Skip to Content

07. வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்குக் கொண்டு வரும் இரகசியங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

9. நம்முடைய தனித்தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்முடைய முடிவுகளில் உண்மையிருப்பதாகத் தெரிந்தால், நாம் போகிற பாதை சரியெனத் தெரிந்தால், நம் முடிவில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். சமூகம் நம் முடிவை ஆதரிக்கவில்லை என்பதால் சமூகத்துடன் ஒத்துப் போவது நல்லது என்று நாம் பின்வாங்கக் கூடாது. சமூகத்திற்கு அடிபணியும் அளவிற்கு வாழ்க்கை நம்மைக் கட்டுப்படுத்தும். நாம் தனித்தன்மையைக் கருதும் அளவிற்கு வாழ்க்கை நமக்குக் கட்டுப்படும்.

தனித்தன்மையுடையவன் மனிதன். பயம் என்றுள்ளவரை ஒருவன் தன்னை மனிதனாகக் கருத முடியாது என அன்னை கூறுகிறார். தான் சம்பாதித்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் வாழத் தகுதியற்றவன். நமக்கு வேண்டியவர் யார் என நிர்ணயிக்க முடியாத மனிதன் நட்புக்கு இலாயக்கில்லாதவன். நாட்டில் ஒரு புது விஷயம் நடந்தவுடன் அதைப்பற்றி சொந்தமாக அபிப்பிராயம் கொள்ள முடியாதவன் சிந்தனையில்லாதவன். எளியனைக் கொடுமை செய்வதைக் கண்டு சும்மாயிருப்பவன் மனித ஜென்மமில்லை. நன்றியுணர்வில்லாதவன் நல்ல மனிதனில்லை.

அப்படியானால் ஊரில் மனிதர்களேயில்லையா? தனித்தன்மை என்றால் என்ன?

இன்றைய சமூகம் 200 ஆண்டுகட்கு முன்பிருந்ததைவிட நாகரிகமான சமூகம். அந்த நாகரிகம் பெறாதவன் இந்தச் சமூகத்தைச் சேராதவன். படிக்காதவன், சாப்பாட்டிற்கில்லாதவன், ஓட்டுரிமை பெறாதவன் சமூகத்தைச் சாராத மனிதன்.

Mr. பென்னட் லிடியாவுக்கான செலவைத் திருப்பித்தர முடிவு செய்தவர். அது பெரிய பண்பு, honour. எளிதில் காண முடியாதது. நாம் நம் காரியம் ஆக சிபாரிசு தேடுகிறோம், இலஞ்சம் தருகிறோம். அதாவது உலகம் ஏற்ற இக்குணங்களை நாமும் ஏற்றால் நாம் உலகத்தின் தாழ்ந்த பகுதிக்குரியவராவோம்.

எல்லோரைப் போலவும் உள்ளவன் எந்த உயர்ந்த காரியத்தையும் உலகுக்கோ தனக்கோ சாதிக்க மாட்டான். தமிழன் என ஓர் இனமுண்டு, தனியே அவனுக்கொரு குணமுண்டு. அது தனித்தன்மை Individuality. உலகம் இதுவரை முன்னேறியது - pioneers, leaders, revolutionaries, thinkers, rebels - முன்னோடிகள், தலைவர்கள், புரட்சிக்காரர்கள், சிந்தனையாளர்கள், எதிர்ப்பவர்களால். இவரனைவரும் individuality-யின் ஓர் அம்சம் பெற்றவர்கள். சங்கீதம் பயிலுபவன் குரு சொல்லிக் கொடுத்ததைப் பாடுகிறான். அவனுக்கே சங்கீத ஞானம் வளர்ந்தவுடன் தானே தனக்குரிய பாணியில் இராகத்தை ஆலாபனை செய்வது individuality. Individuality இல்லாத இடமில்லை. வெளிப்படையாகத் தெரிவது குறைவு.

அமெரிக்கா பணக்கார நாடு. ராணுவ பலம் மிகுந்தது. அரசியல் தலைமையுடையது. அதனால் உலகம் முழுவதும் அமெரிக்காவின் பாணியைப் பின்பற்றுகின்றது என நாம் நினைப்பது உண்மை. அது சிறிய உண்மை. அதற்குரிய பெரிய உண்மையொன்றுண்டு. அங்கு எந்தச் சட்டத்தையும் ஆர்டராக மாற்றி ஊழியரை அமுல்படுத்தச் சொல்ல முடியாது. ஊழியர், சொல்லியதைச் செய்வதற்காக இருப்பவர் எனினும் அவர்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளும் அளவில் ஆர்டரில்லாவிட்டால் அந்த ஆர்டர் அவனுக்கு வாராது. சிறு குழந்தைகளும் 5 வயதில் நீல சட்டையைப் போட்டுக் கொள் எனில் ‘எனக்குச் சொல்லாதீர்கள். எது போட்டுக் கொள்ள வேண்டும் என எனக்குத் தெரியும்’ என்று பதில் வரும். கணவன், மனைவி வெளியில் போகப் புறப்பட்டால் ‘எங்கு போகிறாய்’ எனக் கேட்க முடியாது. அவளாகச் சொன்னால் உண்டு. சொல்லாவிட்டால் எப்படிக் கேட்கலாம் எனக் கோபம் வரும்.

  • மனிதனை மனிதனாக சொந்த அறிவுள்ள மனிதனாக நடத்தும் நாடு அது.
  • மனிதனுக்கு individuality தனித்தன்மையுள்ள தேசம் அது.
  • அத்தனித்தன்மை அமெரிக்காவுக்கு உலகத் தலைமையைப் பெற்றுத் தந்தது.

(தொடரும்)

**********



book | by Dr. Radut