Skip to Content

பகவானுடைய இதரநூல்கள்

From Essays on the Gita

கீதைப் பேருரைகளிலிருந்து எடுத்தவை

  1. பிரம்மத்தை மனித மனம் இதுவரை அறிந்ததில்லை.
  2. சாப்பிடும்பொழுது நாம் பொருள்களின் ருசியை அறிகிறோம். மாம்பழம் இனிப்பாக இருக்கிறது. பாகற்காய் கசக்கிறது என நாம் ருசியை உணர்கிறோம். ஆன்மவிழிப்பேற்றபின் இனிப்பு, கசப்பு என்ற ருசிகளுக்குப்பின் ("ரசா'') ஓர் உயர்ந்த ரசனையுள்ளது எனக் காணலாம். உப்பில்லாத சாப்பாட்டை அதுபோல் சாப்பிட்டால் "ரசா'' தெரியும் என்பதால், உப்பில்லை என்பது தெரியாது. பரம்பொருளைக் கண்டபின் "ரசா'' என்பதும் மறைந்துவிடும்.
  3. யோகம் - தர்க்கம், நியாயம், யோகம், பூர்வ மீமாம்சம்....என தத்துவத்தின் 6 பகுதிகளில் ஒன்றான "யோகம்'' - என்பதை நாடுபவர் வேதம், உபநிஷதங்களைக் கடந்து செல்கிறார்.
  4. வழிபடுபவரின் வகைகள்: சிறு தெய்வங்களை வழிபடுபவர்கள் - காட்டேரி, அம்மன், கிராமதெய்வம், குலதெய்வம் - முடிவாக சிறு தெய்வங்களையடைகிறார்கள்.
  5. பிரகலாதன் அசுரன்.
  6. கடவுள்களுக்கு குணம் உண்டு. அவர்கள் குணத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
  7. சரணாகதி என்றால் ஜீவன் புருஷோத்தமனுக்குச் சரண் அடைவதாகும். 
  8. எல்லா ஜீவன்களும் அழியாத அமரத்வமுள்ளவர், உடல் மட்டுமே அழியும்.
  9. ஈஸ்வரன் "பிரம்மம்'' என நாம் அறிவதைக் கடந்தது.
  10. அகந்தை அழிவது பிரம்ம நிர்வாணமெனப்படும்.
  11. ஆன்மா காலத்தினுள் நகரும் கதியே இயற்கை எனும் பிரகிருதி.
  12. "சர்வதர்மான் பரித்தஜ்ஜ'' தீமையிலிருந்தும், பாவங்களினின்றும் விடுதலை தரும். திருவுருமாற்றம் கிடைக்காது.
  13. பக்குவமான மனிதனை மோட்சத்திற்கு, கீதை அழைக்கிறது. இக்காலத்து மனிதன் தனக்கு மட்டும் முடிவு தேடவில்லை. உலகத்திற்கு முடிவு தேடுகிறான். அவனுக்குச் சொல்ல கீதையில் எதுவுமில்லை.
  14. பரமாத்மா, ஜீவாத்மா, பிரபஞ்சத்தின் ஆத்மா என இறைவனை மூன்றாகப் பிரித்து முதலில் சொல்லியது கீதை.
  15. ஓம் என்பது பிரம்மத்தின் மூன்று நிலைகளைக் குறிக்கும். உலகை நாடுவதும், உள்ளுறையும் சூட்சுமமும், ஈஸ்வரனும் சந்திப்பது ஓம்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

முரண்பாட்டை உடன்பாடாகக் கண்டால் அதுவே ஆரம்பம். இது சிந்தனையை ஸ்தம்பிக்கச் செய்யும்.



book | by Dr. Radut