Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/22. தெளிவற்ற குணம் சுய உணர்வால் கோபமாகிறது

  • எளிய மனிதன் கருதாத விஷயங்களில் தெளிவு, சுய உணர்வு ஆகியவை உண்டு.
  • தன் இயலாமையை உணர்ந்தவன் பிறர் மீது கோபப்படுவான்.
  • தெளிவு என்பது சிறந்த தமிழ்ச் சொல்.
  • நிதானம் செயலில் தெளிவாகும், அறிவு விளக்கம் பெறுவது தெளிவு.
  • தெளிவானவர் சொல் இரத்தினச் சுருக்கமாகும்.
  • குணம் என்பது வழக்கிற்குரிய எளிய சொல். தத்துவத்தில் குணம் விசேஷமானது.
  • சத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம், சகுணம், நிர்க்குணம் என்பவை தத்துவமான சொற்கள்.
  • மனம் உடையவன் மனிதன். மனம் பெற்ற திறமையை புத்தி என்கிறோம்.
  • மனம் என்ற சொல் நெஞ்சைக் குறிக்கும், அதனால் மனச்சாட்சி வருகிறது.
  • எப்படி மனம் வந்து இப்படி நடப்பது என்பர்.
  • உடலுக்குரியது செயல், மனத்திற்குரியது அறிவு, உணர்ச்சிக்குரியது குணம்.
  • சிந்தனை, திறன் பெற்ற உருவம் அறிவு.
  • கையால் செய்யும் காரியம் கூடி வருவது, தவறாமல் கூடி வருவது திறமை.
  • உணர்ச்சி, திறம் பெற்று உருவமடைவதைக் குணம் என்போம்.
  • சுபாவம் பெரும்பாலும் குண விசேஷம்.
  • மனிதன் அனைவரையும் அறிவான், தன்னையறிய விரும்ப மாட்டான்.
  • திறமை அதிகப்பட்டால் தன்னை அறிய முயன்று பெருமைப்படுவான்.
  • திறமை இல்லாத விஷயம் வெளி வருமானால், அதைத் தொட மாட்டான்.
  • தன் இயலாமையை அறியும் நேரம் கோபம் எழும்.
  • வேகமான உணர்ச்சி கோபம்.
  • ஆன்மிகத்திற்கு ஒத்துவராதவை காமம், குரோதம், லோபம், மோகம்.
  • கோபம் எழுந்து உருவான நிலை கோபத்தால் பலன் பெற முயல்வது குரோதம்.
  • முனிவர்கள் கோபப்பட்டால் சபிப்பார்கள் என்று உலகம் அறியும்.
  • யோகி, தபஸ்வி, சாது, முனிவரில் அதிகமாகக் கோபத்திற்குரியவர் முனிவர்.
  • சாது சாதுவானவர். அவருக்கும் கோபம் வரும்.
    அவருக்குக் கோபம் எழுந்தால் அது பெரியதாக இருக்கும் என்பதைச் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ குறிக்கும்.
  • விஸ்வாமித்ர காயத்ரி சூரியனை வணங்கும் மந்திரம்.
  • ஆயுட்கால தபோ வலிமை மந்திரமாகும்.
  • காயத்ரியை மனம் ஏற்றால் நெஞ்சில் சூரியன் உதயமாகும்.
  • மந்திரத்தை உச்சரிக்கும்பொழுது சூரியன் எழும்.
  • மந்திரம் தொடரும் வரை சூரிய தரிசனம் உண்டு.
  • மந்திரம் நின்று விட்டால் சூரியன் அகக்கண்ணுக்குத் தெரியாது. உள்ளே சென்று விடும்.
    ஆத்ம ஜோதி அனைத்து ஜீவனிலும் பரவும். மேனி மினுமினுப்பாகும். முகம் தேஜஸ் பெறும், பரவும் ஜோதி வலது பக்கம் அதிகமாகும். வலது கைக்கு அந்த சக்தியுண்டு. வலது கையில் அக்னியிருப்பதால் மந்திரம் பலித்து சூரிய தரிசனம் பெறுபவர் வலது கையைத் தொங்க விடுவதில்லை. வலது கரம் கீழ் நோக்கினால் அங்குள்ள மந்திர சக்தி பூமியை நோக்கிப் போய் விரயமாகும்.
  • மந்திரம் ஜோதியாவதால், அதற்கெதிரான இருள் ஜோதி வளரும் பொழுது தானும் வளரும். அதனால் தவம், யோகம் செய்பவருக்கு அதிகக் கோபம் வரும்.
  • கோபம் இயலாமை.
  • குணம் தெளிவில்லாமலிருப்பதை மனிதன் அறிவதில்லை.
  • நேரம் வந்து தன்னையறிந்தால் சுயவுணர்வு குணத்தை அறியும்.
  • குணம் குறையானது என்பதை அறியும் நேரம் கோபம் வரும்.
  • பூரண யோகத்தில் சமர்ப்பணம் முதற்படி.
  • சமர்ப்பணம் செய்தால் கோபம் எழாது.
  • சமர்ப்பணம் தவறினால் கோபம் எழும்.
  • கோபம் ஆழ்மன (பாதாள) உணர்வு, மனிதனால் கோபத்தை அடக்க முடியாது.
  • அடக்கினாலும் அழிக்கவோ, மாற்றவோ, திருவுருமாற்றவோ முடியாது.
    பாதாளத்தின் கோபத்தை பரமாத்மாவின் (Superconscient) ஜோதி திருவுருமாற்றும்.
  • சமர்ப்பணத்தால் கோபம் திருவுருமாறும். எழும் கோபம் பரமாத்ம ஜோதியால் அழிக்கப்பட்டு, திருவுருமாற்றப்பட்டு தன் வலிமையை இழக்கும்.

*********



book | by Dr. Radut