ அரவிந்தர் தியான மையத்திற்குப் போயும், வீட்டில் படம் வைத்தும் அன்னைக்கும் ஸ்ரீ அரவிந்தருக்கும் புஷ்பம் வைத்து வணங்கியும் பெண் குழந்தை என் மகளுக்குக் கொடுங்கள் என்று அன்னையிடம் வணங்கிக் கேட்டுக்கொண்டேன். என் பிரார்த்தனையை அன்னை ஏற்றுகொண்டு அன்னையின் அருளால் 06.10.98 செவ்வாய்க்கிழமை இரவு 10.04க்கு என் மகளுக்கு எங்கள் எல்லோருடைய விருப்பப்படி பெண்குழந்தை பிறந்தது.

எல்லோருக்கும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. எங்கள் பிரார்த்தனைப்படி அன்னை தந்தார். அன்னைக்கு எங்களுடைய நன்றியை வணக்கத்துடனும் தாழ்மையுடனும் பாதாரவிந்தம் வணங்கி இந்த கடிதத்தை எழுதிக்கொள்கிறேன். அன்னையின் அருள் பிரசாதத்தை அனுப்பும்படி, பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். பிள்ளையை மீரா என்று அழைக்கிறேன்.

********



book | by Dr. Radut