Skip to Content

ஸ்ரீ அரவிந்தம் லைப் டிவைன்

கர்மயோகி

VIII. The Methods of Vedantic Knowledge

Page No: 65

Para No: 9

Man has unenlightened parts.

Those are less articulate parts.

He is behind a veil.

His waking conscience is a narrow light.

His instruments are feeble.

They cannot assimilate the inner messages.

This is the nature of man.

Intuition has to act in these conditions.

Man's nature demands truth.

But it demands it in an ordered form.

The truth, for man, needs to be articulated.

Intuition is incapable of this.

Intuition is now not on the surface.

Nor is it organised there.

Neither does it possess the surface being.

It does not play a leading part on the surface.

Direct knowledge needs this completeness.

Given these, Intuition can deliver its message.

Intuition is not on the surface

8. வேதாந்த ஞானம்

இருளான பகுதி மனிதனுக்குண்டு.

விவரமற்ற பகுதிகள் அவை.

மனிதனுக்கு முன் திரையுண்டு.

விழிப்பு, சிறிய ஒளி.

நம் கருவிகள் பலஹீனமானவை.

உள்ளிருந்து எழும் குரலை ஏற்கும் திறனற்றவை.

இதுவே மனித சுபாவம்.

இச்சூழ்நிலையில் நேரடி ஞானம் செயல்பட வேண்டும்.

மனிதனுக்குச் சத்தியம் தேவை.

விவரமான விளக்கமான மனிதன் அதை எதிர்பார்க்கின்றான்.

சொல்லின் விளக்கம் மனிதன் தேடுவது.

நேரடி ஞானம் இவற்றையறியாது.

மனித மேல் மனத்தில் நேரடி ஞானமில்லை.

அங்கு, தெளிவாகச் செயல்படும் நிலையிலுமில்லை.

மேல்மனம் அதன் ஆட்சியிலுமில்லை.

நேரடி ஞானம் மேல் மனத்தில் முக்கிய பங்கு வகிக்கவில்லை.

மனிதன் கடவுளை நேரடியாக அறிய மேல் மனம் இத்தகுதிகளைப் பெற வேண்டும்.

இவையிருந்தால் நேரடி ஞானம் நமக்கு கடவுளை உணர்த்தும்.

நேரடி ஞானம் மேல் மனத்திலில்லை.

It is reason that rules there.

Reason is organised here.

It helps us.

Our perceptions are on the surface.

Thoughts are born there.

Actions originate here.

It is reason that orders all these.

Vedanta belongs to the intuitive age.

It was governed by the Upanishads.

Reason was born later.

It took over the next age.

Vedanta was inspired scripture.

Reason gave birth to metaphysics.

Metaphysics won the day.

Later came experimental Science.

Metaphysics lost its field to science.

Intuition is born in the superconscient.

It is a messenger from there.

Superconscient is our highest faculty.

Pure reason is a deputy of the superconscient.

It belongs to the middle heights of our being.

Reason supplanted Intuition.

Physical mind belongs to the lower elevations.

Senses go with it.

Together they belong to the plains.

They are confined to their experience.

பகுத்தறிவு அங்கு ஆட்சி செய்கிறது.

பகுத்தறிவு இங்கு தெளிவு பெற்றுள்ளது.

இது பேருதவி.

நம் அறிவதனைத்தும் மேல் மனத்தில்.

எண்ணங்கள் எழுவது அங்குதான்.

செயல்களுக்கும் அதுவே உற்பத்தி ஸ்தானம்.

இவற்றை எல்லாம் மேற்பார்வையிடுவது பகுத்தறிவு.

வேதாந்தம் ஞானம் பிறந்த காலத்திற்குரியது.

வேதாந்தம் என்பது உபநிஷதம்.

பகுத்தறிவு பிறகு பிறந்தது.

அடுத்த காலத்தை அறிவு ஆட்சி செய்தது.

வேதாந்தம் ஞானோதயத்தில் பிறந்தது.

அறிவு வந்து தத்துவத்தைக் கொண்டு வந்தது.

தத்துவம் வென்றது.

அடுத்தாற்போல் விஞ்ஞானம் வந்தது.

விஞ்ஞானம் தத்துவத்தை வென்றது.

நேரடி ஞானம் பரம்பொருளில் எழுகிறது.

பரம்பொருளின் தூதுவனாக வருகிறது அது.

பரம்பொருளே நமக்கு உச்சகட்டம்.

பகுத்தறிவு பரம்பொருளுக்குப் பிரதிநிதி போன்றது.

நம் ஜீவனின் மையத்திலுள்ளது பகுத்தறிவு.

அறிவு ஞானத்தை விரட்டியது.

ஜட மனம் தாழ்ந்த பகுதிக்குரியது.

அது புலனுக்குரியது.

இரண்டும் சம வெளியான தாழ்நிலத்திற்குரியவை.

இவை அனுபவத்தை ஏற்கின்றன.

They are bound by the aids we have invented.

Here reason has a mixed action.

In time, reason lost to science.

This process is a descent.

It is really a circle of progress.

The lower is compelled by the higher.

It has to assimilate the higher knowledge.

The lower has to re-establish the higher.

It has to do it in its own way.

The lower enlarges by this exercise.

It becomes supple.

It offers more ample self-accommodation.

Thus the higher enters the lower:

This is an attempt at separate assimilation.

These attempts are in succession.

This alternation is essential.

Without this, we would remain under exclusive domination.

A part of our nature would so dominate.

The rest would remain depressed

They would be unduly subjected.

The depressed part would remain separate in its field.

Thus, it would be poorly developed.

Page No : 68

Para No : 14

We see this in the Upanishads.

This succession is seen there.

It is there even after that.

இவை கண்டுபிடித்த கருவிகளை நம்பி வாழும் பழக்கமுடையவை.

பகுத்தறிவு இங்கு தூய்மையாகச் செயல்பட முடியாது.

காலப்போக்கில் விஞ்ஞானம் அறிவை வென்றது.

இது கீழ் நிலை.

ஆனால் இதிலும் ஏற்றமுண்டு.

தாழ்நிலை மேல் நிலைக்குட்பட்டது.

மேல்நிலை ஞானத்திலிருந்து கீழ்நிலை பெற வேண்டும்.

தாழ்நிலை உயர்ந்து ஞானத்தை ஏற்க வேண்டும்.

தனக்குரிய முறையில் அதைச் செய்ய வேண்டும்.

இதன் மூலம் சிறியது பெரியதாகிறது.

கடினமான சிறியது நெகிழ்ந்து உயர்கிறது.

தான் மலர ஆரம்பிக்கிறது.

உயர்ந்தது தாழ்ந்ததை ஆட்கொள்கிறது.

ஒவ்வோர் பகுதியும் முன்னேறும் முறை இது.

இவை ஒன்றன்பின் ஒன்றாய் வருகின்றன.

மாறிமாறி வருவது அவசியம்.

இல்லையெனில், நாம் ஓர் பகுதிக்கேயுட்பட்டிருப்போம்.

ஒரு பகுதியே ஆட்சி செய்யும்.

மற்றவை சுருங்கி அவதிப்படும்.

அவசியமில்லாமல் அவை சிரமப்படும்.

ஒடுக்கப்பட்டவை தம் நிலையில் ஒதுங்கியிருக்கும்.

அதனால், அவை வளரும் சந்தர்ப்பம் எழாது.

 

 

இந்நிலையை நாம் உபநிஷத்தில் காண்கிறோம்.

ஒன்றன் பின் ஒன்றாக வரும் நிலை அங்குள்ளது.

உபநிஷத காலம் கடந்தும் இந்நிலையைக் காண முடியும்.

 

Intuition ruled the Vedas and Vedanta.

They relied on spiritual experience.

Scholars speak of great debates.

It is an error.

They go by the name of discussion.

They are really not discussions.

Controversies rise by dialectics.

Logical reasoning raise them too.

They are not governed by logic.

What governs is intuition.

They finally compare experiences.

Here greater light prevails.

The narrower one is let down.

The faulty ones are side-stepped.

Comprehensiveness is accepted.

Perfection is appreciated.

The more essential is readily accepted.

One asks the other what he knew.

He does not ask what he thinks.

No one asks what his conclusions are.

Logical reasoning is absent in Vedanta.

Vedantic truths are not logically established.

Intuitions have been accepted by the sages.

Greater intuition prevailed over lesser ones.

No one resorted to logical reasoning.

Cond..

வேதமும் வேதாந்தமும் ஞானத்தைப் பெற்றவை.

ஆத்மானுபவத்தை அவர் ஏற்றனர்.

விவாதங்களைப் பண்டிதர் குறிக்கின்றனர்.

இது தவறு.

வாதம் என்ற சொல்லைக் கூறுகின்றனர்.

உண்மையில் அவை வாதங்களில்லை.

தர்க்கம் வாதமாகிறது.

பகுத்தறிவு, தர்க்கம் ஆகியவை அவற்றை எழுப்புகின்றன.

வேதாந்தம் தர்க்கத்திற்குட்பட்டதில்லை.

அது ஞானத்திற்குரியது.

முடிவாக ஆத்மானுபவம் பேசப்படுகிறது.

பெரிய அனுபவத்தை ஏற்கின்றனர்.

சிறியது புறக்கணிக்கப்படுகிறது.

தவறானவை ஒதுக்கப்படுகின்றன

விசாலமான அனுபவம் ஏற்கப்படுகிறது.

சிறப்பைப் பாராட்டுகின்றனர்.

முக்கியமானதை உடனே ஒத்துக் கொள்கின்றனர்.

ரிஷி அடுத்தவரை உங்களுக்கென்ன தெரியும் என்று கேட்கிறார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்பதில்லை.

உங்கள் முடிவு என்ன என்று எவரும் சொல்வதில்லை.

வேதாந்தத்தில் தர்க்கம் காணப்படவில்லை.

தர்க்கரீதியாக வேதாந்தக் கருத்துகள் ஏற்படவில்லை.

ஞானம் ரிஷிகளால் ஏற்கப்படுகிறது.

பெரிய ஞானம் சிறிய ஞானத்தை வென்றது.

தர்க்கவாதம் அக்காலத்திலில்லை.

தொடரும்...



book | by Dr. Radut