Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

103. ஜீவியம் நிறைந்து வழி விடுவது.

  • துணி கிழியும் சப்தம் - உடலின் ஜீவியம் வழிவிடுவதாகும்
  • இது பகவான் கூறியது.
  • மனம், உயிர், உடல் அடுக்கடுக்கானவை.
  • சுமங்கலி நல்ல சகுனம்; நிறை குடம் நல்ல சகுனம்: சுமங்கலியின் நிறைகுடம் பெரிய நல்ல சகுனம்.
  • நாம் அதை கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும், சகுனம் தன் வேலையைச் செய்யும்.
  • சகுனத்தை அறிந்து அதன்படி செயல்படுபவன், ஆன்மிக முன்னேற்றம் பெறுவான்.
  • மனத்தின் ஜீவியம் நிறைந்து உணர்வின் ஜீவன் திறக்க வழி விடுவது சகுனம் தெரிவது.
  • டார்சியை லிஸ்ஸி திட்டுவது அவனுக்குக் கசப்பாக இல்லை. இது உயிரின் ஜீவன் ஆன்மிக விழிப்பால் நிறைந்து உடலின் ஜீவன் திறக்க வழி விடுவது.
  • வழி விடுவது என்பது ஓட்டர் MLA ஆவது.
  • பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்திலிருந்து, பிரபஞ்சம், தெய்வ லோகம், யோகியின் லோகம், ரிஷியின் லோகம், முனிவர் லோகம், மனம், வாழ்வு, ஜடம் என ஒன்பது லோகங்களுண்டு. ஒன்று அடுத்த லோகத்திற்கு வழி விடும் நிலை ஏராளம்.
  • விவசாயம், வியாபாரம், உத்தியோகம் ஜடமான முதல் நிலை.
  • எளிமையான வேலையானாலும் அதன் மூலம் பணம் பெறலாம், செல்வாக்கு பெறலாம், பிரபலம் பெற்று பதவி பெறலாம். வாழ்வு ஜடத்திற்கு வழி விடுவது இது.
  • இதே உயர்வை படிப்பு, ஜோஸ்யம், சங்கீதம், அரசியல், பாதுகாப்பு தரும் திறமை, கோர்ட்டில் வழக்காடும் திறன், வைத்தியம் போன்றவை மூலம் பெறுவதும் இதே வழிவிடுவதாகும்.
  • வழி விடுவது மேலே போகும், கீழேயும் போகும்.
  • இவற்றையெல்லாம் கடந்த சிறப்புடையது நாணயம்.
  • இதை ராசி, நல்ல ராசி, கெட்ட ராசி என்பது ஊர் வழக்கு.
  • 300; 400 ஆண்டுகட்குமுன் இருளால் கவ்வப் பட்டிருந்த உலகம் இன்று ஒளியால் லேசாக நிரம்பியுள்ளது.
  • அன்று ஆதரவற்றவர் அழிக்கப்படுவர்.
  • அவர்கள் அழிவைத்தடுக்க நேர்மையாக, நாணயமாக, சட்டப்படி, எவரும் குறை கூற முடியாதபடி நடக்க வேண்டும்.
  • ஆதரவு, பதவி, பணமுள்ளவர் எந்தத் தவறு செய்தாலும் உலகம் ஏற்கும். ‘எந்தத் தவற்றையும் செய்வேன்’ என்ற மனநிலை சமூக அந்தஸ்தைக் குறிக்கும்.
  • அந்த நாட்களில் இங்கிலாந்தில் ஆப்பிள் தோட்டத்தில் ஒரு பழம் திருடிய சிறுவனுக்குக் கையை வெட்டி விடுவார்கள். கல்லூரி மாணவர்கள் கூடையாகப் பழம் பறித்தாலும் “இப்படிச் செய்யலாமா?” எனக் கண்டிப்பார்கள். அதற்கு தர்மம், நியாயம், தர்ம நியாயம் எனப் பெயர்.

*********

ஜீவிய மணி
 
திட்டும் பெண் கிட்டும் அதிர்ஷ்டம்.
 



book | by Dr. Radut