Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆங்கிலம்: லெஸ்லி ஜேகப்ஸ்

தமிழாக்கம்: வித்யா ரங்கன்

திருத்தம்: ஸ்ரீ கர்மயோகி

 

XXVIII. Supermind, Mind and the Overmind Maya
Page 280
Para 9
28. சத்திய ஜீவியம், மனம், தெய்வீக மனத்தின் மாயை
We can regard the Powers of the Reality as so many Godheads.
இறை சக்திகளை நாம் பல தெய்வங்களாகக் கருதலாம்
If so, we can say that the Overmind releases a million Godheads.
அப்படியானால், தெய்வீக மனம் ஒரு மில்லியன் தெய்வ சக்திகளை வெளியிடுகிறது என்று கூறலாம்
It releases them into acti on.
அது அவைகளைச் செயலை மேற்கொள்ள வெளியிடுகிறது.
Each is empowered to create its own world.
ஒவ்வொன்றும் தன் சொந்த உலகை உருவாக்கும் உரிமை பெற்றுள்ளது.
Each world is capable of relati on and interplay with the others.
ஒவ்வொரு உலகமும் மற்றவைகளோடு தொடர்பும் இடைச் செயல்பாடும் எழுப்பும் திறன் கொண்டது.
There are in the Veda diff erent formulations of the nature of the Gods.
வேதத்தில் கடவுள்களின் தன்மைகள் வெவ்வேறாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன.
It is said they are all one Existence.
அவை ஒரே சச்சிதானந்தத்தைச் சேர்ந்தவை என்று கூறப்பட்டன.
The sages give different names to them.
ரிஷிகள் அவற்றிற்கு வெவ்வேறு பெயர்களை அளித்தனர்
Yet each God is worshipped as if he by himself is that Existence.
இருந்தாலும், ஒவ்வொரு கடவுளும் அதுவே சச்சிதானந்த என்பதைப் போன்று வழிபடப்பட்டது.
He is worshipped as one who is all the other Gods together.
அனைத்துக் கடவுள்களும் ஒன்று சேர்ந்த ஒன்றாக ஒரு கடவுள்
வழிபடப்படுகிறது.
Or as if he contains them in his being.
அல்லது ஒன்று பிறவற்றை அதனுள் கொண்டதாகக் கொள்ளப்படுகிறது.
And yet again each is a separate Deity.
இருந்தாலும் ஒவ்வொரு தெய்வமும் தனித்தனியானவை.
Someti mes one acts in unison with companion deities.
சில நேரங்களில் ஒன்று பிற தெய்வங்களுடன் இணைந்து
செயல்படுகிறது.
Sometimes separately, someti mes even in apparent opposition.
சில நேரங்களில் தனித்தும், சில நேரங்களில் வெளிப்படையாக
எதிர்த்தும் செயல்படுகின்றது.
They may act in opposition to other Godheads of the same Existence.
அவை ஒரே சச்சிதானந்தத்தைச் சேர்ந்த பிற தெய்வங்களுக்கு எதிராகச் செயல்படக் கூடியன.
In the Supermind all this would be held together.
சத்திய ஜீவியத்தில் இவை அனைத்தும் ஒன்றாக சேர்த்து வைக்கப்படுகின்றன.
It would be held as a harmonised play of the one Existence.
அவை சச்சிதானந்தத்தின் ஒரு சுமுகமான லீலையாக ஒருங்கிணைக்கப்படுகின்றன.
In the Overmind each of these three conditions could be a separate action.
தெய்வீக மனத்தில் இந்த மூன்று நிலைகளும் தனித்தனியான
செயலுக்குரியவை.
Each could have its own principle of development.
ஒவ்வொன்றும் அதன் சொந்த முன்னேற்றத்திற்கான தத்துவத்தைக் கொள்ள முடியும்
Each could have its own consequences.
ஒவ்வொன்றும் அதனதன் விளைவுகளைப் பெற முடியும்
And yet each could keep the power to combine with the others.
இருந்தாலும் ஒவ்வொன்றும் பிறவற்றோடு இணையக் கூடிய சக்தியையும் பெற்றிருக்கும்.
They could combine in a more composite harmony.
அவை வெகுவாகத் தொகுக்கப்பட்ட சுமுகத்தில் இணைய முடியும்.
As with the One Existence, so with its Consciousness and Force.
ஒன்றான சத்தைப் போல அதன் ஜீவியம் மற்றும் சக்தியிலும் இது ஏற்பட முடியும்.
The One Consciousness is separated into many independent forms.
ஒரு ஜீவியம் பலவாகப் பிரிந்து பல சுதந்திரமான ரூபங்களாகியது.
These forms of consciousness and knowledge follow out their own line of truth.
ஜீவியம் மற்றும் ஞானத்தின் இவ்வுருவங்கள் தம் சொந்த
வழிக்கான சத்தியத்தைப் பின்பற்றும்
It is the line of truth they have to realise.
இச்சத்தியத்தை அவை உணர வேண்டும்
The one total and manysided Real-Idea is split up into its many sides.
ஒரு முழுமையான மற்றும் பல பரிமாணங்கள் கொண்ட முழு
எண்ணம் அதன் பல பகுதிகளாகப் பிரிகிறது.
Each becomes an independent Idea-Force.
ஒவ்வொன்றும் ஒரு சுதந்திரமான எண்ணத்தின் சக்திகளாகின்றன.
Each has the power to realise itself.
ஒவ்வொன்றும் தம்மைத் தாமே உணரும் சக்தி கொண்டுள்ளன.
The one Consciousness-Force is liberated into its million forces.
ஒரு சித் சக்தி பல மில்லியன் சக்திகளாக விடுதலைபெறுகின்றது.
Each of these forces has the right to fulfil itself.
ஒவ்வொரு சக்தியும் தனித்தனியாகப் பூரணம் பெறும் உரிமை கொண்டது.
Or each has the right to assume, if needed, a hegemony.
அல்லது ஒவ்வொன்றும், தேவைப்பட்டால், ஒரு மேலாதிக்கத்தைப் பெறும் உரிமை கொண்டது.
Each may take up for its own utility the otherforces.
ஒவ்வொன்றும் தன் சொந்த உபயோகத்திற்குப் பின்
சக்திகளைப் பயன்படுத்தலாம்
So too the Delight of Existence is loosed out into all manner of delights.
இதேபோன்று ஆனந்தமும் தன்னை இழந்து பலவாகப் பிரிந்து பலதரப்பட்ட ஆனந்தமாகியது.
Each can carry in itself its independent fullness.
ஒவ்வொன்றிற்கும் அதன் தனிப்பட்ட முழுமை உண்டு.
Each carries its sovereign extreme.
ஒவ்வொன்றும் சர்வ சக்தி கொண்ட வல்லமையை அதிதீவிர
அளவில் தாங்கி நிற்கின்றன.
The One Existence-Consciousness-Bliss has the character of teeming infinite possibilities.
ஒரு சத், சித், ஆனந்தம் அபரிமித அனந்தமான சாத்தியங்களை இயல்பாகப் பெற்றுள்ளது.
This character is given to it by the Overmind.
இந்தக் குணத்தை தெய்வீக மனம் அதற்குத் தந்துள்ளது.
This can be developed into a multitude of worlds.
இதை எண்ணற்ற உலகங்களாக உருவாக்கலாம்
Or it can be thrown together into one world.
அல்லது இதை ஒரே உலகத்தில் சேர்த்தும் வைக்கலாம்
In that world the endlessly variable outcome of their play is the determinant of the creation.
அந்த உலகத்தின் சிருஷ்டியைச், சக்திகள் ஒன்றோடொன்று சேரும் லீலையால் எழும் முடிவற்ற, மாறும் தன்மையுள்ள பலன் நிர்ணயிக்கும்.
It is the determinant of its process, its course and its consequence.
Page 281
Para 10
அதன் செய்முறை, போக்கு மற்றும் அதன் பலன் இவற்றை அதுவே தீர்மானிக்கும்.
The Consciousness-Force of the eternal Existence is the universal creatrix.
சச்சிதானந்தத்தின் சித் சக்தி பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி.
Therefore the nature of a given world will depend on it.
அதனால் அதில் உருவான ஒரு உலகத்தின் இயல்பு அதைச் சார்ந்திருக்கும்.
It will depend on the self-formulati on of that Consciousness.
அந்த ஜீவியத்தின் சுயமான உருவகத்தை அது பொறுத்திருக்கும்
That formulati on will express itself in that world.
அந்த உருவகம் அவ்வுலகில் தன்னை வெளிப்படுத்தும்
Equally, for each individual being, that Consciousness has assumed a poise in him.
அதே அளவில், ஒவ்வொரு மனிதனிலும் அந்த ஜீவியம் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளது.
His seeing of himself or the world he lives in will depend on that poise.
அவன் தன்னை அல்லது தான் வாழும் இவ்வுலகைக் காண்பது
அந்த இடத்தைப் பொறுத்தது.
Our human mental consciousness sees the world in sections.
நம் மனித ஜீவியம் உலகைப் பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கிறது.
The sections are cut by the reason and sense.
அப்பகுதிகள் பகுத்தறிவாலும் புலனுணர்வாலும் வெட்டி
பிரிக்கப்படுகின்றன.
They are put together in a formation which is also sectional.
அவை அனைத்தும் ஒரு வடிவமாகச் சேர்க்கப்படுகின்றன, அதுவும் பகுதியே.
The house it builds is planned to accommodate one formulation of Truth.
அது எழுப்பும் அமைப்பு சத்தியத்தின் ஒரு ரூபத்திற்கு மட்டும் இடம் கொடுக்கும் தத்துவத்தைக் கொண்டது.
But it excludes the rest or admits some only as guests in the house.
அது மற்றவற்றை அவ்வமைப்பில் ஏற்பதில்லை அல்லது சிலவற்றை மட்டுமே விருந்தினராக ஏற்கிறது.
Overmind Consciousness is global in its cognition.
தெய்வீக மனத்தின் அறிவாற்றல் பிரபஞ்சமயமானது.
It can hold any number of seemingly fundamental differences together.
அதனால் எண்ணற்ற அளவு தோற்றத்தில் அடிப்படையில்
வேறுபட்டுத் தோன்றுபவைகளைப் பற்ற முடியும்
It can hold them in a reconciling vision.
அது ஒன்றோடொன்று சமரசம் கொள்ளும் நோக்கில் அவைகளைப் பற்ற முடியும்.
Thus the mental reason sees Person and the Impersonal as opposites.
இதனால் பகுத்தறிவு மனிதனையும் இறைவனையும் எதிரெதிராகப் பார்க்கிறது.
It conceives an impersonal Existence.
அது சச்சிதானந்தத்தைப் பொதுவான ஒன்றாகப் புரிந்து கொள்கிறது.
In that Existence person and personality are fictions of the Ignorance.
அந்த சச்சிதானந்தத்தில், மனிதனும் அவன் தனித்தன்மையும்
அறியாமையின் கற்பனைகள்.
Or they are temporary constructions.
அல்லது அவை தாற்காலிகமான அமைப்புகள்.
Or, on the contrary, it can see the Person as the primary reality.
அல்லது, மாறாக, அது மனிதனை ஆரம்பநிலை சத்தியமாக பார்க்க முடியும்.
And it sees the impersonal as a mental abstraction.
மேலும் அது பொதுவானதை மனத்தின் ஒரு கருத்தாக பார்க்கிறது.
It sees the impersonal as only a means of manifestation.
அது பொதுவானதை ஒரு வெளிப்பாட்டிற்கான கருவியாக
மட்டுமே காணும்.
To the Overmind intelligence these are separable Powers.
தெய்வீக மனத்தின் அறிவிற்கு இவை பிரிக்க முடியும் சக்திகள்.
They are powers of the one Existence.
இவை ஒன்றான சச்சிதானந்தத்தின் சக்திகள்.
They can pursue their independent self-affirmation.
அவை அவற்றின் சுயமான சத்தியத்தை சுதந்திரமாக பின்பற்ற முடியும்.
They can also unite together their different modes of action.
அவை பலதரப்பட்ட தம் செயல்முறைகளை ஒன்று சேர்க்கவும் முடியும்.
They can create different states of consciousness.
அவை பல்வேறு ஜீவிய நிலைகளை உருவாக்க முடியும்
They can do this both in their independence and in their union .
இதை பிரிந்த நிலையிலும் ஐக்கியத்திலும் அவை செய்ய முடியும்.
They can do so in their being.
அவை தம் ஜீவனில் இதைச் செய்ய முடியும்
They can be all valid and capable of coexistence.
அவை அனைத்தும் முறையானவை, பிறவற்றோடு சேர்ந்து
இருக்கும் திறன் கொண்டவை.
A purely impersonal existence and consciousness is true and possible.
தூய்மையான தனித்தன்மை அற்ற பொதுவான ஜீவன் மற்றும் ஜீவியம் உண்மையானது மற்றும் சாத்தியமானது.
But also an enti rely personal consciousness and existence.
அது போல் முற்றிலும் தனித்த ஜீவியம் மற்றும் ஜீவனும் உண்மையானது மற்றும் சாத்தியமானது.
The Impersonal Divine is Nirguna Brahman.
இறைவனின் தனித்தன்மை இழந்த பொதுவான நிலை நிர்க்குண பிரம்மம் எனப்படும்
The Personal Divine is Saguna Brahman.
இறைவனின் தனித்தன்மை பெற்ற நிலை அனைத்து குணங்களையும் பெற்ற சகுணப் பிரம்மம் எனப்படும்
They are here equal and coexistent aspects of the Eternal.
இவை இங்கு இறைவனின் சமமான, சேர்ந்து வதியும் அம்சங்கள்.
Impersonality can manifest with person.
மனிதனில் பொதுத்தன்மை வெளிப்பட முடியும்
The person is subordinated to it as a mode of expression.
மனிதன் அப்பொதுத்தன்மைக்கு உட்பட்டு அதை
வெளிப்படுத்தும் ஒரு கருவியாவான்.
But equally Person can be the reality with impersonality as a mode of its nature.
பொதுத்தன்மையை இயல்பாகக் கொண்ட சத்தியத்தின் ரூபமாக மனிதன் மாற முடியும்
Both aspects of manifestation face each other.
இறை வெளிப்பாட்டின் இரு அம்சங்களும் ஒன்று மற்றதை நோக்கியுள்ளது.
They do so in the infi nite variety of conscious Existence.
அவை சத்தின் அனந்தமான வகைகளில் அதைச் செய்கிறது.
There are irreconcilable differences that present to the mental reason.
பகுத்தறிவுக்கு சமரசம் செய்ய இயலாத வேறுபாடுகளாக அவை உள்ளன.
The same are to the Overmind intelligence coexistent correlati ves.
தெய்வீக மனத்தின் அறிவுக்கு அவை உடனுறையும் தொடர்புள்ள ஒன்றாக உள்ளன.
There are contraries to the mental reason.
பகுத்தறிவுக்கு அவை எதிரானவை.
The same to the Overmind are intelligence
complementaries.
அவை தெய்வீக மனத்திற்கு ஒன்று மற்றதை நிறைவு செய்யும்
அறிவுத்திறன் கொண்ட காரணிகளாகும்.
Our mind sees that all things are born from Matter.
ஜடத்திலிருந்து அனைத்தும் உருவானதாக நம் மனம் பார்க்கிறது.
All things exist by material energy, go back into it.
ஜட சக்தியால் அனைத்தும் ஜீவிக்கின்றன, அதை மீண்டும்
சென்றடைகின்றன என்று அது பார்க்கிறது.
It concludes that Matter is the eternal factor.
இதனால் ஜடம் என்பது சாசுவதமான காரணி என்று அது முடிவு செய்கிறது.
It sees Matter as the primary and ultimate reality, Brahman.
அது ஜடத்தை முதலும் முடிவானதுமான சத்தியமான பிரம்மமாகக் காண்கிறது.
Or it sees all as born of Life-Force or Mind.
அல்லது அனைத்தும் பிராண சக்தி அல்லது மனத்திலிருந்து
உருவானதாகக் காண்கிறது.
It sees all existing by Life or by Mind.
அனைத்தும் வாழ்வு அல்லது மனத்தால் உலகில் இருப்பதாக பார்க்கிறது.
It sees all going back into the universal Life or Mind.
அனைத்தும் பிரபஞ்ச வாழ்வை அல்லது மனத்தை மீண்டும் சென்றடைவதாகக் காண்கிறது.
It concludes that this world is a creation of the cosmic Life-Force.
இவ்வுலகம் பிரபஞ்சத்தின் பிராண சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளதாக முடிவு செய்கிறது.
Or it is a creation of a cosmic Mind or Logos.
அல்லது பிரபஞ்ச மனம் அல்லது அதன் சின்னங்களின் படைப்பாகக் காண்கிறது.
Or again it sees the world as born of, existing by and going back to the Real-Idea.
அல்லது மீண்டும், இவ்வுலகம் முழு எண்ணத்தால் உருவாகி, அதனால் வாழ்ந்து, திரும்ப அதை அடைவதாக எண்ணுகிறது.
It goes back to the Real-Idea or Knowledge-Will of the Spirit.
அது முழு எண்ணம் அல்லது ஆன்மாவின் ஞான உறுதியை மீண்டும் அடைகிறது.
Or it goes back to the Spirit itself.
அல்லது அது ஆன்மாவுக்கே திரும்புகிறது.
And it concludes on an idealisti c or spiritual view of the universe.
மேலும் அது பிரபஞ்சத்தின் லட்சிய அல்லது ஆன்மிக நோக்கத்தை முடிவாகக் கருதுகிறது.
It can fix on any of these ways of seeing.
அது இவற்றில் எவ்விதமான பார்வையையும் முடிவாகக் கருத முடியும்.
But to its normal separative vision each way excludes the others.
ஆனால் அது ஒன்றை முடிவு செய்வது, அதன் இயல்பான பிரிந்த பார்வையால் மற்றவற்றை விலக்கும்
Overmind consciousness perceives that each view is true.
தெய்வீக மனம் ஒவ்வொரு பார்வைக்கோணத்தையும்
உண்மையாக அறியும்.
Each is true of the action of the principle it erects.
அது எழுப்பும் ஒவ்வொரு தத்துவத்தின் செயல்பாடு உண்மை.
It can see that there is a material world-formula.
ஜட உலகின் சூத்திரம் இருப்பதை அது பார்க்க முடியும்
It can see a vital world-formula.
பிராண உலக சூத்திரத்தை அது காண முடியும்
It can also see a mental world-formula and a spiritual world formula.
மன உலகம் மற்றும் ஆன்மிக உலகத்தின் சூத்திரத்தையும் கூட அது பார்க்க முடியும்.
Each can predominate in a world of its own.
அதனதன் உலகத்தில் அவை ஆதிக்கம் செலுத்த முடியும்
At the same time all can combine in one world as its constituent powers.
அதே நேரத்தில் அனைத்தும் ஒரு உலகத்தில் அதன் அம்சங்களின் சக்திகளாக இணைய முடியும்
To the Overmind view there is a normal and easily realizable creation.
தெய்வீக மனத்தின் பார்வைக்கு சிருஷ்டி ஒரு சாதாரண மற்றும் எளிதாக உணரக்கூடியது.
There is an apparent Inconscience.
அங்கு தோற்றமான ஜட இருள் உண்டு.
It conceals in itself a supreme Conscious-Existence.
அது தன்னுள் ஒப்புயர்வற்ற சச்சிதானந்தத்தை மறைத்து
வைத்துள்ளது.
The creati on is a self-formulation of Conscious Force.
சிருஷ்டி என்பது சித் சக்தியின் சுய உருவாக்கம்
Our world is based on it.
நம் உலகம் அதை அடிப்படையாகக் கொண்டது.
It holds all the powers of Being together in its inconscient secrecy.
அது சத்தின் அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து தன் இருளில் மறைவாக வைத்துள்ளது.
It is a world of universal Matter.
அது ஜடப் பிரபஞ்ச உலகம்.
It realizes in itself Life, Mind, Overmind, Supermind, Spirit.
அது தன்னுள் வாழ்வு, மனம், தெய்வீக மனம், சத்திய ஜீவியம் ஆன்மா இவற்றை உணர்கிறது.
Each of them in its turn takes up the others as means of its self-expression.
ஒவ்வொன்றும் அதனதன் முறைகளில் மற்றவற்றைத் தன் சுகம் வெளிப்பாட்டின் கருவியாகப் பயன்படுத்துகிறது.
There is a spiritual vision of Matter.
அங்கு ஜடம் ஆன்மாவாகக் காட்சியளிக்கும்
In it, Matter proves to have been always a manifestation of the Spirit.
அதில் ஜடம் எப்போதும் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக உள்ளதை உறுதிப்படுத்துகிறது.
Overmind is a power of originati on.
தெய்வீக மனம் சக்தியின் பிறப்பிடம்
In the process of its executive dynamis it is an organiser.
அது தன் செயலாற்றும் சக்தியின் மூலம் ஒழுங்கமைப்பு செய்கிறது.
It organises many potenti alities of Existence.
சத்தின் பலதரப்பட்ட திறன்களை அது முறைப்படுத்துகிறது.
Each affi rms its separate reality.
ஒவ்வொன்றும் தம் தனித்த சத்தியத்தை உறுதி செய்கின்றன.
But all are capable of linking themselves together.
ஆனால் அனைத்தும் தம்மை ஒன்றாக ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவை.
They link together in many diff erent but simultaneous ways.
அவை வெவ்வேறான விதத்தில் ஆனால் ஒரேநேரத்தில் தம்மை ஒருங்கிணைக்கின்றன.
Overmind is a magician, a craftsman.
தெய்வீக மனம் ஒரு மாயக்காரன், கைவினைஞன்.
It is empowered to weave the multi coloured warp and woof of manifestation.
அது பல்வகை வண்ணங்களாலான இழைகளால் சிருஷ்டியை
நெய்து உருவாக்கும் சக்தி படைத்தது.
It weaves a single entity in a complex universe.
Contd...
ஒரு தனித்த ஜீவனை அது சிக்கலான பிரபஞ்சத்தில் நெசவு செய்கிறது.
தொடரும்…

 

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்

இறைவன் இரவும் பகலும் இடைவிடாது செயல்படுவது அற்புதம். மனிதன் அவற்றைப் பெரும்பாலும் அற்புதமாகவே அனுபவிக்கிறான். ஆனால், அவன் மனத்தில் இறைவன் செயல்படுவதில்லை. அருள் மனிதனை நாடி வரும் பொழுது, மனிதன் சுவையை விரும்பி நாடத் தவறுவதில்லை. இறைவனைப் பொறுத்தவரை மனிதன் நாடும் சுவையும் அருளின் அம்சமாகும். தான் விரும்பி நாடும் சுவையின் பலன் மனிதனுக்கு இனிக்கும். கசப்பதும் உண்டு. இறைவனுக்கு இனிப்பு விருப்பம். கசப்பை இறைவன் உயர்ந்த இனிப்பாக நாடுகிறான். மனிதன் இனிப்பாகக் கருதும் இனிப்பையே இறைவன் அவனுக்கு அருளாக விரும்பி வழங்குகிறான். அன்னை இறைவனின் இனிப்பான அருளை இதமாக, உயர்வாக, நம்மை அரவணைத்து, நம் மனம் ஏற்றுப் போற்றும் வகையில் அளித்தபடியிருக்கிறார். அதற்காக அவதாரம் எடுத்தவரே அன்னை.

மனிதனுடைய சுயநலமான ஆசைகளைப் பூர்த்தி செய்வதைத் தம்

பரநலமான இலட்சியமாகக் கொண்டவர் அன்னை.

**********

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகவானும் அன்னையும் தாம் ஏற்ற யோகத்தில் அகந்தையை வென்றனர். என்றாலும் உலகில் அகந்தையைத் தாம் ஏற்றதால் அதன் வேதனையை அனுபவித்தனர். ஆனால் மற்றவர்களுக்கு அவ்வாறில்லை. அன்னையிடம் வந்த பிறகு எல்லாச் செயல்களும் தாமாகக் கூடிவருகின்றன. மிகப் பெரியவை வாழ்வில் நிகழ்கின்றன என்பது அன்பர் அனுபவம். முயற்சியின்றி காரியங்கள் நடக்கும் பொழுது பொறுப்பும் நம்முடையது இல்லை எனத் தெரியும். அன்னையால் செயல்கள் நடக்கும்போது ஆனந்தம் முதலிலேயே வந்து விடுகிறது. செயல் நடைபெறும்போதும், மேலும் நடந்த பின்னரும், ஆனந்தமயமாக இருக்கும். உலகம் ஆனந்தத்தால் படைக்கப்படுகிறது; செயல்கள் ஆனந்தத்தால் இயங்குகின்றன; முடிவாக ஆனந்தத்தை நாடுகின்றன என்கிறது உபநிஷதம். இது குறிப்பது சச்சிதானந்தப் பேரின்பம் (Bliss). ஸ்ரீ அரவிந்தர் சொல்வது பேரின்பத்தை விடவும் பெரியதான, சிருஷ்டியின் ஆனந்தமாகும் (Delight).

மேல் உலகத்தின் பேரின்பத்தை நம் வாழ்வில் வெளிப்படுத்த,
சச்சிதானந்தம் முயல்வதையே சிருஷ்டியின் ஆனந்தம் குறிக்கிறது.

**********



book | by Dr. Radut